சிம்புவின் பாராட்டைப் பெற்ற தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

சிம்புவின் பாராட்டைப் பெற்ற தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu and sivakarthikeyanசிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான படம் ‘கனா’.

இதில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை பார்த்த அனைவரும் பாராட்டி வரும் நிலையில் நடிகர் சிம்புவும் அருண்ராஜா காமராஜை தொலைபேசியில் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது…

உங்கள் பாராட்டுக்கு மிகப்பெரிய நன்றி எஸ்டிஆர் சார்.

ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் நீங்கள் விலாவரியாக சொன்னது உங்கள் நேர்மறை சிந்தனையும் ஆழமாக இருந்தது.

மீண்டும் ஒரு முறை நன்றி” என தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

எழுத்தார் இமயம் அவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான *இயல் விருது*

எழுத்தார் இமயம் அவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான *இயல் விருது*

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director cum Politician Seeman starrer Munthirikaadu newsகனடாவில் இயங்கிவரும் ”தமிழ் இலக்கியத் தோட்ட அறக்கட்டளை” சார்பாக ஆண்டுதோறும் தமிழ் இலக்கியத்தில் சிறப்பாக இயங்கிவரும் எழுத்தாளர்களைக் கௌரவிக்கும் வகையில், ”இயல் விருது” வழங்கி வருகிறது.

அந்த வகையில் 2018-ம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் இயல் விருதை, 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய உலகில் தொடர்ந்து இயங்கி வரும் எழுத்தாளர் இமயம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதி ஆணவக்கொலையைப் பற்றிய பெத்தவன் என்கிற நெடுங்கதை, இவரின் படைப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்று.

பெத்தவன் நெடுங்கதை தான்,இயக்குனர் மு.களஞ்சியம் தயாரிப்பு , இயக்கத்தில்,புதுமுகங்களோடு, இயக்குனர் சீமான் அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ”முந்திரிக்காடு” திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

ஆகவே, எழுத்தார் இமயம் அவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான ”இயல் விருது”அறிவிக்கப்பட்டதில் படக்குழுவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Director cum Politician Seeman starrer Munthirikaadu news

சூர்யா 37 பட தலைப்பை ரசிகர்களே முடிவு செய்ய சூப்பர் சான்ஸ்

சூர்யா 37 பட தலைப்பை ரசிகர்களே முடிவு செய்ய சூப்பர் சான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KV Anand Asks Fans Suggestion with a Poll of 3 Tentative Titles for Suriya 37தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கும் என்ஜிகே படத்தில் நடிக்கத் துவங்கினார் சூர்யா.

இப்படத்தின் சூட்டிங் தாமதமானதால், கே.வி. ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்க சென்றுவிட்டார்.

இந்த படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி உள்ளிட்டோர் நடிக்க நாயகியாக சாயிஷா நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சிரக் ஜனியும் நடித்துள்ளார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்திற்கு தலைப்பு வைக்க வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது படக்குழு.

மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று தலைப்புகளை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து, ரசிகர்களிடையே வாக்கு கேட்டிருக்கிறார் டைரக்டர்.

இதில் ‘உயிர்கா’ என்ற தலைப்பிற்கே அதிக வாக்குகள் கிடைத்து வருகிறது.

எனவே ‘உயிர்கா’ என்ற தலைப்பே இறுதியாகும் எனத் தெரிகிறது.

KV Anand Asks Fans Suggestion with a Poll of 3 Tentative Titles for Suriya 37

பல விருதுகளைப் பெற்ற நாவல் *ழகரம்* என்ற பெயரில் படமாகிறது

பல விருதுகளைப் பெற்ற நாவல் *ழகரம்* என்ற பெயரில் படமாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Zhagaram trailer launched today as Xmas special treatமேலை நாடுகளில் எழுதப்பட்ட கதைகள், நாவல்கள் படமாக்கப்பட்டு வெற்றி பெற்று வருகின்றன. தமிழில் இம் முயற்சி அரிதாகவே நடைபெற்று வருகிறது.

இருந்தும் பத்ரகாளி, முள்ளும் மலரும் , 47 நாட்கள், மோகமுள், சொல்ல மறந்த கதை, பரதேசி , அரவான், விசாரணை போன்ற படங்கள் ஏற்கெனவே எழுதப்பட்ட கதைகளே.

அவை திரைப்படமாக்கப்பட்டு விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. விருதுகளையும் பெற்றுள்ளன.

நாவலைப் படமாக்கும் நன் முயற்சியின் தொடர்ச்சியாக அடுத்து உருவாகியுள்ள படம் ‘ழகரம்.’

பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில், நந்தா நடிப்பில், தரன் இசையில் , அறிமுக இயக்குநர் க்ரிஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கிறது இந்த ‘ழகரம்’ திரைப்படம்.

பல விருதுகளைப் பெற்ற ‘ ப்ராஜெக்ட் ஃ’ நாவலின் தழுவல் இது.

இத்திரைப்படம் ஓர் அதிசயப் புதையலைத் தேடிச்செல்லும் 21ம் நூற்றாண்டு இளைஞர்களின் சாகசக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய காலத்தில், படித்த இளைஞர்களுக்குப் பரிச்சயமான மென்பொருள் துறை கார்ப்பொரேட் சூழலில் பரபரவென்று தொடங்கும் கதை, வரலாற்றுச் சின்னங்களாக விளங்கும் மகாபலிபுரம், தஞ்சை, கோவை என்று பல்வேறு ஊர்களுக்கு இழுத்துச் செல்கிறது.

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் மறுபிரவேசம் எடுத்த நந்தா, சிறு இடைவெளிக்குப் பின் மீண்டும் கதாநாயகனாக நடிப்பதால் இந்தத் திரைப்படம் அவருக்குத் திருப்பு முனையாக அமையும் என்று கூறப்படுகிறது.

படத்தின் இடையிடையே தற்போதைய இளைஞர்களுக்கு தெரியாத பல ருசிகரமான, ஆச்சரியமான வரலாற்று விவரங்களையும் காட்சிகளாக்கிக் கதையுடன் கூறி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

”அடுத்து என்ன நடக்கப் போகிறது?'”என்று ஒவ்வொரு நிமிடமும் நம்மை கொக்கி போட்டு விறுவிறுவென இழுத்துச் செல்கிறது கதை.

சமீபத்தில் இந்தப் படத்தின் பாடலை இயக்குநர், கவுதம் மேனன் வெளியிட்டார். ட்ரைலர் கிறிஸ்துமஸ் தினத்தன்று இன்று வெளியாகியுள்ளது.

Zhagaram trailer launched today as Xmas special treat

ஆசிரம குழந்தைகளுடன் சூட்டிங் ஸ்பாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாடிய ஆரி-ஐஸ்வர்யா

ஆசிரம குழந்தைகளுடன் சூட்டிங் ஸ்பாட்டில் கிறிஸ்மஸ் கொண்டாடிய ஆரி-ஐஸ்வர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aari and Aishwarya Dutta surprises unprivileged children with Christmas Delightஎந்தவொரு இயற்கை பேரிடரோ அல்லது பொதுமக்களுக்கு ஒரு துன்பமோ உடனே தன் கரம் கொடுத்து தன்னால் இயன்றவரை அவர்களை மீட்பவர் நடிகர் ஆரி.

சமீபத்தில் கூட ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில்,கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன், க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் B.தர்மராஜ் தயாரித்து வரும் பெயரிடப்படாத புதிய படமொன்றில் ஆரி – ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்கள்.

S.S.ராஜ மித்ரன் டைரக்ட் செய்யும் இப்படத்தின் இடைவெளியின் போது படப்பிடிப்பில் இருந்த ஆரியும், ஐஸ்வர்யா தாத்தாவும், இன்று கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு ஆசிரமக் குழந்தைகளை படப்பிடிப்பு தளத்திற்கே வரவழைத்து பொம்மைகள், சாண்டா கிளாஸ் மாதிரி பரிசு பொருட்கள் மற்றும் மதிய உணவும் கொடுத்து அவர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்.

Aari and Aishwarya Dutta surprises unprivileged children with Christmas Delight

விஸ்வாசத்தின் இரு தூண்கள் அஜித்-சிவா.; சத்யஜோதி நிறுவனம் பாராட்டு

விஸ்வாசத்தின் இரு தூண்கள் அஜித்-சிவா.; சத்யஜோதி நிறுவனம் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith and Siva were 2 pillars of Viswasam says Sathya Jyothi filmsசிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதுகுறித்து அந்த பட நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது…

“எங்களது நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் குடும்பத்தோடு வந்து பார்க்கும் வகையில் படங்களை தருவதில் மிகவும் முனைப்போடு இருப்போம். தற்போது எங்கள் தயாரிப்பில் வெளி வர இருக்கும் “விஸ்வாசம்” படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் “U” சான்றிதழ் தந்ததில் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

எங்கள் நிறுவனத்தின் சார்பில் நாயகன் அஜித் குமார் சாருக்கும், இயக்குனர் சிவாவுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. அவர்கள் இருவரும் தூண்களாக இருந்து உழைத்து இருக்கிறார்கள்.

எல்லா தரப்பினரையும் கவரும் படமாக விஸ்வாசம் அமையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இசை அமைப்பாளர் டி இமானின் இசை பொங்கல் கொண்டாடத்துக்கு உகந்த வாறு பட்டையை கிளப்பி கொண்டு இருக்கிறது.

மாநகரம் முதல் குக்கிராமம் வரை பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தின் பாடல்கள் சேம ஹிட்” என்கிறார் தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன்.

அஜித் குமார், நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரமேஷ் திலக், அனைக்கா, கோவை சரளா, உட்பட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்து இருக்கும் ” விஸ்வாசம் ” படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி. டி இமானின் இசையில், ரூபன் ஒளிப்பதிவில், திலிப் சுப்புராயன் சண்டை பயிற்சியில், பிருந்தா மற்றும் கல்யாண் ஆகியோரின் நடன அமைப்பில், மிலன் கலை வண்ணத்தில், கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் வெளியிட, சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில், டி ஜி தியாகராஜன், செல்வி தியாகராஜன், செந்தில் தியாகராஜன், மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்து உள்ளனர்.

Ajith and Siva were 2 pillars of Viswasam says Sathya Jyothi films

More Articles
Follows