மீண்டும் இணையும் வாய்ப்பை ரஜினியால் பெற்ற சிம்ரன்-த்ரிஷா

simran and trishaஎந்திரன் படத்திற்கு பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தை மிகவும் கட்டு கோப்பாக எந்த ஒரு தகவலும் கசியாமல் வட இந்தியாவில் படமாக்கி வருகிறார் டைரக்டர்.

இந்த படத்தில் ரஜினியுடன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ், முனிஷ் காந்த், சனத் ரெட்டி, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

லேட்டஸ்ட்டாக த்ரிஷாவும் இந்த படத்தில் இணைந்துள்ளார் என்பதை அறிவித்து விட்டனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளாக சிம்ரன், த்ரிஷா முன்பே வலம் வந்தாலும் அவர்கள் தற்போதுதான் ரஜினி படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.

இதற்கு முன்பு அதாவது 18 வருடங்களுக்கு முன்பு ஜோடி என்ற படத்தில் பிரசாந்துடன் சிம்ரன், த்ரிஷா இணைந்து நடித்திருந்தனர்.

நாயகியாக ஆவதற்கு முன்பு இந்த படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார் த்ரிஷா.

தற்போது இவர்கள் மீண்டும் இணையும் வாய்ப்பை ரஜினி பெற்று தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Overall Rating : Not available

Latest Post