தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கிசரஃப் சுனில் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விழாவிற்காக சென்னை வந்த சிவராஜ்குமார் இந்த விழாவில் பங்கேற்று மேடை ஏறி பேசினார்.
அவர் பேசும்போது…
“ரஜினிகாந்த் எங்கள் குடும்பத்தில் ஒருவர் மட்டுமல்ல. அவர் எனக்கு சித்தப்பா போல ஆவார்.
நான் என் அப்பாவுடன் சபரிமலைக்கு சென்று இருக்கிறேன். அப்போது ரஜினி அங்கிள் கையைப் பிடித்துக் கொண்டு சபரிமலை சென்றேன். அந்த நினைவுகள் எப்போதும் எனக்கு ஸ்பெஷல். என்றும் மறக்க முடியாதவை.
எனக்கு நடிகர் விஜய் ரொம்ப பிடிக்கும். மற்ற தமிழ் நடிகர்களையும் பிடிக்கும் என பேசினார் சிவராஜ்குமார்.
நடிகர் யோகி பாபு பேசும்போது… கோலமாவு கோகிலா பார்ட் 2 விரைவில் உருவாகுகிறது என பேசினார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன் பேசும்போது…
நான் ரஜினியுடன் 24 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்கிறேன்.. நான் இன்று வரை நடித்திக் கொண்டிருப்பதற்கு படையப்பா படத்தில் இடம்பெற்ற நீலாம்பரி கேரக்டர் தான் என்று பெருமையுடன் பேசினார் ரம்யா கிருஷ்ணன்.
‘ஜெயிலர்’ படத்தின் நாயகி தமன்னா படத்தில் இடம்பெற்ற ‘காவலா…’ என்ற பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார்.
Sivarajkumar talks about Rajini relation with family