சிம்பு படத்தலைப்பை மாற்றி மீண்டும் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஐசரி கணேஷ் & கௌதம் மேனன்

சிம்பு படத்தலைப்பை மாற்றி மீண்டும் பர்ஸ்ட் லுக் வெளியிட்ட ஐசரி கணேஷ் & கௌதம் மேனன்

‘ஈஸ்வரன்’ மற்றும் ‘மாநாடு’ ஆகிய படங்களை முடித்து விட்டு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தில் நடிக்கவிருந்தார்.

இது சிம்புவின் 47வது படமாக உருவாகிறது.

இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்க கௌதம் மேனன் இயக்குவார் என கூறப்பட்டது.

கௌதம் மேனன் & சிம்பு ஆகியோரது கூட்டணி ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ மற்றும் ‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக ஏற்கெனவே இணைந்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அறிவித்தபடி ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்தலைப்பை மாற்றியுள்ளனர்.

இப்படத்திற்கு ‘வெந்து தணிந்தது காடு’ என பெயரிட்டு, பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

அதில் காடுகள் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

சின்ன பையன் தோற்றத்தில் உள்ளார் சிம்பு. கையில் நீண்ட கம்பு உடன் லுங்கி உடன் வித்தியாசமான தோற்றத்தில் உள்ளார் சிம்பு.

Simbu – Gautham Menon movie gets a new title

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *