தல-தளபதிக்கு இப்படி செய்வீர்களா சித்தார்த்..?; சூடான பிரபாஸ் ரசிகர்கள்

siddharthசினிமாவில் சைலண்டாக நடித்தாலும் அவ்வப்போது பொது வாழ்க்கையில் சில சர்ச்சையான கருத்துக்களை பேசுபவர் நடிகர் சித்தார்த்.

அண்மையில் ‘பாகுபலி’ புகழ் பிரபாசுக்கு அவரது ரசிகர்கள் இன்னும் 100 நாட்களில் பிறந்தநாள் வரவுள்ளதாக கூறி ஒரு ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வந்தனர்.

இதை பார்த்த சித்தார்த் சும்மா இல்லாமல் பிரபாசின் அடுத்த ஆண்டு பிறந்தநாளுக்கு ஒரு ஹேஸ்டேக்கை உருவாக்கி அதை பகிர்ந்தார்.

இதனால் பிரபாஸ் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்தனர்.

பிரபாஸைக் கிண்டல் செய்வதைப் போல தல தளபதிக்கு இப்படி கூற முடியுமா? என கேட்கத் தொடங்கினர்.

அதற்குப் பதிலளித்த சித்தார்த், “இது வெறும் காமெடிக்காக போட்ட பதிவுதான். நகைச்சுவையை நகைச்சுவையாகவே கருத வேண்டும்” என்று பதில் அளித்துள்ளார்.

Overall Rating : Not available

Latest Post