கமல் 1… ரஜினி 3… இது சிபிராஜ் போடும் டைட்டில் கணக்கு

Sibiraj next movie titled Shiva Directed by Dharani Dharanசத்யராஜ் மற்றும் சிபிராஜ் இணைந்து நடித்த ‘ஜாக்சன் துரை’ படத்தை இயக்கினார் தரணிதரன்.

இப்படம் வெற்றி படமாக அமையவே தற்போது சிபிராஜை மீண்டும் இயக்கவுள்ளார் தரணிதரன்.

இப்படத்தில் ரம்யா நம்பீசன் நாயகியாக நடிக்கிறாராம். இவர்கள் இருவரும் ஏற்கெனவே சத்யா படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்நிலையில் இப்படத்திற்கு சிவா என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல் படத்தலைப்பான ‘சத்யா’ என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்தார் சிபிராஜ்.

அதற்கு முன்பே போக்கிரி ராஜா என்ற ரஜினி படத்தலைப்பில் நடித்தார்.

சிபிராஜின் மற்றொரு படத்திற்கு ரங்கா என்ற ரஜினி படத்தலைப்பையே வைத்துள்ளனர்.

ஆக கமல் தலைப்பில் ஒரு படம்.. ரஜினி படத்தலைப்பில் 3 படம் என சிபிராஜ் நடித்துள்ளது (வருவது) இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த சிவா படத்தை காவ்யா மகேஷ் என்பவர் தயாரிக்கிறாராம்.

Sibiraj next movie titled Shiva Directed by Dharani Dharan

Overall Rating : Not available

Latest Post