கொரோனா சித்த மருத்துவரும் தீவிர ரஜினி ரசிகருமான வீரபாபு ஹீரோவானார்

கொரோனா சித்த மருத்துவரும் தீவிர ரஜினி ரசிகருமான வீரபாபு ஹீரோவானார்

கொரோனா அலையின்போது அதிகம் பிரபலமானவர் சித்த மருத்துவர் வீரபாபு.

ரஜினியின் தீவிர ரசிகரான இவர் உழைப்பாளி ஓட்டல் மற்றும் உழைப்பாளி மருத்துவமனையும் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவரே எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். அந்தப் படத்துக்கு `முடக்கறுத்தான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் புதிய படம் இது .

இப்படத்தை வயல் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.அருள் செல்வன் ஒளிப்பதிவு செய்ய , சிற்பி இசையமைக்கிறார். மேலும் இப்படத்திற்கு பழனி பாரதி பாடல்களை எழுதுகிறார் .

நீண்ட இடைவெளிக்கு பிறகு இசையமைப்பாளர் சிற்பி & பழனி பாரதி இணையும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது .

படத்தொகுப்பினை ஆகாஷும் , சண்டை பயிற்சியை சூப்பர் சுபராயனும் மேற்கொள்கிறார்கள் . கதை நாயகியாக மஹானா நடிக்கிறார் .

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்றுு நடைபெற்றது . படக்குழுவினர் மற்றும் சிறப்பு அழைப்பாளராக சுரேஷ் காமாட்சி மற்றும் பலர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் .

நடிகர் & இயக்குனர் வீரபாபு பேசியவை,

சிறு வயதிலிருந்தே சினிமா மீது எனக்கு ஆர்வம் அதிகம். இந்தத் துறையிலும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தேன் .தற்போது அது நிஜமாகி உள்ளது .குழந்தைகளின் வாழ்க்கையை முடக்கும் கயவர்கள் பற்றிய கதைதான் முடக்கறுத்தான். நிறைய குழந்தைகள் பல்வேறு சூழ்நிலை காரணமாக சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கான முழுக்க முழுக்க ஒரு அமைப்பு, திட்டம் உருவாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. குழந்தைகளுக்கான பல பாதுகாப்பு அமைப்புகள் உள்ளது .அது இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும். இந்த படத்தை ஒரு பார்வையாளனாக பார்த்து சொல்கிறேன் இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி அடையும்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியவை,

இந்த கொரோனா காலத்தில் எங்கு திரும்பினாலும் உயிரிழப்பு பற்றிய செய்திகள் வந்த சமயத்தில் உயிர்களை காப்பற்றிய மருத்துவர் என்ற செய்தி கேட்டு மகிழ்ந்தேன் . ஒருநாள் வீரபாபு சந்திப்பின்போது கதையை பற்றி அவர் சொன்னார்.

இந்த காலகட்டத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு முக்கியமான கதை .அருமையாக வந்துள்ளது. குறிப்பாக சித்ரா பாடிய பாடல் ஒன்று சிறப்பாக வந்துள்ளது. பொதுவாக நடிப்பது சுலபம், பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் நடிப்பது சிரமம். ஆனால் அதையும் சிறப்பாக வீரபாபு செய்துள்ளார் .கண்டிப்பாக அவர் ஜெயிப்பார்.

நடிகர் மயில்சாமி பேசியவை,

இந்த படத்தில் நான் ஒரு குடிகாரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளேன். ஒரு குடிகாரனை எப்படி திருத்துவது என்ற ஒரு நுணுக்கமான முறையை சொல்லியுள்ளார் வீரபாபு.

தயாரிப்பாளர் அழகன் தமிழ் மணி பேசியவை,

நானும் வீரபாபுவும் 20 வருட நண்பர்கள். இந்த கொரோனா காலகட்டத்தில் பல மக்களின் உயிரை காப்பாற்றிய வீரபாபு இந்த படத்தை நீங்கள் தான் தயாரிக்க வேண்டும் என என்னிடம் கூறினார். அதனால் எனது வயல் மூவிஸ் நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்து இருக்கிறேன். இப்படத்தில் என்னையும் நடிக்க வைத்துள்ளார். தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் .

பாடலாசிரியர் பழனி பாரதி பேசியவை,

இந்த கொரோனா காலகட்டத்தில் பல உயிர்களை காப்பாற்றியவர் வீரபாபு ,மனித நேயம் மிக்கவர். குழந்தை கடத்தல் என்பது இன்று பயங்கரவாதமாக உள்ளது .குழந்தைகள் பிச்சை எடுப்பதற்காக பயன்படுத்தப்படுகிறார்கள்.

அதனை கண்டிக்கும் விதமாக சிறந்த கதையை வீரபாபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் வரும் நான்கு பாடல்களும் பேசப்படும் பாடல்களாக அமையும் என்பது உண்மை. இப்படத்தில் நான்கு பாடல்களில் இரண்டு பாடல்களை கேட்டால் கண்களில் கசியும்.

இசையமைப்பாளர் சிற்பி பேசியவை,

விநாயகர் சதுர்த்தி அன்று இந்த படத்தின் டீசர் வெளியாவது இறைவனின் ஆசீர்வாதம் என்று தான் சொல்ல வேண்டும்.12 ஆண்டுகள் கழித்து இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளேன் இந்த வாய்ப்பினை தந்த இயக்குனர் வீரபாபு அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரபாபு அவர்கள் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் என் நட்பு வட்டாரத்தில் இருக்கும் மனித நேயம் உள்ளவர். வீரபாபு சிறந்த கதையை தேர்ந்தெடுத்து இயக்கியுள்ளார். படத்தின் பாடல் மிகவும் அருமையாக வந்துள்ளது கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நடிகை மஹானா கூறியவை,

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பத்திரிக்கை நண்பர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தில் நான் ஒரு குறும்புக்கார கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளேன். இப்படத்தில் 4 பாடல்கள் உள்ளது. வீரபாபு சிங்கிள் டேக்கில் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் குழந்தைகளுக்கு இப்படம் மிகவும் பிடிக்கும்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து -இயக்கம் – K .வீரபாபு
தயாரிப்பு – வயல் மூவிஸ்
இணை இயக்குனர் – மகேஷ் பெரியசாமி
ஒளிப்பதிவு -அருள் செல்வன்
இசை -சிற்பி
தயாரிப்பு நிர்வாகம் – வேதா ரவி , ECR அன்பு
பாடல்கள் -பழனி பாரதி
படத்தொகுப்பு -ஆகாஷ்
சண்டை பயிற்சி -சூப்பர் சுப்பராயன்
கலை இயக்கம் – பிரபஞ்சன்
விளம்பர வடிவமைப்பு – ப்லெஸ்சன்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்

Siddha Doctor Veera Babu turns hero

அண்ணாத்த பர்ஸ்ட் லுக்கை ரஜினி வீட்டில் வைத்து வழிபட்ட ரசிகர்கள்

அண்ணாத்த பர்ஸ்ட் லுக்கை ரஜினி வீட்டில் வைத்து வழிபட்ட ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது.

அதன்படி காலையில் அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் அடுத்த நிமிடமே அதனை ப்ளக்ஸ் பேனர்கள் போஸ்டர் என ரஜினி ரசிகர்கள் அடிக்கத் தொடங்கினர்.

அதுபோல் ஆட்டோக்களிலும் சிலர் ரஜினி அண்ணாத்த ஸ்டிக்கர்கள் ஒட்டி அதனை போட்டோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.

பர்ஸ்ட் லுக் பேனருடன் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

சென்னையிலுள்ள சில ரசிகர்கள் ஒருபடி மேலே அதாவது… அண்ணாத்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் பேனர் போட்டு போயஸ் கார்டன் சென்று ரஜினி வீட்டில் வாசலில் வைத்து போட்டோ எடுத்துக் கொண்டுள்ளனர்.

சிலர் அந்த பேனரை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த போட்டோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Rajini fans celebrates Annaththe first look posters goes viral

33 பிரபலங்கள் வெளியிடும் ஹரி – அருண்விஜய் கூட்டணியின் படத்தலைப்பு இதோ..

33 பிரபலங்கள் வெளியிடும் ஹரி – அருண்விஜய் கூட்டணியின் படத்தலைப்பு இதோ..

இதன் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகிறது. அருண்விஜய் நடிக்கும் 33வது படமான இதை, விஜயசேதுபதி, கீர்த்திசுரேஷ், ஆர்யா, ஆதி, விஜய்ஆண்டனி, டோவினோ தாமஸ், அனுராக் காஷ்யப், விஷ்ணுவிஷால், சாந்தனு, அதர்வா, விக்ரம்பிரபு, சிபிராஜ், பா.ரஞ்சித், விக்னேஷ்சிவன், சீனுராமசாமி, பிரசன்னா, அசோக்செல்வன், கிருஷ்ணா, ஆர்.பார்திபன், சேரன், கவுதம்வாசுதேவ்மேனன், வெங்கட்பிரபு, அறிவழகன்,சாம்.சி.எஸ், நவீன், வரலட்சுமி,ஐஸ்வர்யாராஜேஷ், ரெஜினாகசண்ட்ரே, நிக்கிகல்ரானி, மஹிமாநம்பியார், வேதிகா, கார்த்திக்நரேன், அஜய்ஞானமுத்து ஆகிய 33 சினிமா பிரபலங்கள் சேர்ந்து இன்று வெளியிடுகிறார்கள்.

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படத்திற்கு “யானை” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த இவர் தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும் நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஒரு படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள்.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ பம்பர் ஹிட்டானது இந்நிலையில் இப்படத்திற்கு ‘யானை’ எனபெயரிடப்பட்டுள்ளது, ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது.

அருண் விஜய்,நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் சமுத்திரகனி, ராதிகா, யோகிபாபு, KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடியில், பழனி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது. இரண்டு பாடல்கள் மற்றும் அனல் அரசுவின் அற்புதமான சண்டை அமைப்பில் மூன்று சண்டைக்காட்சிகள் உட்பட, படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து மீண்டும் தூத்துக்குடி, ராமேஸ்வரம், பழநி பகுதிகளில் நடைபெறுகிறது.

இயக்குநர் ஹரியின் தனித்தன்மை மிக்க பரபர திரைக்கதையில்,
நடிகர் அருண் விஜய் இதுவரை திரையில் கண்டிராத வகையில் , கிராமமும் நகரமும் கலந்த பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:
இசை: GV. பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: கோபிநாத்
எடிட்டிங்: ஆண்டனி
ஸ்டண்ட்: அனல் அரசு
கலை: மைக்கேல்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
இணை தயாரிப்பு: G.அருண்குமார்
தயாரிப்பு: டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் Drumstick Productions எஸ்.சக்திவேல் .

Hari – Arun Vijay’s new film title is out

விஜய் கிட்ட 150 முறை சான்ஸ் கேட்டுட்டேன்.; சிம்பு திருமணத்திற்காக காத்திருக்கும் ஜெய்

விஜய் கிட்ட 150 முறை சான்ஸ் கேட்டுட்டேன்.; சிம்பு திருமணத்திற்காக காத்திருக்கும் ஜெய்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் நேற்று மாலை உறுப்பினர்களின் சந்திப்பு நடைபெற்றது.

இந் நிகழ்வில் மாஸ்டர் தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, நடிகர் ஜெய் மற்றும் சுப்பு பஞ்சு கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் சுவாரஸ்யமாக பல செய்திகளை பகிர்ந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்கள் பேச்சு…

இதில் நடிகர் ஜெய் பேசும்போது…

‘பகவதி’ படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்தேன். அதன் பிறகு அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று இதுவரை 150 தடவை வாய்ப்பு கேட்டு விட்டேன்.

ஆனால், அவர் நீ தான் ஹீரோ ஆகிட்டல்ல.. அப்புறம் ஏன்.. என்று கேட்டு விட்டார்.

திருமணம் எப்போது என்ற கேள்விக்கு, சிம்பு திருமணத்திற்கு பிறகு நான் திருமணம் செய்து கொள்வேன். அனேகமாக சிம்புக்கு அடுத்த வருடம் திருமணம் நடந்து விடும் என்று நினைக்கிறேன் என்றார்.

இசையமைக்க சுசீந்திரன் கேட்டுக் கொண்டதால் ,தான் இசையமைப்பாளரானதாக விரைவில் அந்த பாடல்கள் வெளியாகும் என்ற சந்தோஷத்தை பகிர்ந்தார்..

பஞ்சு சுப்புவிடம்,…

‘கசடதபற’வில் வில்லனாக நடித்த அனுபவம் பற்றி கேட்டதற்கு, “நான் வில்லனாக நடிப்பது முதல் முறையல்ல. நான் நடிக்க வந்த ஆரம்பத்தில் ‘அரசி’ சீரியலில் கொடூர வில்லனாக நடித்திருந்தேன். அதில் நடித்தபோது, ஊரே திட்டித் தீர்த்தது. ஆனால், மக்கள் மனதில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ நின்று விட்டது.

என்னைப் பொருத்தவரை இப்படித்தான் நடிப்பேன் என்பது கிடையாது. எந்த மாதிரி கதாபாத்திரமானாலும் நடிக்கத் தயார்தான்” என்றார்.

‘ஓடிடியால் தியேட்டர்களுக்கு எதிர்காலம் இருக்குமா?’ என்ற கேள்விக்கு,

“ஓடிடி போல் எத்தனை புதிய விஷயங்கள் வந்தாலும் தியேட்டரில் படம் பார்க்கிற அனுபவம் எதிலும் கிடைக்காது.

சினிமா இருக்கும்வரை தியேட்டர்களும் இருக்கும்” என்றார்.

ஜெய் இசையமைப்பாளர் ஆகியிருக்கிறாரே. உங்கள் படத்தில் அவருக்கு வாய்ப்பு தருவீர்களா?’ என்று கேட்டதற்கு…

“அப்பா எடுத்த எல்லா படங்களுக்கும் இசை இளையராஜாதான். நட்பு அன்பு காரணமாக அதை அவர் கொள்கையாகவே கடைப்பிடித்தார். இளையராஜா இல்லையென்றால் அவரது வாரிசுகள்தான் எங்கள் படங்களுக்கு இசையமைப்பார்கள். ஜெய் என் தம்பி எப்போதும் எங்கள் படங்களில் நடிக்கலாம்” என்றார்.

விரைவில் அடுத்தடுத்த படங்கள் தயாரிக்கும் முயற்சியில் இருப்பதாக சொன்னார்

மாஸ்டர் பட தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ பேசும் போது, மதுரையில் மிடில் கிளாஸ் குடும்பம். என் அப்பா பள்ளி ஆசிரியர்.

மாமியார் கணவர் எல்லாருமே கல்வி துறையில் இருந்தவர்கள். ஆனால் விஜயின் ஆரம்ப கட்ட படங்கள் சில தயாரித்தோம். பல்வேறு துறைகளில் நாங்கள் பயணிக்கிறோம் சரியான திட்டமிடல் அவசியம். பெண்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுக்கிறேன்.

அவரது திறமைகள் முடங்கிவிட கூடாது. அவர்கள் எல்லா துறைகளிலும் வளர்ச்சி அடைய வேண்டும். காலம் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் மீண்டும் விஜய்யுடன் இணைந்து படம் செய்வோம்.

தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் என் மருமகன் படத்தை தயாரித்து வருகிறோம். என்றார்.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சங்கம் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது .

சங்க உறுப்பினர்களுக்கு பண்டிகைக்காலம் என்பதால் அரிசி போன்ற அத்யாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன .

நன்றி ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் கார்த்திக்..அவர்களுக்கு.

Jai talks about Vijay and Simbu in recent event

புலமைப்பித்தன் பாடல்களால் என் படங்களுக்கு பெருமை..; சிவகுமார் புகழஞ்சலி

புலமைப்பித்தன் பாடல்களால் என் படங்களுக்கு பெருமை..; சிவகுமார் புகழஞ்சலி

புலவர் புலமைபித்தன் கோவை மாவட்டம் சூலூரில், எனக்கு 5 ஆண்டு முன்பு பள்ளி இறுதி படிப்பை முடித்தவர்.

முறையாக தமிழ் படித்து புலவரானவர். மில் தொழிலாளியாக வாழ்க்கையைத் துவக்கியவர்.

ஆசிரியர் பணியினைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்களின் “குடியிருந்த கோயில்” படத்திற்கு, ‘நான் யார் நான் யார் நீ யார்.. ‘ பாடல் எழுதி அதன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இலக்கியத் தரமுள்ள பாடல்கள் எழுதுவதில் தனித்துவமாக விளங்கினார்.

என் படங்கள் பல அவர் பாடல்களால் பெருமை பெற்றன.

‘ஆகாயம் பூமி என்றும் ஒன்றா?
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்..” என்று ‘சாமந்திப்பூ’ படத்திற்கு பாடல் எழுதி கொடுத்தார். நாயகி சோபாவை நினைத்து படத்தில் நான் பாடிய பாடல்.

எனது 100 -வது படத்தின் உயிராக மக்கள் கொண்டாடிய பாடல் ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி, பச்சமல பக்கத்திலே மேயுதின்னு சொன்னாங்க..’

1979-ம் ஆண்டின் மிகச்சிறந்த பாடலாக தமிழக அரசு விருது பெற்றது. இளையராஜாவும், எஸ்.பி.பி யும் அவர் வரிகளுக்கு உயிர் கொடுத்தனர்.

எம்.ஜி.ஆர் அரசில் அரசவைக் கவிஞராகவும், மேல்சபைத் துணைத் தலைவராகவும் நியமிக்கப் பட்டார்.

தமிழீழப் போராளி பிரபாகரனுக்கு துவக்க காலத்தில் தன் வீட்டில் அடக்கலம் கொடுத்தவர்.

திருமணத்திற்கு முன்னரே தன் புதல்வி தீ விபத்தில் அகால மரணமடைந்த போதும், தன் மகன் மோட்டார் விபத்தில் அகப்பட்டு ‘கோமா’ நிலையில் 11மாதங்கள் இருந்து இறந்த போதும் கலங்காத நெஞ்சுரம் மிக்கவர்.

சமரசம் செய்து கொள்ளாத திராவிட சிந்தனையாளர், பெரியாரின் முதல் வரிசை சீடர். அவரது இழப்பு கலை இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத ஒன்று.

அவரை தன்னுடைய 75வது வயதில் இழந்திருக்கும் அவரது துணைவியாருக்கும், மருமகளுக்கும், பேரன் திலீபனுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

Sivakumar’s condolence message for lyricist Pulamai Pithan

‘அண்ணாத்த’ ஆன் தி வே..; விநாயகர் சதுர்த்தியில் ரஜினியின் டபுள் ட்ரீட்

‘அண்ணாத்த’ ஆன் தி வே..; விநாயகர் சதுர்த்தியில் ரஜினியின் டபுள் ட்ரீட்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’.

இந்தப் படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ரஜினி படத்திற்கு இமான் இசையமைப்பது இதுவே முதன்முறை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்புள்ளது என தகவல் பரவியது.

இந்த நிலையில் நாளை (செப்டம்பர் 10) காலை 11 மணிக்கு ‘அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

மாலை 6 மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியாகவுள்ளது.

Annaatthe first look and motion poster release update

More Articles
Follows