ஆல் டைம் பேவரைட்.. கவுண்டமணி – சிவகார்த்திகேயன் சந்திப்பு.; புதிய கூட்டணி.?

ஆல் டைம் பேவரைட்.. கவுண்டமணி – சிவகார்த்திகேயன் சந்திப்பு.; புதிய கூட்டணி.?

தமிழ் சினிமா காமெடியன்களில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி.

500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் கடந்த சில காலமாக நடிப்பதை நிறுத்தி விட்டார் கவுண்டமணி.

இறுதியாக 2016 ஆம் ஆண்டு வாய்மை என்ற படத்தில் மட்டுமே நடித்திருந்தார்.

இவர் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளமாட்டார்.

இறுதியாக மறைந்த நடிகர் விவேக் இறுதி சடங்கில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இந்த நிலையில் கவுண்டமணியை அவரது இல்லத்திலேயே சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

அந்த புகைப்படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன்.

“லெஜண்ட் உடன், பல மகிழ்ச்சிகளை கொண்ட சிறப்பான தருணம், என்றும் நினைவில் இருக்கும் நாள் ஆல் டைம் பேவரைட்” என்று பதிவிட்டுள்ளார்.

இதனால் சிவகார்த்தியன் படத்தில் கவுண்டமணி நடிக்கிறாரா என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இருவரும் இணைந்து நடிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Sivakarthikeyan meets legendary comedian Goundamani

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *