பேரழகி ஐ.எஸ்.ஓ பர்ஸ்ட் லுக்கை டைரக்டர் எஸ்பி. ஜனநாதன் வெளியிட்டார்

பேரழகி ஐ.எஸ்.ஓ பர்ஸ்ட் லுக்கை டைரக்டர் எஸ்பி. ஜனநாதன் வெளியிட்டார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

perazhagiகிரியாமைன்ஸ் மூவி மேக்கர்ஸ் சார்பில் விஜயன்.சி என்பவர் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பேரழகி ஐ.எஸ்.ஓ ‘.

‘நீ என்ன மாயம் செய்தாய்’, ‘மித்ரா’ ஆகிய படங்களில் நடித்த விவேக் கதாநாயகனாகவும், விஜய் ஆண்டனியின் ‘காளி’ நாயகி ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும் நடிகை சச்சு, இயக்குனர் சரவண சுப்பையா, நடிகர்கள் லிவிங்ஸ்டன், ஆர். சுந்தர்ராஜன், டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

‘நாகேஷ் திரையரங்கம்’ புகழ் இ.ஜே. நவ்ஷாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்லஸ் தனா இசையமைத்துள்ளார்..

இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் அவர்கள் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் பட வெளியீடு விரைவில் நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சூர்யா ரசிகர்களுக்கு மார்ச் 5ல் செல்வராகவன் விருந்து

சூர்யா ரசிகர்களுக்கு மார்ச் 5ல் செல்வராகவன் விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya 36தானா சேர்ந்த கூட்டம் படத்தை தொடர்ந்து தற்போது செல்வராகவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா.

அண்மையில் இப்படத்திற்கான பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யாவுடன் சாய்பல்லவி, ரகுல் பிரீத் சிங் என இருவரும் நடித்து வருகின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மார்ச் 5 ம் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இந்தாண்டு 2018 தீபாவளிக்கு இப்படத்தை வெளியிட திட்டமிட்டு படக்குழு பணியாற்றி வருகிறது.

விஜய் மில்டனின் கோலிசோடா 2 படத்தை வெளியிடும் சத்யமூர்த்தி

விஜய் மில்டனின் கோலிசோடா 2 படத்தை வெளியிடும் சத்யமூர்த்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Clap Board Production Sathyamurthy releasing Goli Soda 2தப்புத்தண்டா படத்தில் நாயகனாக நடித்ததுடன் ‘கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ நிறுவனம் சார்பில் படத்தை தயாரித்தார் வி.சத்யமூர்த்தி.

இதை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான நெஞ்சில் துணிவிருந்தால் மற்றும் விஜய் சேதுபதி – கௌதம் கார்த்திக் நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்களை தமிழகம் முழுவதும் வெளியிட்டார்.

இதனை தொடர்ந்து ‘கிளாப்போர்ட் புரொடக்ஷ்ன்’ சார்பில் தயாரித்து வரும் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதே நிறுவனம் தற்போது கோடை கொண்டாட்டமாக மார்ச் 29 ஆம் தேதி அன்று வெளியாக உள்ள ‘கோலிசோடா 2’ படத்தையும் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இன்றைய சமூகவலைத்தள சூழலில், திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

தரமான கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்பானது உயர்ந்து கொண்டே போகின்றது.

அவர்களின் எண்ணங்களை அறிந்து, அவர்களுக்கு ஏற்றார் போல் தரமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து வழங்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்து வருகிறது ‘கிளாப்போர்ட் புரொடக்ஷன்’ நிறுவனம்.

“விஜய் மில்டனின் படங்கள் யாவும் தொழில் நுட்பத்திலும், கதைக்களத்திலும் வலுவானதாக இருக்கும். அதனால் தான் அவர் படங்கள் மீது எனக்கு எப்பவுமே ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உண்டு.

ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருந்த கோலிசோடா 2 படத்தின் டிரைலர், தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

கவுதம் வாசுதேவ் மேனன் குரலும், அவருடைய எதிர்பாராத பங்களிப்பும் டிரைலருக்கு பக்கபலமாய் அமைந்திருக்கின்றது.

விஜய் மில்டன் மற்றும் அவருடைய குழுவினர் மீது இருக்கும் முழு நம்பிக்கையில், நான் இந்த கோலிசோடா 2 படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை வாங்கி இருக்கின்றேன் என்றார் வி.சத்யமூர்த்தி.

Clap Board Production Sathyamurthy releasing Goli Soda 2

gst gautam

 

தன் ரசிகர்களுக்கு ரம்ஜான் விருந்து வைக்கும் தனுஷ்

தன் ரசிகர்களுக்கு ரம்ஜான் விருந்து வைக்கும் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush plans to release his VadaChennai movie on Ramzan 2018தனுஷ் நடிப்பில் இந்தாண்டு எந்த படங்களும் வெளியாகவில்லை.

எனவே அவரது படத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கௌதம் மேனன் இயக்கியுள்ள என்னை நோக்கி பாயும் தோட்டா எங்கே போனதே எனத் தெரியவில்லை.

தனுஷ் நடித்துள்ள தி எக்ஸ்ட்ராட்னரி ஜர்னி ஆஃப் பகிர் படம் மே மாத இறுதியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் வெற்றி மாறன் இயக்கியுள்ள வட சென்னை படத்தை ரம்ஜான் ஸ்பெஷலாக ஜீன் மாதம் திரையிட இருக்கிறார்களாம்.

மூன்று பாகமாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் மட்டும்தான் அன்று வெளியாகவுள்ளது.

இப்படத்தை லைகாவுடன் இணைந்து தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்துள்ளனர்.

சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ள இப்படத்தை 1970ஆம் காலங்களில் நடக்கும் கதையாக வடிவமைத்துள்ளனர்.

இதில் தனுஷ் உடன் அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், கருணாஸ், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

Dhanush plans to release his VadaChennai movie on Ramzan 2018

காலா டீசர் அப்டேட்ஸ்.; தயாரிப்பாளர் தனுஷ் புது முடிவு

காலா டீசர் அப்டேட்ஸ்.; தயாரிப்பாளர் தனுஷ் புது முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Rajinikanthரஜினி நடித்து காலா படத்தை ரஞ்சித் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீசரை நாளை மார்ச் 1ஆம் தேதி வெளியிட உள்ளதாக இதன் தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்திருந்தார்.

இந்த டீசரை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளனர்.

பொதுவாக டீசரை யு-டியூப்பில் மட்டுமே வெளியிடுவார்கள். ஆனால் இதனை பேஸ்புக் பக்கத்திலும் வெளியிட உள்ளனர்.

கபாலி டீசரில் நெருப்புடா பிஜிஎம் செம மாஸாக அமைந்த்து. அதுபோலவே காலா டீசரிலும் செமயான பிஜிஎம் ஒன்று உள்ளதாம்.

இப்படத்தில் ரஜினியின் பெயர் கரிகாலன் என்ற காலா சேட்டு என சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் உறக்கத்தை தொலைக்க வேண்டாம் என்ற நோக்கத்தில் நள்ளிரவு டீசரை வெளியிடாமல் நாளை காலை அல்லது மாலையில் வெளியிட உள்ளனர்.

ஸ்ரீப்ரியங்காவின் மிக மிக அவசரத்திற்கு கைகொடுக்கும் வெற்றிமாறன்

ஸ்ரீப்ரியங்காவின் மிக மிக அவசரத்திற்கு கைகொடுக்கும் வெற்றிமாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director Vetrimaaran going to release Miga Miga Avasaramஅமைதிப்படை 2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, இயக்குநராக அவதாரமெடுத்துள்ள படம் ‘மிக மிக அவசரம்’.

கதாநாயகியை பிரதானப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், ‘கங்காரு’, ‘வந்தா மல’, ‘கோடை மழை,’ ஸ்கெட்ச் ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபிரியங்கா பெண் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார்.

கதையை புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை, என் ஆளோட செருப்பைக் காணோம் ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் எழுதியுள்ளார்.

புகைப்படம், முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் ஆகிய படங்களில் கதா நாயகனாக நடித்துள்ள அரீஷ் குமார் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார்.

அவரோடு வழக்கு எண் முத்துராமன், லிங்கா, ஆண்டவன்கட்டளை அரவிந்த், ஈ. ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர், மாஸ்டர் சாமுண்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குநரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.

எப்போதுமே நல்ல படங்களை எடுப்பதிலாகட்டும், அப்படங்களை லாப நஷ்டம் எதிர்பாராமல் மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்ப்பதிலாகட்டும் …

தமிழ் சினிமாவில் மிக முக்கியமானவராக தன்னை அடையாளப்படுத்தி வருகிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

காக்கா முட்டை, விசாரணை, லென்ஸ் என நீளும் அந்த பட்டியலில் இப்போது மிகமிக அவசரம் படத்தையும் சேர்த்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

இந்நிலையில் பெண் காவலர்கள் இன்றைய சூழலில் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளையும் தைரியமாகப் பேசும் மிக மிக அவசரம் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் தனது பேனரில் வெளியிட இருக்கிறார்.

கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி உலகம் முழுக்க வெளியிடும் உரிமையைப் பெற்று வெளியிட இருக்கிறது.

இப்படத்தின் டிரைலர் வெளியீடு மார்ச் 19 ந்தேதி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

Director Vetrimaaran going to release Miga Miga Avasaram

mma sri priyanka

More Articles
Follows