*மணியார் குடும்பம்* விழாவில் தம்பி ராமைய்யாவை மாட்டி விட்ட சூரி

sooriமுரளி நடித்த மனுநீதி, வடிவேலு நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் தம்பி ராமைய்யா.

ஆனால் இவரை ஒரு நடிகராகத்தான் பலருக்கும் தெரியும். அதற்கு முழு காரணமாக அமைந்த படம் மைனா.

அப்படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற அவர், அதன்பிறகே முழுநேர நடிகராகி விட்டார்.

அதாகப்பட்டது மகாஜனங்களே என்ற படத்தில் அறிமுகமான தனது மகன் உமாபதியை வைத்து, தற்போது மணியார் குடும்பம் என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கியுள்ளார். இவரே பாடல் எழுதி, இசையமைத்தும் இருக்கிறார்.

உமாபதி ராமைய்யா, மிர்துளா, சமுத்திர கனி, ஜெயபிரகாஷ், ஸ்ரீரஞ்சனி, பவன் என பலர் நடித்துள்ள இந்த படத்தில் தம்பி ராமைய்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் இசை விழா சென்னையில் நடைபெற்றது.

சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், கே.பாக்யராஜ், பிரபுசாலமன், சேரன், கரு.பழனியப்பன், சீனுராமசாமி, சூரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில், பேசிய பலரும் தம்பிராமைய்யாவின் திறமையை பெருமையாக பேசினர். அதுபோல் உமாபதியும் பெரிய நடிகராக வேண்டும் என்று வாழ்த்தினர்.

நடிகர் சூரி பேசும்போது விழாவை கலகலப்பாக்கி பேசினார். அவர் பேசியதாவது…

தம்பி ராமைய்யா அண்ணன் எந்த ஸ்பாட்டில் இருந்தாலும் ஒரு எனர்ஜி இருக்கும்.

ஒருநாள், எனக்கு 50 வயசுக்கு மேல ஆகிடுச்சு. ஆனாலும் இன்னும் பத்து கல்யாணம் கூட நான் பண்ணுவேன். அந்த அளவுக்கு நான் இன்னும் புல் எனர்ஜியா இருக்கேன் என்று சொன்னார்.

தம்பி ராமைய்யாவின் மனைவியும் விழாவுக்கு வந்திருந்தார். விழா அரங்கமே சிரக்க அவரும் சிரித்தார்.

Overall Rating : Not available

Related News

Latest Post