JUST IN எல்லாத்தையும் பாத்துகிறேன்.. வேற மாரி வந்துட்டேன்.. சினிமாவுக்கு பெருமை தேடி தருவேன் – சிம்பு

JUST IN எல்லாத்தையும் பாத்துகிறேன்.. வேற மாரி வந்துட்டேன்.. சினிமாவுக்கு பெருமை தேடி தருவேன் – சிம்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று மார்ச் 18 ஆம் தேதி இரவு 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியானது.

இந்த விழாவில் நடிகர் சிம்பு பேசியதாவது..

“நான் கஷ்டத்தில் இருக்கும்போது எனக்காக ரசிகர்கள் நீங்கள் நிறைய செய்து விட்டீர்கள்.. இனிமேல் நீங்கள் எனக்காக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சென்று.. என் தலைவன் வருவான் டா என் தலைவன் செய்வான் டா.. அப்படி.. இப்படி என்றெல்லாம் சொல்ல வேண்டாம்.

இனிமேல் நீங்கள் சந்தோஷமாக இருங்கள். ஹாயாக ஏசி ரூமில் அமர்ந்து கொள்ளுங்கள்.. எனக்காக இனி நீங்கள் எதையும் செய்ய வேண்டாம்.. நான் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறேன்..

இனிமே நான் என்ன பண்றேன்னு மட்டும் பாருங்க.. நான் வேற மாதிரி வந்துட்டேன்.. இனிமே விடவே மாட்டேன்.. என் ரசிகர்கள் தலைகுனிய விடவே மாட்டேன்..

ஐ யம் எ லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பாட்டு பாடி ஆடியது முதல் இன்று வரை தமிழக மக்கள் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராக பார்க்கிறார்கள்..

மாநாடு என்ற பெரிய வெற்றியை எனக்கு கொடுத்தார்கள்..்அதன் பிறகு வெந்து தணிந்தது காடு என்ற பட வெற்றியை கொடுத்தார்கள்.. இன்று 10 தல என்பதில் வைத்து அழகு பார்க்கிறார்கள்..

இனிமே தமிழ் சினிமா பெருமைப்படும் அளவுக்கு நான் நடந்து கொள்வேன்.. இதை நான் தன்னம்பிக்கையோடு சொல்கிறேன்.. என்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் உருக்கமாக பேசினார் சிலம்பரசன்.

Simbu speech at Pathu Thala audio launch

புலமைப்பித்தனின் பேரன் அறிமுகம்.; ஜாக்கிசான் – அஜித் லெவலில் திலீபன்.!

புலமைப்பித்தனின் பேரன் அறிமுகம்.; ஜாக்கிசான் – அஜித் லெவலில் திலீபன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் லைட் சினிமாஸ் எனும் பட நிறுவனம் சார்பில் அறிமுக இயக்குநர் துரைமுருகன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘எவன்’.

இதில் திலீபன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தீப்தி மானே நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஜே. கே. சஞ்சீத், உஜ்ஜைனி ராய், கானா பாலா, பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சிவராமன் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை பாலா செய்துள்ளார்.

ஏ.கே. சசிதரன் இசையமைக்க பாடல்களை மறைந்த புலவர் புலமைப்பித்தன், விவேகா, கானா பாலா, ஏகா ராஜசேகர் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள்.

‘எவன்’ படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

“தமிழ் திரையுலகில் அம்மா -மகன் உறவை மையப்படுத்தி ஏராளமான திரைப்படங்கள் வந்திருக்கலாம். ஆனால் இந்த படத்தில் அம்மா மகன் உறவை புதுவிதமான கோணத்தில் திரைக்கதையை அமைத்திருக்கிறோம்.

அதாவது கதையின் நாயகன் அம்மாவிற்காக உயிரையும் கொடுப்பான். உயிரையும் எடுப்பான் இதுதான் இந்த படத்தில் ஒரு வரி கதை.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்பாக ‘எவன்’ தயாராகி இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடிப்பதற்கான தேடல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு முறை கூத்து பட்டறைக்கு சென்ற போது என் கண்ணில் பட்டு கண நேரத்தில் மனதில் கதாபாத்திரமாக பதிந்தவர் தான் திலீபன்.

அதன் பிறகு அவரை பற்றி விசாரித்த போது, அவர் புலவர் புலமைப்பித்தனின் பேரன் என்று தெரிந்தது. பொருத்தமான நபரை தான் திரையுலகில் அறிமுகப்படுத்துகிறோம் எனும் உற்சாகம் ஏற்பட்டது. இந்த திரைப்படம் பல தடைகளை கடந்து ஏப்ரல் 7ம் தேதியன்று வெளியாகிறது.

இந்த படத்தில் உள்ள எல்லா சண்டை காட்சிகளிலும் டூப் போடாமல் இவரே நடித்துள்ளார். முறையாக சண்டை பயிற்சி கற்றுள்ளார் நடிகர் திலீபன்.

அங்கு படப்பிடிப்பில் இருந்தவர்கள் சொன்ன போதும் கூட 20 மாடியில் இருந்து குதிக்கும் காட்சியில் நடிகர் ஜாக்கி ஜானை போல ஒரே டேக்கில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இரு சக்கர & நான்கு சக்கர வாகனங்களில் நடிகர் அஜித்தை போல வித்தை காட்டும் திறமை படைத்தவர் எவன் (YEVAN ) பட நாயகன் திலீபன்”

இவ்வாறு இயக்குநர் துரைமுருகன் தெரிவித்தார்.

Pulamai Pithan grandson Thileepan makes debut in Evan

JUST IN எவன் ஆளனும் எவன் வாழனும்… துரோகமும் துரோகியும் புதுசுல்ல.; ‘பத்து தல’ ட்ரைலரில் சிம்பு பன்ச்

JUST IN எவன் ஆளனும் எவன் வாழனும்… துரோகமும் துரோகியும் புதுசுல்ல.; ‘பத்து தல’ ட்ரைலரில் சிம்பு பன்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன் கௌதம் கார்த்திக் ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

இந்த படத்தில் கௌதம் மேனன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று மார்ச் 18 ஆம் தேதி இரவு 10 மணிக்கு ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

இரண்டு நிமிடங்களுக்கு மேலாக ஓடும் இந்த ட்ரெய்லரில் சிம்புவின் ஆக்சன் காட்சிகளும் மாஸ் வசனங்களும் இடம் பெற்றுள்ளன.

ஏ ஜி ஆர் என்ற கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்துள்ளார்.. மணல் கொள்ளை அடிக்கும் மாபியா கேங்ஸ்டர் பற்றிய கதைக்களமாக இந்த படம் உருவாகியுள்ளது.

இதில் இங்கு எவன் ஆளனும்.. எவன் வாழனும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும் என சிம்பு டயலாக் பேசுகிறார்.

மேலும் மற்றொரு வசனத்தில்… மானை ஓநாய் கொல்லும்.. ஓநாயை சிறுத்தை கொல்லும்… சிறுத்தையை புலி கொல்லும்.. புளியை சிங்கம் கொல்லும்.. ஆனால் சிங்கத்தை கொல்ல எந்த ஒரு மிருகமும் பொறக்கலடா என்று வசனம் பேசுகிறார்.

இந்த ட்ரெய்லர் முடிவடையும் நேரத்தில் துரோகமும் துரோகியும் எனக்கு புதிது இல்லை என்கிறார் சிம்பு.

இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது..

STR’s mass punch in Pathu Thala traier

*PATHU THALA-FILMISTREET* ❤‍🔥

The most awaited #PathuThala official trailer is here

Pathu Thala – Official Trailer

AK62 – FIRST ANNIVERSARY : கிடைச்சத இழக்குறதும்.; விரக்தியில் விக்னேஷ் சிவன்.?!

AK62 – FIRST ANNIVERSARY : கிடைச்சத இழக்குறதும்.; விரக்தியில் விக்னேஷ் சிவன்.?!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த ஆண்டு மார்ச் 18 ஆம் தேதி அஜித் நடிக்கும் அவரின் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க அனிருத் இசையமைப்பார் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் சில காரணங்களால் அந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குவார் என தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி ஓராண்டாகியும் AK 62 படத்தின் ஷூட்டிங் இதுவரை தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்..

‘நானும் ரௌடிதான்’ பட பாடலை ஸ்டோரியாக வைத்துள்ளார். அதில்..

“கிடைச்சத இழக்குறதும், இழந்தது கிடைக்கிறதும் அதுக்கு பழகுறதும் நியாயம் தானடி. கொடுத்தத எடுக்குறதும், வேற ஒண்ணு கொடுக்குறதும் நடந்த மறக்குறதும் வழக்கம் தானடி” பாடல் வரிகளை பதிவிட்டு, “சில வரிகள் ஆழமான அரத்தங்களை கொண்டிருக்கின்றன” என பதிவிட்டுள்ளார்.

Vignesh Sivan’s emotional post about AK 62

ராஜமௌலி – கீரவாணிக்கு உற்சாக வரவேற்பு.; அமித்ஷாவிடம் ராம்சரண் ஆசி

ராஜமௌலி – கீரவாணிக்கு உற்சாக வரவேற்பு.; அமித்ஷாவிடம் ராம்சரண் ஆசி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு என்ற பாடலுக்கு ஆஸ்கர் விருது அண்மையில் வழங்கப்பட்டது்

இதனையடுத்து படக்குழுவினருக்கு இந்தியா முழுவதும் பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதனையடுத்து ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி, அவர் மனைவி வள்ளி, இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, அவர் மனைவி ரமா, பாடலாசிரியர் சந்திரபோஸ், பாடகர் காலபைரவா உள்ளிட்ட படக்குழுவினர் நேற்று காலை ஹைதராபாத் திரும்பினர்.

ஹைதராபாத் விமான நிலையத்தில் அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அங்கே திரண்டு வந்த ரசிகர்களிடம் ‘ஜெய்ஹிந்த்’ என கூறிவிட்டுப் சென்றார் இயக்குநர் ராஜமௌலி.

இந்த நிலையில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாயகன் நடிகர் ராம் சரண், தனது தந்தையும் நடிகருமான சிரஞ்சிவியுடன் டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்

இது குறித்து சிரஞ்சீவி தன் ட்விட்டர் பக்கத்தில்… “ராம் சரணை வாழ்த்தி ஆசீர்வதித்ததற்காக நன்றி அமித் ஷா ஜி. ஆஸ்கர் விருது வென்று வந்துள்ள ஆர்ஆர்ஆர் படக்குழு சார்பாகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார் சிரஞ்சீவி.

Ram Charan got blessings from Amit shah

JUST IN ரஹ்மான் காலில் விழுந்த சிம்பு & கௌதம்.; கைகொடுத்த பிரியா பவானி சங்கர்

JUST IN ரஹ்மான் காலில் விழுந்த சிம்பு & கௌதம்.; கைகொடுத்த பிரியா பவானி சங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘பத்து தல’.

ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ஒபிலி கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மார்ச் 18 தற்போது சென்னை நேரு ஸ்டேடியம் அரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்த விழாவினை விஜய் டிவி புகழ் பாலா மற்றும் விஜே ரம்யா ஆகிய இருவரும் தொகுத்து வழங்கி வருகின்றனர்.

அரங்கத்திற்குள் நுழைந்த சிம்புவை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பத்து தல.. கெத்து தல.. என்பது போல மாஸாக வந்து இறங்கி ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

அதன் பின்னர் இசை நாயகன் ஏ ஆர் ரகுமான் அரங்கத்திற்குள் நுழைந்தார்.

அப்போது ரஹ்மானை கண்டதும் அவரை வரவேற்று படத்தின் நாயகர்கள் சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் ரஹ்மானின் காலில் விழுந்து ஆசி பெற்றனர்.

இவர்கள் அருகில் நின்ற நாயகி பிரியா பவானி சங்கர், ஏ ஆர் ரகுமானை வரவேற்று கை குலுக்கினார்.

Simbu and gautham karthik got blessings from AR Rahman

More Articles
Follows