‘குக் வித் கோமாளி’ டைட்டில் வின்னர் வீட்டுக்கே சென்ற சிம்பு மஹத் ரக்சன்

‘குக் வித் கோமாளி’ டைட்டில் வின்னர் வீட்டுக்கே சென்ற சிம்பு மஹத் ரக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

STR Mahath Rakshan (2)விஜய் டிவியில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகளில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சி இறுதிப் போட்டி ஏப்ரல் 14 அன்று நடைபெற்றது.

இந்த போட்டி டைட்டிலை டைரக்டர் அகத்தியனின் மகள் கனி வென்றார்.

அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேயின்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் நடிகர் சிம்பு.

அப்போது கனியிடம் உங்கள் கார குழம்பை சாப்பிட ஆசை என கூறினார் சிம்பு.

இந்த நிலையில், சிம்பு, மகத் மற்றும் ரக்‌ஷன் ஆகிய மூவரும் கனியின் வீட்டிற்கு சென்று அவருடைய காரக்குழம்பை ரசித்து சாப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து கனியின் கணவர் இயக்குனர் திரு அவர்கள் தன் ட்விட்டரில்…

‘சிம்பு, மகத் மற்றும் ரக்‌ஷன் ஆகிய மூவரும் தங்களுடைய வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி.

அவர்களது வருகை ஆச்சரியம் அளித்தது.

கனியின் காரக்குழம்பை அவர்கள் சாப்பிட்டு ரசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார் திரு.

STR’s surprise visit to Cooku with comali title winner Kani

விவேக் மரணம்.: ‘மாநாடு’ ஸ்பாட்டில் சொன்னதை செய்து காட்டிய சிம்பு டீம்

விவேக் மரணம்.: ‘மாநாடு’ ஸ்பாட்டில் சொன்னதை செய்து காட்டிய சிம்பு டீம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Maanaadu (1)கடந்த ஏப்ரல் 17ஆம் தேதியன்று . அதிகாலை நடிகர் விவேக் (மாரடைப்பால்) காலமானார்.

அன்றைய தினம் விவேக்குக்கு அஞ்சலி செலுத்த நேரில் வராவிட்டாலும் இரங்கல் தெரிவித்து இருந்தார் நடிகர் சிம்பு.

அந்த இரங்கல் அறிக்கையில்…:

“அன்பு அண்ணன், நம் சின்னக் கலைவாணர், இன் முகம் மாறாத மனிதர், எல்லோரிடமும் இயல்பாகப் பழகுபவர், கணக்கற்ற மரக்கன்றுகளை நட்டு காற்றுக்கு ஆக்சிஜனை சுவாசிக்கக் கொடுத்தவர் இன்று மூச்சற்றுவிட்டார் என்ற பெருந்துயர் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.

சைக்கிளிங், உடற்பயிற்சி, யோகா, இசையென மிக ஆரோக்கியமான முன்னுதாரணமாக நான் ஆச்சரியப்படும் மனிதர் நடிகர் விவேக் சார்.

பண்பாளர். இவ்வளவு சீக்கிரம் இழப்போமென்று கனவிலும் நினைத்ததில்லை.

தமிழ் சினிமாவில் எங்கெங்கு முடியுமோ அங்கெல்லாம் பகுத்தறிவு கருத்துகளைப் போதித்து வந்தார்.

மரங்களை நடுங்கள் என அய்யா அப்துல் கலாம் காட்டிய வழியை இளைஞர்கள் மத்தியில் விரைவாகக் கொண்டு சென்று செயல்படுத்திய செயல் வீரர். பத்மஸ்ரீ விருதுக்குப் பொருத்தமானவராக நிறைந்திருந்தார்.

அவர் மறைந்தாலும், அவர் செய்து சென்றிருக்கிற செயல்கள் அவரை என்றும் நகைச்சுவை நடிகராக, கருத்தாழம் மிக்க மனிதராக நிலைத்திருக்க வைக்கும். நம்மிடையே நிலைத்திருப்பார். என்மீது மிகுந்த அக்கறை கொண்டவர்.

எப்போதும் என் நல்லது, எடுக்கும் முயற்சிகள் பற்றி விசாரித்துக் கொண்டேயிருப்பார். அவருக்கு நாம் செய்ய வேண்டியது, அவர் செய்து வந்ததை நாம் தொடர்ந்து செய்வதுதான் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும்.

நான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, மரக்கன்று வைக்க இருக்கிறேன். சின்னக் கலைவாணரை நேசிக்கும் ஒவ்வொருவரும் குறைந்த பட்சம் ஒரு மரக்கன்று நட்டு அவரது இதயத்துக்கு நெருக்கமான அஞ்சலியைச் செலுத்துவோம் என அன்போடு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.இதய அஞ்சலிகள் விவேக் சார்”

இவ்வாறு சிலம்பரசன் தெரிவித்து இருந்தார்.

அதன்படி இன்று ஏப்ரல் 21ஆம் தேதி ‘மாநாடு’ சூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு உள்ளிட்ட இப்பட குழுவினர் மரக்கன்றுகளை நட்டனர்.

சொன்னதை செய்தார் சிம்பு.. வாழ்த்துக்கள்

Team Maanaadu Planted trees in shooting spot in memory of Actor Vivek

மாப்பிள்ளை தாடி வச்சா கல்யாணத்துக்கு வரமாட்டோம்..; காரைக்கால் மக்கள் திடீர் முடிவு

மாப்பிள்ளை தாடி வச்சா கல்யாணத்துக்கு வரமாட்டோம்..; காரைக்கால் மக்கள் திடீர் முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bride groom with beardமுன்பெல்லாம் (15-20) வருடங்களுக்கு முன்பு ஆண்கள் தாடி வச்சிருந்தா .. என்னடா மாப்ள காதல் தோல்வியா? என்பார்கள்.

கல்யாண மேடைகளில் மணமகன் க்ளீன் ஷேவ் செய்த முகத்துடனே காணப்படுவார்.

தமிழக வழக்கப்படி மணமகன் தாடி வைத்திருக்க மாட்டார்கள்.

ஆனால் தற்போது நிலைமை தலை கீழாக உள்ளது. இண்டர்வியூக்கு சென்றால் பாய்ஸ் சேவிங் செய்வது கிடையாது.

கல்யாண வீடுகளிலும் இதே நிலை தான்.

இதுவே தற்போது டிரெண்டாகிவிட்டது. ரஜினி, கமல், விஜய், அஜித் முதல் எல்லா ஹீரோக்களும் தாடியுடன் தான் சினிமாவில் நடிக்கின்றனர்.

தாடி இல்லாத ஆண்களை பார்ப்பதே அரிதாகிவிட்டது. இதனால் வித்தியாசமாக தாடி வைப்பதை ஆண்கள் விரும்ப தொடங்கிவிட்டனர்.

இந்த நிலையில் தாடி வைக்கும் மணமகன் கல்யாண விழாக்களில் கலந்துக் கொள்ள மாட்டோம் என காரைக்கால் மாவட்ட மீனவ மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என மீனவ பஞ்சாயத்தார் முடிவு எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் எடுத்த முடிவில்…

திருமண விழாக்களில் மணமகன்கள் முடிவெட்டாமல் தாடியை முழுமையாக சேவிங் செய்யாமல் கலந்து கொள்கிறார்கள். இது நமது பண்பாடாக தெரியவில்லை.

இது குறித்து சம்பந்தப்பட்ட மணமகளும் கவலைப்படுவதில்லை.

அதுபோல் பெண் வீட்டாரோ, மணமகன் வீட்டாரோ கண்டுக் கொள்வதில்லை.

நமது பாரம்பரிய பண்பாட்டின்படி திருமணத்தின்போது, தாடி வைத்திருப்பது ஏற்புடையதல்ல.

எனவே பழைய பண்பாட்டு, பாரம்பரியத்தை நிலைநிறுத்த வேண்டும்.

எனவே திருமண நிகழ்வில் மணமகன் தாடி வைத்திருந்ததால், அந்த திருமண விழாவை புறக்கணிப்போம். அந்த திருமண விழாவிற்கே செல்வதில்லை என முடிவு செய்துள்ளனர்.

நிஜமாகவே காரைக்கால் மக்கள் வித்தியாசமான சிந்தனை கொண்டவர்கள் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.

Karaikal people desicion on marriage function

கமல் கட்சியில் இருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்..; மநீம அறிக்கை

கமல் கட்சியில் இருந்து நடிகர் நாசர் மனைவி நீக்கம்..; மநீம அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kameela nassar (1)நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல (கட்டமைப்பு) மாநில செயலாளராக பொறுப்பு வகித்தவர் கமீலா நாசர்.

இவர் நடிகர் நாசரின் மனைவி.

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் தென்சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.

இந்த நிலையில் இவர் இந்தாண்டு 2021 சட்டமன்ற தேர்தலுக்கு (ஏப்ரல் 6) முன்பே தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.

தேர்தல் நேரத்திலும் கூட எதிலும் பங்கேற்காமல் கமீலா நாசர் ஒதுங்கி இருந்தார்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து கமீலா நாசர் திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளரான சந்தோஷ் பாபு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டல மாநில செயலாளர் பொறுப்பில் இருந்த கமீலா நாசர் நேற்று முதல் கட்சியின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கமீலா நாசர் கருதியதாக சொல்லப்படுகிறது. IMG-20210421-WA0024

Kameela Nassar quits Makkal Needhi Maiam

கொரோனா தடுப்பூசி விலை உயர்வு..: அரசுகளுக்கு 400 ரூபாய் தனியாருக்கு 600 ரூபாய் என நிர்ணயம்

கொரோனா தடுப்பூசி விலை உயர்வு..: அரசுகளுக்கு 400 ரூபாய் தனியாருக்கு 600 ரூபாய் என நிர்ணயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

corona vaccine india (1)கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் முதற்கட்டபணியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் முழுவீச்சில் நாடெங்கிலும் நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கோவாக்சின் மற்றும் கோவீஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளும் முக்கிய பங்கில் உள்ளன.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்கள் அனைவருக்கும் போடப்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில் 50 சதவீதம் மத்திய அரசுக்கும், 50 சதவீதம் மாநில அரசுகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியின் எண்ணிக்கையை வரும் ஜூலை மாதத்திலிருந்து 2 மில்லியனாக அதிகரிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது மாதத்திற்கு 5 மில்லியன் தடுப்பூசிகளை நிறுவனம் உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது..

இந்த எண்ணிக்கை உயர்வுக்காக இந்நிறுவனம் ரூ.150 கோடியை நிதியாக கோரியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்துள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலில் 250 ரூபாயாக இருந்த தடுப்பூசியின் விலை தற்போது மாநில அரசுகளுக்கு 400 ரூபாய் என்றும், தனியார் மருத்துவமனைகளுக்கு 600 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் மே-1ம் தேதி முதல் 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் தான் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Corona vaccines rate increased in india

தடுப்பூசி திருவிழா.. ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ஃபேன்ஸி பெயர் சூட்டும் நேரமல்ல..; ஆட்சியாளர்களை கண்டிக்கும் கமல்

தடுப்பூசி திருவிழா.. ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ஃபேன்ஸி பெயர் சூட்டும் நேரமல்ல..; ஆட்சியாளர்களை கண்டிக்கும் கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasan (9)கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை கடும் தீவிரம் அடைந்து வருகிறது.

இந்தியா வெகுவிரைவில் முதலிடம் பிடித்து விடும் என கணிக்கிறார்கள் நிபுணர்கள்.

மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. ரெம்டேஸீவர் மருந்து இல்லை. தடுப்பூசிகள் இல்லை. ஆபத்து என அழைத்தால் பிரதமர் அலுவலகத்தில் பிரதமரும் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம்.

பெரிய பெரிய தலைவர்கள் முதல் கடைக்கோடி மனிதர்கள் வரை நாளுக்கு நாள் தொற்று காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

இந்த இரண்டாவது அலையில் குழந்தைகளும் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை.

பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வருபவர்களிடம் மது, புகை போன்ற பழக்கம் இருக்கிறதா என்பது பற்றியோ, உடல்நிலையைப் பற்றியோ, வழக்கமாக உட்கொள்ளும் மருந்துகளைப் பற்றியோ கேள்விகள் எழுப்பப்படுவதில்லை.

குறைந்த பட்சம் இரத்த அழுத்தம் கூட பார்க்கப்படுவதில்லை. ஊசி போட்டபின் போனில் அழைத்து கூட உடல்நலம் குறித்து விசாரிக்கப்படுவதில்லை.

முதல் தவணை முடிந்து இரண்டாவது தவணை தடுப்பூசி போடச் சென்றால் மருந்து கையிருப்பு இல்லை என்கிறார்கள்.

தடுப்பூசிகள் எடுத்துக்கொண்ட பின் உடல்நிலையில் ஏற்படும் ஆபத்தற்ற பக்கவிளைவுகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், தடுப்பூசி குறித்த அச்சமும் பரவலாக நீடிக்கிறது.

உலகமே மருந்துக்குத் திண்டாட ஏப்ரல் 11-ஆம் தேதி வரை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கிய 54,28,950 தடுப்பூசிகளில் 12.10% வீணாகியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் கிடைத்திருக்கும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

பற்பல விதிமுறைகளை விதிப்பவர்கள் டாஸ்மாக் கடைகளென்று வந்துவிட்டால் கரிசனத்துடன் அணுகுவதும் ஏற்புடையதல்ல.

தேர்தல் முடிவை எதிர்பார்த்து முடங்கிக்கிடக்கிறதோ தமிழக அரசு எனும் ஐயம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

என் சகோதரருக்கே படுக்கை கிடைக்கவில்லை என மத்திய அமைச்சர் ட்வீட்டுகிறார். மாநிலங்கள் கொரானா பரவலைக் கட்டுப்படுத்தாமல், எங்களிடம் வந்து மருந்து கேட்டால் எப்படி என்கிறார்? இன்னொரு அமைச்சர்.

முன்நின்று நாட்டைக் காக்க வேண்டிய பிரதமரோ தேர்தல் பிரச்சாரம் செய்து ஓய்ந்த இடைவேளையில் ‘ஊசி போடும் திருவிழா’, ‘ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ்’ என விதம் விதமான ஃபேன்ஸி பெயர்களைச் சூட்டிக்கொண்டிருக்கிறார்.

மாநில அரசுகள் மருந்து கொள்முதல் செய்வதில் முழுச் சுதந்திரம் இன்னமும் அளிக்கப்படவில்லை. தீர்வுகளைத் தரமுடியாதவர்கள் அதிகாரத்தை மட்டும் கையில் வைத்திருப்பது கேலிக்குரியது.

ஆளாளுக்கு அரசியல் செய்யும் நேரம் இதுவல்ல என்பதைப் புரிந்துகொண்டு முன்னகர வேண்டும்.

மத்திய மாநில அரசுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் ஒத்திசைவுடன் தெளிவான திட்டமிடலுடன் செயல்பட வேண்டிய தருணம் இது.

அரசின் ஒவ்வொரு அலகும் கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும், நோயாளிகளைக் குணப்படுத்துவதிலும் சிறு பிசகும் இல்லாமல் செயல்பட்டாக வேண்டும்.

ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர்!

– கமல்ஹாசன்
தலைவர் – மக்கள் நீதி மய்யம்.

MNM leader Kamal Haasan asked government not to show negligence in corona

More Articles
Follows