தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஐஸ்வர்யா, சத்யராஜ் நடித்த ‘கனா’ மற்றும் ரியோ நடித்த ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ ஆகிய படங்களை தயாரித்து வெளியிட்டார் சிவகார்த்திகேயன்.
இவை இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.
தற்போது இவர் தயாரித்துள்ள 3-வது படம் ‘வாழ்’.
இப்படத்தை அருவி பட இயக்குனர் அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கி உள்ளார்.
கடந்த ஒரு வருடமாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
இந்த நிலையில் இப்படத்தை ஜூலை 16ல் சோனி லைவ் செயலி மூலம் உலகமெங்கும் ரிலீஸ் செய்கின்றனர்.
நாளை ஜூலை 09ல் இசை மற்றும் ட்ரைலரை வெளியிடவுள்ளதாக சற்றுமுன் அறிவித்தனர்.
அதுபோல் பாக்ஸராக ஆர்யா நடித்துள்ள ‘சார்பாட்டா பரம்பரை’ படத்தை ஜூலை 22ல் அமேசான் ப்ரைமில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கபாலி, காலா போன்ற படங்களை அடுத்து இந்த படத்தை இயக்கியுள்ளார் ரஞ்சித்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ரஞ்சித்தே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது அமேசான் ஓடிடியில் தங்களது ’சார்பாட்டா பரம்பரை’ திரைப்படத்தை நேரடியாக ரிலீஸ் செய்ய முடிவு செய்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Sivakarthikeyan and Arya films to release in OTT