பொறுப்பற்றவர்கள் ஓகே; நீங்க செய்யலாமா.? மீடியாவுக்கு சிம்பு வேண்டுகோள்

பொறுப்பற்றவர்கள் ஓகே; நீங்க செய்யலாமா.? மீடியாவுக்கு சிம்பு வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Simbu aka STR request media do not spread rumoursசமூக ஊடகங்களில் சினிமா நட்சத்திரங்களின் பெயரில் போலியான அக்கவுண்டுகளை தயாரித்து அதன் மூலம் போலியான தகவல்கள் மற்றும் கருத்துக்களை வெளியிட்டு அந்த நட்சத்திரங்களுக்கு களங்கம் விளைவிக்க ஒரு கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே.

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவை திருமணம் செய்ய சிம்பு விருப்பம் தெரிவித்து அவரது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்ததாக சமீபத்தில் ஒரு செய்தி நிலவியது என்பதை பார்த்தோம்.

இது குறித்து சிம்பு பேசுகையில்…

”எனது பெயரை களங்கப்படுத்த சிலர் துடிக்கின்றனர் என்ற செய்தி எனக்கொன்றும் புதிதல்ல. இவற்றையெல்லாம் மீறி வெற்றி காண்பவன் நான்.

ஆனால் நான் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு நடிகையை பற்றி தனிப்பட்ட ட்வீட் ஒன்றை போட்டேன் என்பது முற்றிலும் பொய்யான, உண்மைக்கு மாறான, எனது மனதை புண்படவைக்கும் செய்தி.

பொறுப்பற்ற சிலர் எனது பெயரில் போலியான சமூக ஊடக அக்கௌன்ட் மூலம் இது போன்று ட்வீட் செய்வது எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை,

ஆனால் இந்த உண்மையற்ற, போலியான செய்தியை சில ஊடகங்கள் நம்பி, அதனை வெளியிடுவது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. எந்த ஒரு ஊடகத்துக்கும் உண்மையான செய்தியை பொறுப்புடன் தருவதே முதன்மை காரியமாக இருக்க வேண்டும் என்பதை நம்புபவன் நான்.

இது போல் என் பெயரால் போலியாக உருவாக்கப்பட்டுள்ள அக்கௌண்ட்டுகளால் பரப்பப்படும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் எனது தரப்பிலிருந்து அதிகாரபூர்வமாக வரும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிடுமாறு அனைத்து ஊடக நண்பர்களை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்”. என தெரிவித்துள்ளார்.

Simbu aka STR request media do not spread rumours

str statment to media

 

பகத்பாசில் பிறந்தநாளில் வேலைக்காரன் செகன்ட் லுக் வெளியானது

பகத்பாசில் பிறந்தநாளில் வேலைக்காரன் செகன்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

velaikkaran 2nd lookமோகன்ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஸ்நேகா, பிரகாஷ்ராஜ், சதீஷ், ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் பகத்பாசில் நடித்துள்ளார்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை 24ஏஎம். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில் ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று பகத்பாசில் பிறந்தநாளை முன்னிட்டு இதன் செகண்ட் லுக் போஸ்ட்ரை வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் மற்றும் பகத்பாசில் இருவரும் உள்ளனர்.

இப்படத்திற்காக தன் சொந்த குரலில் தமிழில் டப்பிங் பேசினார் பஹத்பாசில் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaikkaran 2nd look released on Fahad Fazhil Birthday

Exclusive: மீண்டும் இணையும் சசிகுமார்-விஜய்சேதுபதி

Exclusive: மீண்டும் இணையும் சசிகுமார்-விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sundarapandiyanதமிழ் சினிமாவில் ஒரு சில கலைஞர்களே கிராமத்து கதைகளை மணம் மாறாமல் தருவதில் வல்லவர்கள்.

இதில் சசிகுமார் மற்றும் விஜய்சேதுபதி முக்கியமானவர்கள்.

சசிகுமார் தற்போது முத்தையா இயக்கத்தில் கொடிவீரன் படத்தில் நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதி 6 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம்.

இது தொடர்பாக ஒரு இயக்குனர் இருவரையும் சந்தித்து பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இப்படத்தை இயக்குவது யார்? தயாரிப்பது யார்? என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

இவர்கள் இருவரும் சுந்தரபாண்டியன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Again Vijay Sethupathi and Sasikumar teamsup for new project

விஜய் ரசிகர்களுக்கு பக்கா மாஸ் மெர்சல் சிங்கிள்

விஜய் ரசிகர்களுக்கு பக்கா மாஸ் மெர்சல் சிங்கிள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mersal vijayஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மெர்சல் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் பாடல்கள் வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகப்பிரண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இதில் இடம் பெற்றுள்ள சிங்கிள் ட்ராகை மட்டும் இன்னும் ஓரிரு தினங்களில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கு PAKKA MASS MERSAL SINGLE என்று பெயரிட்டு ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Pakka Mass Mersal Single from Mersal movie coming soon

A single is on it’s way. Pakka mass.The name is

விவேகம் பாடல்கள்; அஜித் ரசிகர்களுக்கு அனிருத்தின் அல்டிமேட் ட்ரீட்

விவேகம் பாடல்கள்; அஜித் ரசிகர்களுக்கு அனிருத்தின் அல்டிமேட் ட்ரீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith anirudhஅஜித் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த விவேகம் படத்தின் பாடல்கள் இன்று ஆகஸ்ட் 7ஆம் தேதி 5 மணிக்கு வெளியானது.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சிவா இயக்கியிருக்கிறார்.

இதில் அஜித்துடன் பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், கருணாகரன், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம் பெற்ற 3 பாடல்களை ஏற்கனவே தனித்தனியாக படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதில் ‘சர்வைவா’ பாடலை அனிருத்துடன் யோகி.பி, மாலி மனோஜ் ஆகியோர் பாடியுள்ளனர்.

‘தலை.. விடுதலை’ பாடலை அனிருத்துடன் ஹாரிஷ் ஸ்வாமிநாதன் பாடியுள்ளார்.

காதலாட பாடலை ஷாசா திருப்பதி, ப்ரதீப் குமார் ஆகியோர் பாடியுள்ளனர்.

இத்துடன் 1.24 நிமிடம் கொண்ட ஏகே தீம் மியூசிக்கும் இடம்பெற்றுள்ளது.

வெறியேற பாடலை பூர்வி கெளடிஷ், எம்.எம்.மானசி ஆகியோர் பாடியுள்ளனர்.
நெவர் கிவ் அப் பாடலை ராஜகுமாரியுடன் அனிருத் இணைந்து பாடியுள்ளார்.

இதன் அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளதால், இது அனிருத்தின் அல்டிமேட் ட்ரீட் என்கின்றனர்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது.

Vivegam songs released Ajith and Anirudh fans excitement

நானும் ரஜினி ரசிகன்தானே அப்படி பேசுவேனா.? பார்த்திபன் விளக்கம்

நானும் ரஜினி ரசிகன்தானே அப்படி பேசுவேனா.? பார்த்திபன் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Parthibanஉதயநிதி, நிவேதா பெத்துராஜ், சூரி, பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ள படம் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’.

தளபதி பிரபு இயக்கியுள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 11ஆம் தேதி இப்பட வெளியாகவுள்ள நிலையில், இப்படக்குழுவினர் புரமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இதில் பார்த்திபன் பேசும்போது… ‘ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி கடவுளிடம் தான் கேட்கனும். ஆனால் தனக்கு கடவுள் பாஷை தெரியாது என அவருக்கே உரித்தான பாணியில் கிண்டலாக பேசினார்.

ஆனால் இது ரஜினி ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

எனவே இதுகுறித்து பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார். அதில்…

கமல்+ரஜினி ரசிகன் நான். அதிலும் ரஜினி சார் எனக்கு நெருக்கமான நண்பர். பாபுஜி என்ற தயாரிப்பாளரிடம் ’பார்த்திபனை ஹீரோவா போட்டு படம் எடுங்கள்’ எனத்தூண்டியவர். Ktvi (கதை திரைக்கதை வசனம் இயக்கம்) பார்த்து மெச்சியவர்.

அவருடன் விவாதங்களில்… என் எதிர் கருத்தை ரசித்து மதிப்பவர். உதாரணத்திற்கு ’எந்த கோவிலுக்கு வெளியே பிச்சைக்காரர்கள் இல்லையோ, அந்த கோவிலுக்கு உள்ளே தான் கடவுள் இருக்கிறார்’ என்ற என் அக(ழ்வு)ஆராய்ச்சி கூட மறுப்பாக இருந்தாலும் வெறுப்பாக நோக்கமாட்டார்.

நேற்றைய என் பேட்டி கூட அவர் சொன்ன அதே வார்த்தைகளை வழக்கமான என் நகைச்சுவை கலந்து ரசிக்க சொன்னதேயன்றி அவரது ரசிகர்களைப் புண்படுத்தும் நோக்கமில்லை. அப்படியானால் அது என்னையும் தானே புண்படுத்தும்? (காண்க முதல் வரி).

இதே கேள்விகளுக்கு இதே பதில்களை இதே சிரிப்புடன் போன மாதமும் சொன்னேன். சிறு சலசலப்புமில்லை ஆனால் நேற்றைய மேடையும் சூழலும் ஏதோ ஓர் அரசியலை கிண்டியிருப்பதை அறிகிறேன்.

இருவரும் அரசியலுக்கு வந்தாலும் ஆதரிப்பேன். காரணம், அரசியலில் ஆதாயம் தேவையில்லை இருவருக்கும்.

ஆனால் விமர்சிப்பது தனிமனித உரிமை. பொதுவாழ்வில் விமர்சனங்களை எதிர்கொள்ள இன்னும் தொண்டர்களாக மாறாத ரசிகர்களுக்கு சிரமமாகவே இருப்பதால் அவர்களின் கோபத்தை சிலர் கொச்சையாகவும் பலர் ரஜினி சாரின் கண்ணியத்துடனும் மரியாதையுடனும் ’நீங்களுமா?’ என அதிர்ந்திருக்கிறார்கள்.

அவர்களின் மென்மையான உணர்வு புரிவதால் இந்த விளக்கத்தை மனப்பூர்வமாக தெரிவிக்கிறேன். நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அந்த நாள் விரைவில் வர வேண்டுமென அவர் வணங்கும் ஆண்டவனை நானும் வேண்டுகிறேன்.” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Parthiban clarifies his statment about Rajini and God language

More Articles
Follows