ரஜினியுடன் இணைந்தாலும் கமல்தான் முதல்வர் வேட்பாளர்..- ஸ்ரீப்ரியா

actress sripriyaதமிழக மக்கள் நலனுக்காக இணைந்து செயல்படுவோம் என நடிகர் ரஜினிகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகிய இருவருமே தனித்தனியாக பேட்டி அளித்திருந்தனர்.

எனவே விரைவில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் ரஜினி ஆதரவுடன் கமல் களம் இறங்குவார் என கூறப்படுகிறது.

இதன் மூலம் தனது ரஜினி மன்றத்திற்கு இருக்கும் மக்களின் ஆதரவை தெரிந்து கொள்ள ரஜினிக்கும் வாய்ப்பு அமையும் எனவும் தெரிகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதன் மூலம் தேர்தலை சந்தித்த அனுபவம் கமலுக்கு உள்ளது.

நடிகர் ரஜினிக்கு தமிழகமெங்கும் முக்கியமாக மகளிர் இடத்தில் நல்ல செல்வாக்கு உள்ளது.

எனவே இவர்கள் இணைவது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் எனவும் அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

ஆனால் ரஜினி கமல் ரசிகர்களை பொறுத்தவரை இது ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

ரஜினி கமல் நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் ரசிகர்கள் கடந்த 40 ஆண்டுகளாக எதிரிகளாகவே உள்ளனர்.

ஒருவேளை கூட்டணி அமைந்தால் யார் முதல்வர்? வேட்பாளராக இருப்பார் என இப்போதே பேச ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் நடிகையும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மகளிரணியின் ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீப்ரியாவிடம் அளித்துள்ள ஒரு பேட்டியில்…

என்னை பொருத்தவரை கமல் முதல்வராக வேண்டும் என்பதுதான். அதற்காகத்தான் நான் வேலை செய்வேன். யாருடன் இணைந்து வேலைசெய்ய வேண்டுமென அவர் சொல்கிறாரோ, அவர்களுடன் வேலை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post