தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழி பேசும் திரைப்படங்கள் உள்ளன.
எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு சூப்பர் ஸ்டார் இருந்து வருகிறார்.
ஆனால் இந்த சூப்பர் ஸ்டார்கள் எல்லாம் 10 வருடங்கள் அல்லது 20 வருடங்கள் மட்டுமே சூப்பர் ஸ்டார்களாக இருந்துள்ளனர்.
ஆனால் தமிழகத்தில் மட்டுமே கடந்த 40 வருடங்களாக ரஜினிகாந்த் மட்டுமே சூப்பர் ஸ்டார் என்று திரையுலகினரால் அழைக்கப்படுகிறார்.
ரஜினி என்ற அந்த ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்திற்கு இன்று பலரும் ஆசைப்படுகிறார்கள் என சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த ‘காலா’ பத்திரிகையாளர் சந்திப்பில் தனுஷ் பேசியிருந்தார்.
அந்த பேசி 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சிம்பு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 20 நிமிடங்கள் பேசியுள்ளார். அதில் 10 நிமிடங்களுக்கு மேலாக ரஜினிகாந்த் பற்றியே பேசியுள்ளார்.
எனவே இது தனுஷுக்கு பதிலடி என பலரும் பேசி வருகின்றனர்.
அந்த வீடியோவின் முக்கிய அம்சங்கள்…
எனக்கும் ரஜினி சார் மாதிரி வரணும்கற ஆசை இருந்தது. ஆனால், அதற்காக நான் ரஜினியாக மாற ஆசை இல்லை. அந்த மாதிரி ஆகணும்கற ஆசை இருந்ததாலதான் நான் இப்ப இப்படி வந்திருக்கேன்.
என்னை ரொம்ப டீமோடிவேட் பண்ணாங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு ஆசை இருக்கும்.
எல்லாரும் தப்பான ஒரு விஷயத்தைக் கொண்டு போய் சேர்க்கிறாங்க. தியாகராஜ பாகவதர் இருந்தாரு, எம்ஜிஆர் இருந்தாரு, ரஜினி சார் இருந்தாரு, ஒவ்வொரு கால கட்டங்கள்ல ஒருத்தர் இருந்தாங்க. ஆனால், ரஜினி மாதிரி யாரும் வரக் கூடாதுன்னு யாரும் சொல்லக் கூடாது.
இப்படி யார் தெரியுமா சொல்வாங்க, தான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் சொல்வாங்க. அப்படி பேசறவங்களுக்கு ஒண்ணு புரியலை.
தியாகராஜ பாகவதர் மாறி வரணும்னு நினைச்சதால எம்ஜிஆர் வந்தாரு. எம்ஜிஆர் மாதிரி வரணும்னு நினைச்சதால ரஜினி வந்தாரு. ரஜினி மாதிரி வரணும்னு நினைச்சதால அஜித், விஜய் வந்திருக்காங்க.
இவங்கள மாதிரி வரணும்னு நினைச்சதாலதான் நான் வந்திருக்கிறனான்னு தெரியலை. இருந்தும் எனக்கும் ஒரு இடம் கிடைச்சிருக்கு.
நான்தான் ரஜினின்னு நினைக்கிறவங்கதான் இதை மாதிரி பேசறாங்க. ஆனால், ரஜினி மாதிரி வரணும்னு நினைக்கிறன்னு நாம பேசும் போது அதை தப்பாவே வெளிய பேச வைக்கிறாங்க,” என்கிறார் சிம்பு.
தன்னையே ரஜினியா நினைக்கிறவங்கதான் இப்படி பேசறாங்க என சிம்பு பேசியிருப்பதால் இது ரஜினியின் மருமகன் தனுஷை பற்றி இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது.
ஆனால் தனுஷோ ரஜினி ஒருவர்தான் அவர் மட்டுமே என பலமுறை சொல்லிவிட்டார்.