அப்பாவ நினைச்சா பெருமையா இருக்கு..; மநீம தோல்வி குறித்து கமல் மகள் ஸ்ருதி பேட்டி

அப்பாவ நினைச்சா பெருமையா இருக்கு..; மநீம தோல்வி குறித்து கமல் மகள் ஸ்ருதி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shruti haasan kamal haasanநடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

ஆனால் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

அவர் பாரதீய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசனிடம் தோற்றார்.

இதனையடுத்து.. “தேர்தல் வெற்றி எங்கள் இலக்கு அல்ல.. மக்கள் நலனே இலக்கு தொடர்ந்து மக்களுக்காக உழைப்பேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கமலின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தன் சமூகவலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது:

“எதுவாக இருந்தாலும் அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்.

அவர் வீழ்ந்து போகிறவர் அல்ல. போராடுகிறவர்.” என தெரிவித்துள்ளார்.

Shruti haasan’s emotional tweet on Kamal Haasan

MLAக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய ஸ்டாலின்.; மே 7ல் முதல்வராக பதவியேற்கிறார்.!

MLAக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து ஆட்சியமைக்க உரிமை கோரிய ஸ்டாலின்.; மே 7ல் முதல்வராக பதவியேற்கிறார்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mk stalin (3)நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது

இதனையடுத்து திமுகவின் சட்டப்பேரவைக் குழு தலைவராக முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மே 7ல் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கவர்னர் பன்வாரில் லால் புரோகித்தை சந்தித்து உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற 133 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை அளித்து தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்.

அத்துடன் பதவியேற்க புதிய அமைச்சர்கள் பட்டியலையும் ஆளுநரிடம் வழங்கினார் ஸ்டாலின்.

இதனையடுத்து நாளை மறுநாள் மே 7ஆம் தேதி காலை 9 மணியளவில் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்க உள்ளார் மு.க.ஸ்டாலின்.

MK Stalin set to take oath as CM on May 7

‘என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி..’ பாடல் புகழ் நடிகர் T.K.S.நடராஜன் காலமானார்.; நடிகர் சங்கம் இரங்கல்

‘என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி..’ பாடல் புகழ் நடிகர் T.K.S.நடராஜன் காலமானார்.; நடிகர் சங்கம் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TKS Natarajanபழம்பெரும் நடிகரும், நாட்டு புற பாடகரும், “என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி” பாடலின் மூலம் புகழ் பெற்ற பாடகருமான T.K.S.நடராஜன் (வயது 87) இன்று காலை இயற்கை எய்தினார்.

இரத்த பாசம், கவலை இல்லாத மனிதன், தேன்கிண்ணம், நேற்று இன்று நாளை, நான் ஏன் பிறந்தேன், குரு, தீ, வருஷம்16, வாத்தியார் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்ட ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார்.

படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் டப்பிங் யூனியன் ஆரம்பிப்பதற்கு முன்பாக, நாடகங்களில் நடித்துக் கொண்டே சினிமாவுக்கு டப்பிங் கொடுக்கும் வேலை செய்து வந்தார்.

யூனியன் இல்லாததால், மற்ற ஆர்ட்டிஸ்ட்டுக்கு டப்பிங் பேச தனக்கு தெரிந்த நாடக நடிகர் நடிகைகளை தேடி பிடித்து.. அவர்களை டைரக்டர்களுக்கு அறிமுக படுத்தி டப்பிங் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

அப்படியே நாடக நடிகைகள் பலருக்கும் நிறைய வாய்ப்பு வாங்கி கொடுத்து தானும் நடிகராக வலம் வந்துள்ளார். “கற்பகம்” படத்தில் கே.ஆர்.விஜயாவை அறிமுகப் படுத்திய பிரபல டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் ஆஸ்தான நடிகராக இருந்துள்ளார்.

நிறைய எம்.ஜி.ஆர் படங்களிலும் நாகேஷ் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அன்னாரது மறைவுக்கு அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலையும்.. அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்துக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டது..

#RIP – தென்னிந்திய நடிகர் சங்கம்
05.05.2021

Actor TKS Natarajan passed away

ஒரு தியேட்டரில் ஒரே நாளில் நடக்கும் கதை ஓடிடி-யில் ரிலீஸ்.; அட இது நல்லா இருக்கே.!

ஒரு தியேட்டரில் ஒரே நாளில் நடக்கும் கதை ஓடிடி-யில் ரிலீஸ்.; அட இது நல்லா இருக்கே.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MMOFஒரு திரையரங்கில் ஒரு நாளில் நடக்கும் கதையாக உருவாகி வரும் படம் ‘MMOF’

இப்படத்தை என் .எஸ். சி இயக்கி இருக்கிறார்.

திருமதி அனுஸ்ரீ வழங்கும் ஆர். ஆர். ஆர் மற்றும் ஜெகதீசன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் தமிழ் ,தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராகியுள்ளது.

அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக .வெளியாகி இருக்கிறது

இப்படத்தில் நாயகனாக ஜேடி. சக்கரவர்த்தியும் இவர் விஷாலின் சர்வம் மற்றும் அரிமா நம்பி படங்களில் நடித்தவர்.

நாயகியாக அக்ஷதாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்ரீராம் சந்திரா, மனோஜ் நந்தன், பேனர்ஜி, செம்மக் சந்திரா , க்ராக் ஆர். பி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார். அஞ்சி ஒளிப்பதிவு செய்துள்ளார். எடிட்டிங் அவலா வெங்கடேஷ். தயாரிப்பு ராஜசேகர்
மற்றும் ஜேடி காசிம்.

ஒரு திரையரங்கில் வரிசையாக கொலைகள் நடக்கின்றன. அந்தக் கொலைகளைச் செய்பவர் யார்? என்ன காரணம் ? என்பது புதிராக உள்ளது.

பரபரப்பான காட்சிகளோடு சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது.

திரை அரங்கில் நடக்கும் கொலைகளுக்கும் திரையரங்கில் காட்சிப்படுத்தும் படத்தில் வரும் காட்சிகளுக்கும் ஒரு தொடர்பு உள்ளது .அது என்ன ? என்பது வரை மர்மமாக இருக்கும். இது முழுக்க முழுக்க ஒரு திகில் படமாக உருவாகிறது.

இதற்கான படப்பிடிப்பு முழுதும் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் நடைபெற்றுள்ளது. படத்தில் மூன்று பாடல் காட்சிகள் உள்பட அனைத்து காட்சிகளுக்கும் அதே திரையரங்கில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது .

ஒரு திரையரங்கில் படத்தின் கதை நடந்தாலும் காட்சிகளில் நம்மை கவரும்படி அமைந்திருக்கும்.படத்தின் கதையும் காட்சிகளும் மொழி கடந்த உணர்வைத் தருவதால் மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகி அனைத்து மக்களும் பார்க்கக்கூடிய வகையில் விறுவிறுப்பாகவும் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

Movie name : MMOF

Hero : Jd chakravarthy
Heroine: akshatha
Akshithamudagal
Other artists
Sriram chandra(indian idle)
Manoj nandan
Benarji
Kirrak Rp
Chammak chandra

Techinicians

Music : Sai karthik
Dop. : Anji
Editor : avula venkatesh
Producer : Rajasekhar
& jd khasim
Director : N.S.C

JD Chakravarthy’s MMOF releases in OTT

டிராபிக் ராமசாமி மரணம்.: பெரிய கட்டிடங்களுக்கு பார்க்கிங் வசதி கட்டாயம் என ஆணை வாங்கியவர் இவரே.; அவரின் பாதை ஒரு பார்வை

டிராபிக் ராமசாமி மரணம்.: பெரிய கட்டிடங்களுக்கு பார்க்கிங் வசதி கட்டாயம் என ஆணை வாங்கியவர் இவரே.; அவரின் பாதை ஒரு பார்வை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல பிரச்னைகளுக்கு தீர்வு கண்டவர் டிராபிக் ராமசாமி.

2021 மார்ச் மாதம் இறுதி வாரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தார் இராமசாமி.

இவர் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 87.

இறப்பதற்கு முன்பு அவருக்கு கொரோனா நெகட்டிவ் என வந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மறைவிற்கு கனிமொழி, ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

டிராபிக் ராமசாமி கடந்து வந்த பாதை..
—————————————————————-

சென்னை சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவார்.

எனவே தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.

பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்ற நடைமுறையைக் கடைப்பிடித்தவர்.

இவரின் நேர்மையே இவருக்கு எதிரிகளை உருவாக்கி தந்தது. எனவே ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு இருந்தது.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது ப்ளக்ஸ் பேனர் கலாச்சாரம் அதிகளவில் இருந்தது. நடைபாதைகளில் மக்களுக்கு இடையூறாக பேனர் இருந்தால் இவரே தனி ஆளாக நின்று கிழித்து எறிவார்.

மேலும் அது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுப்பார்.

இவர் ஊர்க்காவல் படையிலும் முன்பு பணியாற்றியுள்ளார்.

சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத் தடை பெற்றவர் இவரே.

சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய முதலாளிகள் உள்ளனர்.

அவர்களுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க காரணமாக இருந்தார். அதன்படி கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு வழிமுறையை உருவாக்க இது வழி வகுத்தது.

சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார்.

“தேர்தல் களம்..*

2009 நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2015 ஸ்ரீரங்கம் சட்டமன்ற இடை தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

2015 ஆம் ஆண்டு சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக தனித்து நின்றார்.

டிராபிக் ராமசாமி-யின் வாழ்க்கை வரலாற்று படம் அவரது பெயரிலேயே உருவானது. இவரது கேரக்டரில் விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் நடித்திருந்தார்.

The one man army Traffic Ramaswamy passes away

குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும்.; சர்ச்சைக்குரிய கருத்தால் கங்கனா ரணாவத் ட்விட்டர் அக்கௌண்ட் முடக்கம்

குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும்.; சர்ச்சைக்குரிய கருத்தால் கங்கனா ரணாவத் ட்விட்டர் அக்கௌண்ட் முடக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kangana ranautபாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத்.

இவர் தற்போது தமிழில் விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற படத்தில் ஜெயலலிதாவாக நடித்து வருகிறார்.

சிறந்த நடிகைக்கான 4 தேசிய விருதுகளையும் வென்றுள்ளார்.

இவர் ஏதாவது கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர்.

கடந்த சில தினங்களாக மேற்கு வங்கத்தில் நடக்கும் கலவரங்கள் குறித்து அடிக்கடி பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அதன் காரணமாக அவருக்கும் டுவிட்டர் பாலோயர்களுக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.

இதனையடுத்து அவர் கருத்துக்கள் வன்முறையைத் தூண்டும் விதமாக இருந்ததாகக் கூறி டுவிட்டர் நிறுவனம் அவருடைய கணக்கை முடக்கிவிட்டது.

கங்கனாவின் கணக்கிலிருந்து வன்முறையைத் தூண்டும் விதமாக கருத்துக்கள் பதிவிட்டு வந்ததால் அவருடைய ட்விட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கியுள்ளோம் என ட்விட்டர் நிறுவனம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Twitter suspends Kangana Ranaut account permanently

More Articles
Follows