தயாரிப்பாளராகி சன்னி லியோனுடன் ஆட்டம் போடும் நடிகர் விஷ்ணு மஞ்சு

தயாரிப்பாளராகி சன்னி லியோனுடன் ஆட்டம் போடும் நடிகர் விஷ்ணு மஞ்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு மஞ்சு.

இவர் தயாரிப்பாளர் தொழிலதிபர் என பன்முக திறன் கொண்டவராகவும் வலம் வருகிறார். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய தரமான திரைப்படங்களில் நடித்து வருவதோடு, ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை விஷ்ணு மஞ்சு தொடங்கியுள்ளார்.

இந்நிறுவனம் மூலம் திறமை மிக்க புதியவர்களுக்கு வாய்ப்பளிப்பதோடு, வித்தியாசமான முயற்சிகள் மற்றும் புதிய சிந்தனைகளுக்கு வாய்ப்பளித்து ஊக்கம் அளிக்க விஷ்ணு மஞ்சு முடிவு செய்துள்ளார்.

மேலும், இந்நிறுவனம் மூலம் திரைப்படங்கள் தயாரிப்பு மட்டும் இன்றி இணைய தொடர்கள், ஆவணப்படங்கள், டாக்குமெண்டரி மற்றும் சர்வதேச தரத்திலான குறும்படங்கள் தயாரிப்புகளில் ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் ஈடுபட உள்ளது.

ஏ வி ஏ எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் முதல் படமே மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமான ஃபான் இந்தியா திரைப்படமாக உருவாகுகிறது.

விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சன்னி லியோன், பயல் ராஜ்புட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என நான்கு மொழிகளில் உருவாகும் இப்படம் விஷ்ணு மஞ்சுவின் 19 அது திரைப்படமாகும்.

இந்த புதிய நிறுவனம் வரும் இன்று ஜூன் 10 ஆம் தேதி ஆரம்பமாக உள்ளது. திரைப்பட தயாரிப்பில் ஈடுபட உள்ள இந்த நிறுவனத்துடன், ஏ வி ஏ மியூசிக் மற்றும் ஏ வி ஏ ஸ்டுடியோஸ் என்ற நிறுவனங்களையும் விஷ்ணு மஞ்சு தொடங்குகிறார்.

ஏ வி ஏ மியூசிக் நிறுவனம் மூலம் சுயாதீன தனி இசை பாடல்கள், இசை ஆல்பங்கள் மற்றும் தரமான மற்றும் ரசிகர்களுக்கான இசை படைப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

ஏ வி ஏ ஸ்டுடியோஸ் மூலம் சினிமா துறைக்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதோடு, தொழில்நுட்ப ரீதியிலான தரம் மிக்க திரைப்படங்களை உருவாக்கி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

ஏ வி ஏ நிறுவனம் மூலம் ஒட்டு மொத்த பொழுதுபோக்கு துறையில் புதிய புரட்சியை ஏற்படுத்த வரும் ஏ வி ஏ நிறுவனம் பற்றிய மேலும் பல தகவல்களை நிறுவனத்தின் தொடக்க நாளான ஜூன் 10ஆம் தேதி வெளியிட உள்ளனர்.

Sunny Leone and Vishnu Manchu joins for a new film

ஜெயம் ரவி பிரியா தன்யா இணைந்துள்ள ‘அகிலன்’ படத்தின் அதிர வைக்கும் டீஸர்

ஜெயம் ரவி பிரியா தன்யா இணைந்துள்ள ‘அகிலன்’ படத்தின் அதிர வைக்கும் டீஸர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘பூலோகம்’ படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணன் மற்றும் ஜெயம் ரவி கூட்டணியில் புதிய படம் உருவாகியுள்ளது.

‘அகிலன்’ என்ற இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தில் தான்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்திருக்கின்றனர்.

சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படம் வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நிச்சயம் அதிகரிக்கும் என நம்பலாம்.

Jayam Ravi starrer Agilan official trailer is out now

ரோலக்ஸ் எஃபெக்ட் : லோகேஷ் இயக்கத்தில் விஜய்யுடன் இணையும் தனுஷ்

ரோலக்ஸ் எஃபெக்ட் : லோகேஷ் இயக்கத்தில் விஜய்யுடன் இணையும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்‘ படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இதனால் கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதனால் சூர்யா குடும்பத்தினரும் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.

இது விக்ரம் 3 திரைப்படத்திற்கான லீடு கேரக்டர் என கூறப்படுகிறது.

இதனிடையில் ‘விக்ரம்’ படத்தை முடித்துவிட்டு விரைவில் தளபதி 67 படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இதன்மூலம் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணி ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைகிறது.

இந்த நிலையில் ரோலக்ஸ் சார் கதாபாத்திரம் போல தளபதி 67 படத்திலும் மிகப்பெரிய ட்விஸ்ட் கேரக்டர் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளாராம் லோகேஷ்.

இந்த கேரக்டரில் நடிக்க தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இது யார் கொளுத்தி போட்ட செய்தியோ.? ஆனால் பயங்கர வைரல் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

Rolex Effect: Dhanush joins Vijay in Lokesh direction

‘ஹே சினாமிகா’ படத்தை அடுத்து ஆக்சன் படத்தை இயக்கும் டான்ஸர் பிருந்தா

‘ஹே சினாமிகா’ படத்தை அடுத்து ஆக்சன் படத்தை இயக்கும் டான்ஸர் பிருந்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய திரையுலகில் பல மொழிகளிலும் அனைத்து நடிகர் நடிகைகளுடன் ஆயிரத்திற்கும் மேலான படங்களில் பணியாற்றிய நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர், முதன் முதலாக ஆக்ஷன் கலந்த ரா மற்றும் ரியல் படத்தை இயக்குகிறார்.

(ஏற்கெனவே துல்கர், காஜல், அதிதி ராவ் நடித்த ‘ஹே சினாமிகா’ படத்தை இயக்கியவர் பிருந்தா என்பது குறிப்பிடத்தக்கது.)

இப்படத்தின் டைட்டில் லுக்கை இன்று மாலை 6 மணி அளவில் முன்னணி நட்சத்திர நடிகர்களான விஜய் சேதுபதி, ஆர்யா, ராணா, நிவின் பாலி, அனிருத் ரவிசந்தர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பல கலைஞர்களுடன் லோகேஷ் கனகராஜ், தேசிங்கு பெரியசாமி ஆகிய இயக்குநர்களும், முன்னணி திரைப்பட விமர்சகர்களான தரன் ஆதர்ஷ் மற்றும் ஸ்ரீதர் பிள்ளை ஆகியோர் வெளியிடுகிறார்கள்.

தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம்* ஆகிய மொழிகளிலும் இந்த திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

இந்தப்படத்தை *ஹெச். ஆர். பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் இன்று மாலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என படத்தை தயாரிக்கும் *ஹெச் . ஆர். பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கூடுதல் தகவல் சற்றுமுன்..:

‘ தக்ஸ்’ என படத்தின் தலைப்புக்கு ஏற்றபடி குமரி மாவட்டத்தை களப்பின்னணியாகக் கொண்ட யதார்த்தமான ஒரு ஆக்சன் கதையை இயக்குகிறார் பிருந்தா மாஸ்டர். கதைக்கு ஏற்ற வகையில் நடிகர்களையும் அவரே நேரடியாக தேர்வு செய்திருக்கிறார்.

அமேசான் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் வலைதள தொடர் ஒன்றிலும் , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பாலிவுட் நடிகர் விக்ராந்த் மாஸே ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் ‘மும்பைகார்’ எனும் ஹிந்தி படத்தில் நடித்தவருமான நடிகர் ஹிர்ருது ஹாரூன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருடன் நடிப்பில் தேசிய விருது பெற்று, அனைத்து கதாபாத்திரங்களிலும் தம்மை பொருத்திக்கொள்ளும் நடிகரான சிம்ஹா முழு ஆக்ஷனுடன் பிருந்தா மாஸ்டருடன் கரம் கோர்க்கிறார்.

மேலும் இயக்குநர் பாலா அறிமுகப்படுத்தி, பல கதாபாத்திரங்களில் நடித்து, நம்மை கவர்ந்த நடிகர் ஆர். கே. சுரேஷ், தக்ஸுகளை எதிர்த்து போரிடும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

இவருடன் ‘ராட்சசன்’, ‘மாநகரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து, குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி, நம்மை கவர்ந்த நடிகர் முனீஸ்காந்த், ‘தக்ஸ்’ கூட்டத்தில் ஒருவராக களம் இறங்குகிறார்.

இவர்களைத் தவிர இன்னும் ஏராளமான மண்ணின் மைந்தர்களை ‘தக்ஸ்’ கூட்டத்தில் பிருந்தா மாஸ்டர் அறிமுகப்படுத்துகிறார்.

மேலும் நடிகர் அப்பாணி சரத், நடிகைகள் அனஸ்வரா ராஜன் மற்றும் ரம்யா சங்கர் ஆகியோரும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

பிரியேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, சாம் சி. எஸ். இசையமைக்கிறார். பட தொகுப்பு பணிகளை பிரவீன் ஆண்டனி மேற்கொள்கிறார்.

ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால் ‘ தக்ஸ் ‘ படத்தில் மூன்று பிரபலமான முன்னணி சண்டை பயிற்சி இயக்குநர்கள் பணியாற்றுகிறார்கள்.

இந்தப் படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக முத்து கருப்பையா பணியாற்ற, யுவராஜ் நிர்வாக தயாரிப்பாளராகவும், மக்கள் தொடர்பாளராகவும் பணியாற்றுகிறார்.

தமிழைத் தவிர்த்து தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இந்நிறுவனம் தமிழில் வெளியாகி, வசூலில் வெற்றியைப் பெற்ற ‘விக்ரம்’ மற்றும் ‘ஆர். ஆர். ஆர்.’ ஆகிய படங்களை கேரளாவில் விநியோகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது குமரி மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா நடித்த படத்திற்காக இமான் இசையில் பாடிய யுவன் சங்கர் ராஜா

ஆர்யா நடித்த படத்திற்காக இமான் இசையில் பாடிய யுவன் சங்கர் ராஜா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா & ஐஸ்வர்ய லட்சுமி இணைந்து நடித்துள்ள படம் ‛கேப்டன்’.

ஏற்கெனவே சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்த படம் ‘டெடி’.

‘கேப்டன்’ படம் ஏலியன் கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

இதில் ஆர்யாவுடன் சிம்ரன், ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் இமான் இசையில் ஒரு பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

மதன் கார்க்கி இந்த பாடலுக்கான வரிகளை எழுதியுள்ளார்.

இதனையடுத்து சாங் போது எடுக்கப்பட்ட போட்டோவை பகிர்ந்துள்ளார் இமான்.

ஏற்கெனவே இமான் இசையில் ‘டிக் டிக் டிக்..’ படத்தில் ஒரு பாடலை பாடி உள்ளார் யுவன்.

அதுபோல வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘பிரியாணி’ படத்தில் யுவன் இசையில் இமானும் பாடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘கைதி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தவரை ‘விஜய் 67’ படத்தில் இயக்கும் லோகேஷ்.?

‘கைதி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தவரை ‘விஜய் 67’ படத்தில் இயக்கும் லோகேஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் ‘விக்ரம்’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

இந்தப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தன் ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடினார்.

அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அப்போது ஒரு ரசிகர் உங்கள் அடுத்த படங்களில் மன்சூர் அலிகான் நடிப்பை எதிர்பார்க்கலாமா எனக் கேள்வி கேட்டார்.

இதற்கு லோகேஷ் கனகராஜ் ‘விரைவில்…’ என பதிலளித்துள்ளார்.

எனவே விரைவில் லோகேஷ் இயக்கும் படத்தில் மன்சூர் அலிகான் நடிப்பது உறுதியாகியுள்ளது.

விரைவில் விஜய்யின் ‘தளபதி 67’ படத்தை
லோகேஷ் இயக்கவுள்ளார். எனவே மன்சூர் அலிகான் அந்த படத்தில் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

லோகேஷ் இயக்கிய ‘கைதி’ படத்தில் முதலில் நாயகனாக நடிக்க இருந்தவர் மன்சூரலிகான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகே படத்தில் நாயகனாக கார்த்தி நடித்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

More Articles
Follows