தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை ஸ்ரீதேவி மெழுகுச் சிலை, ஸ்ரீதேவி போனிகபூர், துசாட்ஸ் அருங்காட்சியகம் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலை
எம்ஜிஆர், சிவாஜி காலத்திலேயே தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி.
பின்னர் ரஜினி, கமல், சிரஞ்சீவி உள்ளிட்ட நாயகர்களுடன் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானார்.
பின்னர் ஹிந்தி திரையுலகில் நுழைந்து அங்கும் தன் வெற்றி கொடியை நாட்டி, தயாரிப்பாளர் போனீகபூரை மணந்து செட்டிலானார்.
பின்னர் அஜித்துடன் இங்கிலீஷ் விங்கீலீஷ், விஜய்யுடன் புலி ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
இதன் பின்னர் கடந்த ஆண்டு எதிர்பாராதவிதமாக துபாயில் மரணமடைந்தார் ஸ்ரீதேவி.
அவரின் நினைவைப் போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் ஸ்ரீதேவியின் மெழுகுச் சிலையை வடிவமைத்துள்ளது.
அந்த சிலை திறப்பு விழாவில் ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர்.