அண்ணனுக்கு முன்பே திருமணம்; தனுஷ் வழியில் சிம்பு தம்பி குறளரசன்

Simbus brother Kuralarasan is getting married next monthஇயக்குனர் செல்வராகவனின் தம்பி தான் நடிகர் தனுஷ் என்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான்.

அண்ணன் திருமணத்திற்கு முன்பே ரஜினி மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக் கொண்டார் தனுஷ் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இவரைப் போல சிம்புவின் தம்பி குறளரசனும் அண்ணனுக்கு முன்பே திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் குறளரசன்.

அண்மையில் அவர் முஸ்லீம் மதத்திற்கு மாறியிருந்த தகவலை நாம் பார்த்தோம்.

முஸ்லீம் மதத்தை சேர்ந்த தன் கேர்ள்ட் பிரண்ட்டை மணக்கவிருக்கிறராம் குறளரசன்.

இவர்களின் திருமணம் அடுத்த மாதம் ஏப்ரல் 26ம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் குறளரசன் தந்தை டி. ராஜேந்தர் வெளியிட உள்ளார்.

Simbus brother Kuralarasan is getting married next month

Overall Rating : Not available

Latest Post