இரண்டு கேரக்டர்.. நான்கு கெட்டப் ; ‘பேரழகி’யாக அசத்தும் ஷில்பா மஞ்சுநாத்..!

இரண்டு கேரக்டர்.. நான்கு கெட்டப் ; ‘பேரழகி’யாக அசத்தும் ஷில்பா மஞ்சுநாத்..!

New Projectகிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘. ‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், காளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் படம் மூலம் பிரபலமான நடிகை கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர்.சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ், மீசை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

நாயகி ஷில்பா மஞ்சுநாத் இந்தப்படத்தில் நடித்த தனது அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்..

காளி, இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என இரண்டு படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் முதன்முதல் ஒப்பந்தமான படம் பேரழகி ஐ.எஸ்.ஓ தான். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம் தான். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் விஜயன் சொன்னபோதே இந்தப்படம் சம்திங் ஸ்பெஷல் என்று தோன்றியது.

இஸ்பேட் ராஜா படத்தில் என்னுடைய நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.. ஆனாலும் தமிழில் அறிமுக நடிகையாக என்னுடைய முதல் படமான இந்தப்படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தது உண்மையிலே மிகப்பெரிய சவாலாகத்தான் இருந்தது. இந்த வாய்ப்பு எனக்கு வந்த சமயத்தில் தமிழில் என்னுடைய படங்கள் கூட வெளியாகவில்லை.. ஆடிஷனில் கலந்துகொண்ட பின் தான் எனக்கும் இந்தப்படத்தில் நம்பிக்கை வந்தது.

இயக்குனரை முதலில் சந்தித்தபோதே பொட்டு இல்லாத என் முகத்தை பார்த்துவிட்டு இது ஹோம்லியான கதபாத்திரமாச்சே என சற்று தயக்கத்துடன் பார்த்தார். நான் உடனே உதவி இயக்குனரிடம் பேனா வாங்கிச்சென்று சில நொடிகளில் முகத்தில் பொட்டுடன் வந்து நின்றேன்.. அப்போதுதான் இயக்குனர் முகம் பிரகாசமானது. இருந்தாலும் நான்கைந்து முறைக்கும் மேல் ஆடிஷன்களில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. காரணம் எனது கதாபாத்திரம் பலவிதமான நடிப்பை வெளிப்படுத்த வேண்டி இருந்தது.

கதைப்படி எனது பாட்டி சச்சு ஒருகட்டத்தில் என்னைப்போலவே தோற்றம் கொண்ட இளம்பெண்ணாக மாறிவிடுகிறார். என்னுடைய உருவத்தில் அதேசமயம் சச்சும்மாவின் மேனரிஸங்களை, அவரது பாடி லாங்குவேஜை, வசனம் பேசும் விதத்தை என ஒவ்வொன்றையும் மிகச்சரியாக செய்ய வேண்டி இருந்தது.. என்னுடைய கேரக்டர் கமல்ஹாசன் மாதிரி அமைதியாக இருக்கும்.. ஆனால் சச்சும்மாவின் கேரக்டரோ வடிவேலு மாதிரி ஒரே கலாட்டாவாக இருக்கும்.. சச்சும்மா என் தோற்றத்திற்கு மாறியபின் நானும் அதேவிதமான நடிப்பை வழங்க வேண்டி இருந்தது. இதனால் நடக்கும் களேபரங்கள் எல்லாம் படத்தில் செம கலாட்டாவாக இருக்கும். ஒரே நேரத்தில் இரண்டுவிதமான கேரக்டர்களுக்குமான காட்சிகள் படமக்கப்பட்டதால் இரண்டு கேரக்டர்களுக்குமான உடைகள், வாட்ச், செருப்பு முதற்கொண்டு எல்லாவற்றிலும் ஆரம்ப நாட்களில் கொஞ்சம் குழப்பம் இருந்தது. ஆனால் போகப்போக சரியாகி விட்டது.

இதற்காகவே சச்சும்மா நடிக்கும் காட்சிகளில் அவரது நடிப்பை கூர்ந்து கவனித்து வந்தேன். நான் அப்படி கவனித்தேன் என்பது கூட இப்போதுவரை அவருக்கு தெரியாது. இதில் சச்சுவின் இளம்பருவ கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் ‘ரெட்ரோ’ காட்சிகளும் உண்டு.. முதல் படத்திலேயே ரெட்ரோ காட்சிகளும் எனக்கு கிடைத்து இன்னொரு அதிர்ஷ்டம் தான்.. இரண்டு வேடங்கள் தான் என்றாலும் கிட்டத்தட்ட நான்கைந்து விதமான நடிப்பை இதில் கொடுக்க வேண்டி இருந்தது.. அதேசமயம் இயக்குனர் விஜயன் கதையை உருவாக்கி இருந்த விதம், அழகாக எனது கதாபாத்திரங்களை உள்வாங்கி நடிக்க உதவியாக இருந்தது” என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.

அடுத்தடுத்த படங்கள் குறித்து கூறும்போது, “தற்போது ஒரு கன்னட படத்தில் நடித்து வருகிறேன்.. தமிழில் சில படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிவந்தாலும் எல்லாமே லவர் கேர்ள் கதாபாத்திரங்களாகவே வருகின்றன. பெரும்பாலும் நான் ஏற்கனவே நடித்த கதாபாத்திரங்கள் போலவே வருவதால் அவற்றை தவிர்த்து விடுகிறேன்.. நடிப்பில் புகுந்து விளையாடும் சவாலான கதாபாத்திரங்கள் என்றால் அதை மிஸ் பண்ணக்கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.

‘பிக்பாஸ்’ ஆரவ் உடன் பர்த்டே பார்ட்டி கொண்டாடிய ஓவியா

‘பிக்பாஸ்’ ஆரவ் உடன் பர்த்டே பார்ட்டி கொண்டாடிய ஓவியா

Oviya celebrated her birthday with Bigg Boss fame Aaravகடந்த 2017-ம் ஆண்டு தனியார் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்டார்.

இதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார்.

அப்போது சக போட்டியாளரான ஆரவ்வை காதலிப்பதாக கூறியிருந்தார் ஓவியா.

ஆனால் தற்போது நண்பர்களாக இவர்கள் நட்பை தொடர்கின்றனர்.

இந்நிலையில் ஆரவ்வுடன் தனது 28-வது பிறந்தநாளை நேற்று ஓவியா கொண்டாடி இருக்கிறார்.

ஆரவ் ஹீரோவாக நடித்து வரும் ‘ராஜ பீமா’ படத்தில், ஒரு பாடலுக்கு ஓவியா நடனமாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Oviya celebrated her birthday with Bigg Boss fame Aarav

சிம்பு திருமணம் பற்றி கேட்டவுடன் கண்ணீர் சிந்திய டி.ஆர்

சிம்பு திருமணம் பற்றி கேட்டவுடன் கண்ணீர் சிந்திய டி.ஆர்

T Rajendar clarifies about Simbu marriage டி.ராஜேந்தரின் இளைய மகனும் சிம்புவின் தம்பியுமான குறளரசன் தனது இஸ்லாமிய தோழி நபீலா அகமதுவை கடந்த ஏப்ரல் 26-ந் தேதி திருமணம் செய்தார்.

சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் திருமண வரவேற்பில் கலந்துக் கொண்டாலும் பத்திரிகையாளர்களை டி.ஆர். அழைக்கவில்லை.

இது திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பேச பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

அப்போது சிம்பு திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது அழுதார் டி.ராஜேந்தர்.

’இந்த கேள்வியை கேட்கும்படி வைத்த விதியின் மீதும், கடவுளின் மீதும் கோபப்படுறேன். சிம்பு திருமணம் விரைவில் இறைவன் அருளால் நடக்கும்’ என தெரிவித்தார்.

T Rajendar clarifies about Simbu marriage

ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் இத்தனை பாலிவுட் நடிகர்களா..?

ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் இத்தனை பாலிவுட் நடிகர்களா..?

Bollywood actors join with Rajinikanth in Darbarரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ பட சூட்டிங் மும்பையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

முருகதாஸ் இயக்கும் இப்படத்தை லைகா தயாரித்து வருகிறது.

ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் பணிபுரிய அனிருத் இசையமைக்கிறார்.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பிரபல இந்தி நடிகர் பிரதிக் பப்பர் வில்லனாக நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

இவருடன் மற்றொரு இந்தி நடிகர் ஜத்தின் சர்னாவும் இணைந்துள்ளார்.

இவர்களுடன் ஜத்தின் சர்னா மற்றும் சிராக் ஜனியும் இணைந்துள்ளனர்.

காப்பான் படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்துள்ள சிராக் ஜனி என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood actors join with Rajinikanth in Darbar

அதர்வாவின் ‘100’ பட ரிலீஸை தள்ளி வைத்த படக்குழு

அதர்வாவின் ‘100’ பட ரிலீஸை தள்ளி வைத்த படக்குழு

100 the filmசாம் ஆண்டன் இயக்கத்தில் அத்ரவா, ஹன்சிகா இணைந்து நடித்துள்ள படம் ‘100’.

அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சாம் சி.எஸ். இசையமைக்க கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘ஆரா சினிமாஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் மே 3-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் திடீரென்று ஒரு வாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

மே 9-ஆம் தேதிதான் வெளியாகும் என படக்குழுவினர் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஹரீஷ் கல்யாண் ஜோடியான ரெபா மோனிகா ஜான்!

ஹரீஷ் கல்யாண் ஜோடியான ரெபா மோனிகா ஜான்!

New Project (2)நவநாகரீக தோற்றமும், பக்கத்து வீட்டு பெண் போன்ற தோற்றமும் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே வாய்த்த ஒரு அம்சம். ரெபா மோனிகா ஜான் இந்த இரு அம்சங்களிலும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நேர்த்தியாக நடிக்கிறார். நிவின் பாலியின் ஜாக்கோபிண்டே ஸ்வர்க்கராஜ்ஜியம் படத்திற்கு பிறகு அவரது புகழ் கேரளா தாண்டியும் பரவலாகி இருக்கிறது. தென்னிந்திய மொழிகளில் கணிசமான படங்களில் நடித்து வரும் ரெபா, தற்போது ஹரீஷ் கல்யாணின் தனுசு ராசி நேயர்களே படத்திலும் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தின் இன்னொரு நாயகியாக ரியா சக்ரவர்த்தியை சமீபத்தில் அறிவித்தது படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரெபா மோனிகா ஜான் கூறும்போது, “இந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்னை பரிசீலித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனர் சஞ்சய் பாரதிக்கும் நன்றி. தயாரிப்பாளர் மலையாளத்தில் நான் நடித்த படங்களை பற்றி அறிந்திருக்கிறார். அதனால் இந்த கதாபாத்திரத்திற்கு நான் பொருத்தமாக இருப்பதாக உணர்ந்திருக்கிறார். அதே நேரத்தில், இயக்குனர் சஞ்சய் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க, என்னை தான் மனதில் நினைத்திருந்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையில், நான் இதுவரை செய்த படங்களுடன் ஒப்பிடும்போது இந்த படம் முற்றிலும் புதியதாக இருக்கும். தனுசு ராசி நேயர்களே குடும்பத்துடன் ரசிக்கும் காதல், நகைச்சுவை கலந்த ஒரு பொழுதுபோக்கு படம். சஞ்சய் எனக்கு கதையை விளக்கி கூறியபோது அது மிகவும் ஜாலியாக இருந்தது. இந்த குழுவில் ஒரு சிறந்த அனுபவத்தை எதிர்பார்க்கிறேன். குறிப்பாக, ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

ஸ்ரீகோகுலம் மூவிஸ் சார்பில் கோகுலம் கோபாலன் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடந்து வருகிறது. குறுகிய காலத்தில் படத்தை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

More Articles
Follows