வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்

வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா-யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ்.

இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார்.

மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

இப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருக்கிறது திரைகதை.

மனிஷா யாதவ், ‘சகா’ ஐரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் உமாபதியோடு இணைகின்றனர்.

ஒளிப்பதிவாளர் யுகா காட்சி அமைப்புகளுக்கு வலு சேர்க்க, இப்படத்திற்கு தினேஷ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பு ரூபன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
உமாபதி ராமையா
யோகி பாபு
மனிஷா யாதவ்
ஐரா
தயாரிப்பு :- வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ்
இரா மகேஷ்: கதை, திரைகதை, வசனம், இயக்கம்.
ரூபன்: படத்தொகுப்பு
யுகா: ஒளிப்பதிவு
தாமரை & ரோகேஷ்: பாடல்கள்
நிகில் முருகன்: மக்கள் தொடர்பு

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வெற்றி பழனிச்சாமி, சர்வேஷ் முராரி.

இசை – டூபாடு

பின்னணி இசை – எஸ்.தமன்

எடிட்டிங் – ரூபன்

கலை – ஆர்.ஜனார்த்தன்

ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்.

நடனம் – ராகவா லாரன்ஸ்

பாடல்கள் – விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன்.

தயாரிப்பு மேற்பார்வை – விமல்.ஜி

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்.

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ். இதற்கு முன்பு வந்த முனி காஞ்சனா 1, 2, படங்களை விட இது இன்னும் மிரட்டலான படமாக உருவாகி இருக்கிறது.

பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.

இந்த கோடையை கொண்டாட குடும்ப படமாக முனி 4 காஞ்சனா 3 இருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம். காமெடியையும் கமர்ஷியலையும் சரி சம கலவையாக கலந்து தந்திருக்கிறார் லாரன்ஸ்.

முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்

முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் D.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் சண்டிமுனி. நட்ராஜ் கதா நாயகனாக நடிக்கிறார்.

நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மற்றும் வாசுவிக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன், கோவை ஈஸ்வரி, விசித்திரன், காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயன், ஷபிபாபு, விஜய்பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி,மேட்டூர் சேகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – செந்தில் ராஜகோபால்

இசை – A.K.ரிஷால் சாய்

பாடல்கள் – வ.கருப்பன்

கலை – c.முத்துவேல்

நடனம் – ராதிகா லாரன்ஸ் சிவா

ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்

எடிட்டிங் – புவன்

தயாரிப்பு நிர்வாகம் – முருகன் குமார்

தயாரிப்பு மேற்பார்வை – N.R.குமார்

தயாரிப்பு – D.சிவராம்குமார்

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் மில்கா செல்வகுமார்.

இந்த படத்திற்காக சென்னை வளசரவாக்கம் பகுதியில் முனீஸ்வரன் கோயில் அரங்கும் சிலையும் அமைக்கப் பட்டது …முப்பது அடி உயர சிலை அமைக்கப் பட்டு அதன் முன் மனீஷா யாதவ் பக்தி ரசம் சொட்ட

“பெரும் கோபக்காரா

எங்க சண்டி வீரா

தொல்லை தீர்க்க வாடா

ஆவி ஓட்ட வாடா” என்று பாட்டு பாடி ஆடிய இந்த பாடல் காட்சியில் 40 நடன கலைஞர்கள் 300 துணை நடிகர் நடிகைகள் பங்கேற்க .அசோக்ராஜா நடன அமைப்பில் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது. இந்த பாடல் காட்சியில் தீ மிதி காட்சிகளும் ஆணி செருப்பில் நடப்பது போன்ற காட்சிகளும் படமாக்கப் பட்டது.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்..

இது ஒரு ஹாரர் படம்..

நட்ராஜ் – மணீஷா யாதவ் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் நட்ராஜுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுபடவும் இருவருக்கும் திருமணம் நடக்கவும் குல தெயவ வழி பாட்டு காட்சி தான் இது என்றார் இயக்குனர்..

யோகி பாபு காமெடியில் தூள் கிளப்பி இருக்கிறார்.என்கிற கூடுதல் தகவலையும் சொன்னார் இயக்குனர். படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்தது,

பழனி கொடைக்கானல் நெய்க்காரன்பட்டி பொள்ளாச்சி வால்பாறை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடை பெற்றுள்ளது .

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஜிப்ரான்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஜிப்ரான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectஅவரது அதீதமான இசை நம் மனதை துளையிட்டு அதன் அடி ஆழத்துக்கு செல்லும். பல அடுக்குகளை கொண்ட அவரது பாடல்கள் மிக சிறப்பாக இசை ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றன. கொண்டாட்டங்கள் என்பது தாய்நாட்டில் மட்டுமல்ல, அவை நாடு மற்றும் மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது மிக மகிழ்ச்சியான, கொண்டாட்டமான ஒரு தருணம். ஏனெனில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் இசை துறையில் அவரது சேவையை பாராட்டி, ‘ASIAN ARAB AWARD 2019’ என்ற விருதை அவருக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளனர்.

இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறும்போது, “எல்லா புகழும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கே. எனது வேலைக்கு சர்வதேச தளத்தில் அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு கௌரவம். பஹ்ரைன், சௌதி அரேபியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகள், ரஷ்யா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த பிரபலமான பிரதிநிதிகளால் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இது வெறுமனே மகிழ்ச்சியை மட்டும் அளிக்காமல், எதிர்காலத்தில் மிகச் சிறந்த இசையை வழங்கும் பொறுப்பை எனக்கு அதிகமாக்கியிருக்கிறது” என்றார்.

2018ஆம் ஆண்டு ஜிப்ரானுக்கு மிகவும் வெற்றிகரமான ஒரு ஆண்டு. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2, விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் மற்றும் சமுத்திரகனியின் ஆண் தேவதை போன்ற நல்ல மற்றும் சவாலான படங்களில் பணியாற்றியிருக்கிறார். அதில் பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையும் மிகவும் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டும் (2019) பல்வேறு வகையான கதையம்சம் உள்ள படங்களில் அவர் பனியாற்றுவதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவும், மிகவும் நம்பிக்கைக்குரிய ஆண்டாகவும் இருக்கிறது.

விக்ரம் நடிக்கும் “கடாரம் கொண்டான்”, வைபவ் நடிக்கும் “சிக்ஸர்”, லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்”, மலையாள அறிமுகமான “அதிரன்” (பின்னணி இசை), ஹன்சிகாவின் “மஹா”, அபய் தியோலின் இது வேதாளம் சொல்லும் கதை , ஹோம் மினிஸ்டர் (கன்னடம்-தெலுங்கு இருமொழி படம்) இன்னும் சில படங்களிலும் பணிபுரிந்து வருகிறார். அவர் Sony Music-க்காக 7up Madras Gig-ல் தனிப்பாடல் ஒன்றையும் உருவாக்கி வருகிறார்.

Breaking பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் காலமானார்

Breaking பிரபல இயக்குனரும் நடிகருமான மகேந்திரன் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Legendary Director Actor Mahendran passed awayசென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோவில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு இருந்தார் இயக்குனர் மகேந்திரன்.

தற்போது அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். உயிரிழந்த அவருக்கு வயது 79.
மகேந்திரனுக்கு ஜான் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் விஜய் நடித்த ‘சச்சின்’ திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் முழு விவரம் வருமாறு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மகேந்திரன்.
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் உள்பட பல படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ளார் இவர்.

1966 ஆம் ஆண்டு வெளியான ‘நாம் மூவர்’ படத்திற்கு வசனம் எழுதி தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய மகேந்திரன், தொடர்ந்து பல படங்களுக்கு கதை, வசனம் எழுதி வந்த நிலையில், 1978 ஆம் ஆண்டு வெளியான ‘முள்ளும் மலரும்’ படம் இயக்குநராக அறிமுகமானர்.

அதன் பின்னர் ’உதிரிப்பூக்கள்’, ‘ரிஷிமூலம்’, ‘ஜானி’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’, ‘மெட்டி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கினார்.

இறுதியாக 1992 ஆம் ஆண்டு வெளியான ‘ஒரு பஞ்சாயத்து’ படம் தான் அவர் இயக்கிய கடைசி திரைப்படமாகும். அதன் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தவர், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘காமராஜ்’ படம் மூலம் நடிகராக சினிமாவில் பயணிக்க தொடங்கினார்.

அண்மையில் விஜய்யின் ‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

அதன்பின்னர் உதயநிதியுடன் நிமிர், ரஜினிகாந்த்துடன் பேட்ட உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இந்நிலையில், இன்று சற்று நேரத்திற்கு முன்பு மகேந்திரன் மரணமடைந்தார்.

அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காலை 10 மணிக்கு வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Legendary Director Actor Mahendran passed away

‘தேவ்’ படத்தின் பைக் போட்டியில் 8 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கை வென்றவர்கள் யார்?

‘தேவ்’ படத்தின் பைக் போட்டியில் 8 லட்சம் மதிப்புள்ள BMW பைக்கை வென்றவர்கள் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)தேவ்’ படத்தின் இருசக்கர வாகனப் போட்டியில் சுமார் 8 லட்சம் மதிப்புள்ள BMW இருசக்கர வாகனங்களைப் பரிசாக வென்று பிரபலமாகியிருக்கிறார்கள் நவீன் குமாரும், அபர்ணாவும். கார்த்தி – ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் காதலர் தினமான பிப்ரவரி 14, 2019 அன்று வெளியான ‘தேவ்’ படத்தில் கார்த்தி, BMW பைக்கை ஓட்டிக்கொண்டு வருவார். அந்த பைக்கை வெல்வதற்காக சில கேள்விகள் அடங்கிய போட்டியில் – நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்திலோ அல்லது நண்பர்களோ சிறப்பானவர்களாக இருந்தால் 8 லட்சம் மதிப்புள்ள BMW சூப்பர் பைக்கை வெல்லலாம் என்று கூறியிருந்தார்கள்.

இது தவிர ‘தேவ்’ படத்தைப் பற்றி சில கேள்விகளுக்கு 100 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிலளிக்க வேண்டும்.

சிறந்த பதிலளித்த நவீன் குமார் மற்றும் அபர்ணா இருவரும் தேர்வு தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் இருவருக்கும் தலா 8 லட்சம் மதிப்புள்ள புதியதாக பதிவு செய்யப்பட்ட BMW பைக்கை நடிகர் கார்த்தி பரிசாக வழங்கினார்.

‘தேவ்’ படத்தை புதுமுக இயக்குநர் ரஜாத் ரவிசங்கர் இயக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ்-ன் எஸ்.லக்ஷ்மன் தயாரித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், பிரகாஷ் ராஜ், ரம்யாகிருஷ்ணன், அம்ரிதா, RJ விக்னேஷ்காந்த் மற்றும் இன்னும் சில பிரபலங்களும் இப்படத்தில் நடித்திருந்தார்கள்.

More Articles
Follows