ரஜினியின் 2.0 படத்தில் டப்பிங் பேசினாரா மகேந்திரன்.? ரகசியம் சொன்ன ஷங்கர்

ரஜினியின் 2.0 படத்தில் டப்பிங் பேசினாரா மகேந்திரன்.? ரகசியம் சொன்ன ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shankar reveals that Director Mahendran done dubbing in 2pointO movieகாலத்தால் அழிக்க முடியாத உதிரிப்பூக்கள், ஜானி, முள்ளும் மலரும் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகேந்திரன் இன்று (ஏப்ரல் 2) உடல் நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஷங்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

இயக்குநர் மகேந்திரன் சாருடைய படங்கள் என்றும் நம் மனதில் நிறைந்திருக்கும். நல்ல மனிதர். அவர் இல்லாதது ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது.

‘2.0’ படத்தில் அக்‌ஷய்குமார் கேரக்டருக்காக டப்பிங் பேச வேண்டும் என்று கேட்டேன். யோசிக்கவே இல்லை, ‘நான் பண்ணித் தருகிறேன்’ என்று உடனே வந்தார். ஆனால், பயன்படுத்த முடியாமல் போய்விட்டது.

இவ்வாறு பேசினார் ஷங்கர்.

பின்குறிப்பு… அக்‌ஷய்குமார் கேரக்டருக்கு ஜெயப்பிரகாஷ் வாய்ஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shankar reveals that Director Mahendran done dubbing in 2pointO movie

லைகா தயாரிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ்?

லைகா தயாரிக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் கீர்த்தி சுரேஷ்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Keerthy Suresh to play Kundhavai in Ponniyin Selvan Produced by Lycaகல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க திரையுலகினர் பலரும் முயற்சித்தனர்.

மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் ஆகியோருக்கும் இதை உருவாக்க முயற்சித்தனர். ஆனால் அவர்கள் தொடரவில்லை.

நாவலில் இடம் பெற்றுள்ள வந்தியதேவன், ராஜராஜ சோழன், பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதன், ஆதித்த கரிகாலன், குந்தவை, வானதி, நந்தினி உள்ளிட்ட கேரக்டர்களுக்கு நடிகர்களின் தேர்வு பெரும் சவாலாக இருந்தன.

தற்போது இதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் மணிரத்னம்.

இதை தயாரிக்க லைகா நிறுவனம் முன்வந்துள்ளது.

வந்தியதேவன் வேடத்தில் கார்த்தி நடிப்பார் என்ற தகவலை பார்த்தோம்.

தற்போது குந்தவை கேரக்டருக்கு கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் முக்கிய வேடங்களில் விக்ரம், ஜெயம்ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன்பாபு ஆகியோரும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

Keerthy Suresh to play Kundhavai in Ponniyin Selvan Produced by Lyca

‘முள்ளும் மலரும் ‘ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது; மகேந்திரன் பற்றி கமல்

‘முள்ளும் மலரும் ‘ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது; மகேந்திரன் பற்றி கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal paid homage to Mahendran and shares his friendship with himதமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த உதிரிப்பூக்கள், தங்கப்பதக்கம், ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் மகேந்திரன்.

அண்மையில் வெளியான பேட்ட, தெறி, நிமிர் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் இவர் காலமானார். அவருக்கு வயது 79. இவருக்கு ஒரு மகன். 2 மகள்கள் உள்ளனர்.

மறைந்த இயக்குநர் மகேந்திரனின் உடலுக்கு நேரில் அஞ்சலில் செலுத்தினார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

நீண்ட காலமாக மகேந்திரனுடன் நட்பு உண்டு. படங்கள் நாங்கள் குறைவாகச் செய்திருந்தாலும், நட்பு வலுவானது. பக்கத்து ஊர்க்காரர். திறமையான மனிதர் என நான் வியந்தவர்.

‘தங்கப்பதக்கம்’ காலத்திலிருந்தே அவரைத் தெரியும். முதலில் ‘முள்ளும் மலரும்’ படத்தில்தான் நான் நடிப்பதாக இருந்தது.

இயக்குனர் பாலு மகேந்திராவையும் இவரையும் என்னுடைய வீட்டில் சந்திக்க வைத்தது இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

இரண்டு பேர் கையையும் சேர்த்துவைத்து, ‘வெற்றிப் படங்கள் எடுங்கள்’ என்று சொன்னேன். அவர்கள் செய்த படத்துக்கு கிட்டத்தட்ட புரொடக்‌ஷன் மேனேஜர் மாதிரி வேலை செய்துள்ளேன்.

அவரைப் பார்த்து, சினிமா எடுக்க வேண்டும் என்று ஒரு இளைஞர் கூட்டமே வந்தது என்று சொன்னால் மிகையாகாது.

அவரது முடிவு, உச்சத்தைத் தொட்ட பிறகுதான் ஏற்பட்டு இருக்கிறது என்பதில் சந்தோஷம். இவருடைய நினைவுகள் தமிழ் சினிமாவில் என்றும் தாங்கி நிற்கும்.

இவ்வாறு பேசினார் கமல்ஹாசன்.

Kamal paid homage to Mahendran and shares his friendship with him

என்னுள் இருந்த ரஜினியை எனக்கே காட்டியவர் மகேந்திரன்..: ரஜினி புகழஞ்சலி

என்னுள் இருந்த ரஜினியை எனக்கே காட்டியவர் மகேந்திரன்..: ரஜினி புகழஞ்சலி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini paid homage to Director Mahendran and shares his memories with himசிவாஜி கணேசன் நடித்த தங்கப்பதக்கம், ரிஷிமூலம் மற்றும் ரஜினிகாந்த் நடித்த ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ உள்ளிட்ட மறக்க முடியாத படங்களை இயக்கியவர் மகேந்திரன்.

உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை அவர் காலமானார்.

அவரது உடலுக்கு நேரில் சென்ற ரஜினிகாந்த் இறுதி அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அவர் பேசியதாவது…

மிக நெருங்கிய நண்பர் இயக்குநர் மகேந்திரன். எங்கள் நட்பு சினிமாவைத் தாண்டி ஆழமான நட்பு அது. எனக்குள் இன்னொரு ரஜினி இருக்கிறார் என்பதை எனக்கு காட்டியவர் மகேந்திரன் தான்.

‘முள்ளும் மலரும்’ படம் பார்த்துவிட்டு, ‘உன்னை நடிகனாக அறிமுகப்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்’ என்று கடிதம் பாலசந்தர் கடிதம் எழுதினார். அதற்கு சொந்தக்காரர் மகேந்திரன்.

சமீபத்தில், ‘பேட்ட’ படப்பிடிப்பில் நீண்ட நேரம் பேசினோம். இப்போது இருக்கும் சினிமா மீதும், அரசியல் மீதும் அவருக்கு மிகவும் அதிருப்தி, கோபம் இருந்தது.

அவர் எப்பேர்பட்ட மனிதர் என்றால், சினிமாவிலும் வாழ்க்கையிலும் சரி சுயமரியாதையை விட்டுக்கொடுக்காதவர்.

தமிழ் சினிமா இருக்கும்வரை மகேந்திரன் சாருக்கென்று ஒரு இடம் இருக்கும். அவரது ஆன்மா சாந்திடைய வேண்டுகிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.

Rajini paid homage to Director Mahendran and shares his memories with him

Rajini paid homage to Director Mahendran and shares his memories with him

வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்

வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா-யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ்.

இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார்.

மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

இப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்டங்களில் தாங்கள் சந்தித்த, அனுபவித்த, கடந்து வந்த நினைவுகள் பிரதிபலிக்கும் விதமாக உருவாகி இருக்கிறது திரைகதை.

மனிஷா யாதவ், ‘சகா’ ஐரா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் உமாபதியோடு இணைகின்றனர்.

ஒளிப்பதிவாளர் யுகா காட்சி அமைப்புகளுக்கு வலு சேர்க்க, இப்படத்திற்கு தினேஷ் இசை அமைக்கிறார். படத்தொகுப்பு ரூபன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நட்சத்திரங்களும் தொழிட்நுட்ப கலைஞர்களும்:
உமாபதி ராமையா
யோகி பாபு
மனிஷா யாதவ்
ஐரா
தயாரிப்பு :- வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ்
இரா மகேஷ்: கதை, திரைகதை, வசனம், இயக்கம்.
ரூபன்: படத்தொகுப்பு
யுகா: ஒளிப்பதிவு
தாமரை & ரோகேஷ்: பாடல்கள்
நிகில் முருகன்: மக்கள் தொடர்பு

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 3 இம்மாதம் வெளியீடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் முனி 4 காஞ்சனா 3.

ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதா நாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மற்றும் சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – வெற்றி பழனிச்சாமி, சர்வேஷ் முராரி.

இசை – டூபாடு

பின்னணி இசை – எஸ்.தமன்

எடிட்டிங் – ரூபன்

கலை – ஆர்.ஜனார்த்தன்

ஸ்டண்ட் – சூப்பர் சுப்பராயன்.

நடனம் – ராகவா லாரன்ஸ்

பாடல்கள் – விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன்.

தயாரிப்பு மேற்பார்வை – விமல்.ஜி

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ராகவா லாரன்ஸ்.

சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ். இதற்கு முன்பு வந்த முனி காஞ்சனா 1, 2, படங்களை விட இது இன்னும் மிரட்டலான படமாக உருவாகி இருக்கிறது.

பிரமாண்டமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும்.

இந்த கோடையை கொண்டாட குடும்ப படமாக முனி 4 காஞ்சனா 3 இருக்கும் என்று நிச்சயமாக சொல்லலாம். காமெடியையும் கமர்ஷியலையும் சரி சம கலவையாக கலந்து தந்திருக்கிறார் லாரன்ஸ்.

More Articles
Follows