நடிகர் தனுஷூக்கு கைகொடுக்கும் சிலம்பரசன்

நடிகர் தனுஷூக்கு கைகொடுக்கும் சிலம்பரசன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘மாறன்’.

இதில் ‘மாஸ்டர்’ பட நாயகி மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டிரைலரை விரைவில் வெளியிடஉள்ளனர்.

இந்த டிரைலரை யார் வெளியிடுகிறார்கள் என்பதை கெஸ் பண்ணுங்கள் என்று ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் மாறன் பட டிரைலரை சிம்பு வெளியிடுவார் என கூறப்படுகிறது.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார். அந்த சமயத்தில் தனுஷின் மாறன் ட்ரைலரை வெளியிடுவார் என தகவல்கள் வந்துள்ளன.

STR to release Dhanush movie trailer

‘வலிமை’-யில் இத்தனை நெகட்டிவ்வா.? அஜித் ரசிகர்கள் அப்செட்.; போனிகபூரின் AK-61 போனியாகுமா?

‘வலிமை’-யில் இத்தனை நெகட்டிவ்வா.? அஜித் ரசிகர்கள் அப்செட்.; போனிகபூரின் AK-61 போனியாகுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் நேற்றுமுன் தினம் பிப்ரவரி 24ல் ரிலீசானது.

இந்த படத்தை பாலிவுட் தயாரிப்பாளரும் நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தயாரித்திருந்தார்.

இதற்குமுன் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தையும் இவரே தயாரித்திருந்தார். வலிமைக்கு பிறகு அஜித் நடிக்கவுள்ள AK61 படத்தையும் போனிகபூரே தயாரிக்க வினோத் இயக்கவுள்ளார்.

இந்த அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.

இந்த நிலையில் ‘வலிமை’ படத்திற்கு முதல் இரண்டு நாட்களுக்கு நல்ல ஓபனிங் இருந்துள்ளது. ஆனால் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமாக வந்துள்ள நிலையில் தியேட்டர்களில் கூட்டம் குறைந்து வருகிறதாம்.

மேலும் அஜித்தின் லுக் படத்தின் பெரும் மைனசாக உள்ளது. இருட்டான இடத்தில் கூட அஜித் கருப்பு கூலிங் அணிந்தே வருகிறார். அவரின் சிவந்த கண்களை மறைக்கவே இப்படி செய்ததாக கூறப்படுகிறது. (இரவில் என்னாச்சோ.???!!!)

அஜித் ரசிகர்களுக்கு வினோ(த)த் விருந்து..; வலிமை விமர்சனம் (3/5)

அத்துடன் போலீஸ்க்கு உரித்தான கம்பீரம் அஜித்திடம் இல்லை. சரியான காஸ்ட்யூம் கூட அஜித்துக்கு இல்லை. ஏதோ வெறுமனே வந்து நின்று டயலாக் பேசுவதாக உள்ளது.

இவையில்லாமல் தாடி வைத்த விஸ்வாசம் அஜித் கூட ஓகே. ஆனால் வலிமை படத்தில் க்ளீன் ஷேவ் செய்த அஜித்தை காணமுடியவில்லை என படம் பார்த்த நடுநிலையாளர்களே கூறி வருகின்றனர்.

அஜித்தின் முகத்தில் முதிர்ச்சி நன்றாகவே தெரிகிறது. அதை மேக்அப் மேன் சரி செய்திருக்கலாம். ஆக்சன் காட்சிகளுக்கு கொடுத்த முக்கியவத்துவத்தை படத்தின் கதையிலும் அஜித்தின் தோற்றத்திலும் கொடுத்திருக்கலாம் வினோத் என ரசிகர்களே கருத்து தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில்தான் AK61 படத்தை போனிகபூர் தயாரிக்கவுள்ளார். எனவே படம் போனியாகுமா? என்ற கவலை அவருக்கு ஏற்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

Ajith’s Valimai received more negative comments

ஒரே வாரத்தில் ரிலீசாகும் சிவகார்த்திகேயனின் 2 படங்கள்

ஒரே வாரத்தில் ரிலீசாகும் சிவகார்த்திகேயனின் 2 படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் தயாரித்து அவரது நடிப்பில் உருவான கனா படம் 2018ல் ரிலீசானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் சத்யராஜ் இருவரும் முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

விவசாயம் மற்றும் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி இந்த படத்தின் கதைக்களத்தை அமைத்திருந்தார் இயக்குனர் அருண்ராஜா காமராஜ்.

ரசிகர்களில் ஆதரவுடன் சூப்பர் ஹிட்டான இந்த படத்தை தற்போது மார்ச் 18ம் தேதி முதல் சீனா நாட்டில் சைனீஸ் மொழியில் திரையிட உள்ளனர்.

‛‛கனா படத்தின் மொத்த படக்குழுவுக்கும் இது பெருமையான தருணம். மகிழ்ச்சியாக உள்ளது” என அருண்ராஜா காமராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள மற்றொரு படமான ‘டான்’ திரைப்படம் மார்ச் 25ல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஒரு வார இடைவெளியில் சிவகார்த்திகேயனின் 2 படங்கள் ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டான் படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாம்.

சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, மிர்ச்சி விஜய், பால சரவணன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கௌதம் வாசுதேவ் மேனன் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து லைகா புரொடக்சன் நிறுவனமும் இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

Sivakarthikeyan’s 2 films released in same week

‘காலா’ & ‘வலிமை’ பட ஹூமா குரேஷியின் DOUBLE XL அப்டேட்

‘காலா’ & ‘வலிமை’ பட ஹூமா குரேஷியின் DOUBLE XL அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘வலிமை’ திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தவர் நடிகை ஹூமா குரேஷி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஹூமா என்பது குறிப்பித்தக்கது.

‘வலிமை’ படத்தில் ஹூமாவின் நடிப்புக்கு ரசிகர்களிடமிருந்து அன்பும் பாராட்டும் குவிந்து வருவதால், நடிகை ஹூமா குரேஷி மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

அவரது ஆக்சன் காட்சிகளும் அவருக்கு சிறப்பான பாராட்டுகளை பெற்று தந்துள்ளது.

இதுகுறித்து ஹுமா குரேஷி கூறியதாவது..,

“அஜித் ரசிகர்களின் அளவற்ற அன்பும், பாசமும் வியப்பாக உள்ளது.

அவரது ரசிகர்களுக்கு எனது நன்றி. அஜித்துடன் பணிபுரிய வேண்டும் என்கிற எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது.

இந்த கேரக்டரை பரிசளித்த அஜித், போனி கபூர் மற்றும் இயக்குனர் .வினோத் ஆகியோருக்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.

தற்போது, ஹுமா குரேஷி, நடிகர் மஹத் ராகவேந்திராவுடன் “டபுள் எக்ஸ்எல்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் பல்வேறு பிராந்திய மொழிகளில் பல முக்கிய படைப்புகளில் பணிபுரிந்து வருகிறார்.

தற்போது அதிகம் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியிருக்கும் இந்தி திரைப்படமான ‘கங்குபாய் காத்தியாவதி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார், அதைத் தொடர்ந்து ‘மித்யா’ என்ற வெப் சீரிஸ், நெட்ஃபிக்ஸ் ஒரிஜினல் ‘மோனிகா, ஓ மை டார்லிங்’ ஆகியவற்றில் நடிக்கிறார்.

Kaala Valimai fame Huma Qureshis DOUBLE XL updates

‘வலிமை’ 14 நிமிட காட்சிகள் நீக்கம்..; ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்

‘வலிமை’ 14 நிமிட காட்சிகள் நீக்கம்..; ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘வலிமை’.

போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார்.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரிரு தினங்களுக்கு வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்த படத்தின் பெரும் குறையாக கூறப்பட்டது படத்தின் நீளம்தான். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் படம் இருந்தது.

இந்த நிலையில் 14 நிமிட காட்சிகள் ஆங்காங்கே நீக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இன்று பிப்ரவரி 26 முதல் வலிமை படத்தின் புதிய வெர்ஷனை திரையில் கண்டு கொள்ளலாம்.

இந்த படத்தின் தமிழ், தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட அனைத்து மொழி உரிமைகளையும் ஜீ நிறுவனம் ரூ 66 கோடிக்கு மேல் வாங்கியதாக கூறப்படுகிறது.

எனவே வலிமை படத்தை மார்ச் 3ஆம் வாரத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

Valimai OTT release details here

சரசரவென வளரும் கார்த்தி – மித்ரன் கூட்டணியின் ‘சர்தார்’

சரசரவென வளரும் கார்த்தி – மித்ரன் கூட்டணியின் ‘சர்தார்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழின் முன்னணி நட்சத்திரமான கார்த்தி, பிரபல இயக்குநர் P.S.மித்ரனுடன் முதன்முறையாக இணையும் “சர்தார்” படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னையை தொடர்ந்து கொடைக்கானல் காட்டுப்பகுதிகளிலும், மைசூர் காட்டுப்பகுதியிலும் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.

இதில், ஸ்டண்ட் காட்சிகளை பிரமாண்ட அளவில் எடுக்க ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார்.

பிரமாண்டமான ஆக்‌ஷன் மற்றும் ஜனரஞ்சக அம்சங்களைக் கொண்டு குடும்பங்களை கவரும் மாஸ் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகும் #சர்தார் படத்தின் படப்பிடிப்பு தீவிரமடைந்துள்ளது.

‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான கார்த்தியின் தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், படம் முடிவடையும் முன்னதாகவே படத்தின் டிஜிட்டல் உரிமையை ஆஹா நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இரு வேடங்களில் கார்த்தி நடிக்கிறார்.
கார்த்தி ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கிறார்.

சிம்ரன் ஜங்கி ஃபாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன்குமார் “சர்தார்” படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
ஒளிப்பதிவு ஜார்ஜ் C வில்லியம்ஸ்,
எடிட்டிங் – ரூபன்,
கலை இயக்கம் – கதிர்,

எழுத்து – எம்.ஆர்.பொன். பார்த்திபன், ரோஜி, பிபின்ரகு.

ஸ்டண்ட் – திலீப் சுப்பராயன்,
ஆடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா D,
பாடல்கள் – யுகபாரதி, VFX – ஹரிஹர சுதன்,
நிர்வாக தயாரிப்பு- J.கிரிநாதன், தயாரிப்பு மேற்பார்வை-AP.பால்பாண்டி,
ஸ்டில்ஸ் – ஜி.ஆனந்த்குமார்,
விளம்பர வடிவமைப்பு – சிவகுமார்S,
நிர்வாக தயாரிப்பு – கிருபாகரன் ராமசாமி,
PRO- ஜான்சன்.

Actor Karthi’s Sardar movie shoot updates

More Articles
Follows