நயன்தாரா வீட்டிற்கு சர்ப்பிரைஸ் விசிட் அடித்த ஷாருக்கான்

நயன்தாரா வீட்டிற்கு சர்ப்பிரைஸ் விசிட் அடித்த ஷாருக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் தற்போது ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் பெரும்பகுதி முடிவடைந்து, சமீபத்திய ஷெட்யூல் சென்னையில் இந்த வாரம் முடிவடைந்தது.

அட்டவணை முடிவிற்குப் பிறகு, ஷாருக்கான் நயன்தாராவின் வீட்டிற்கு பிறந்த இரட்டையர்களைப் பார்க்க திடீர் விஜயம் செய்தார். இதில் லேடி சூப்பர் ஸ்டாரின் கணவர் விக்னேஷ் சிவனும் கலந்து கொண்டார். ஆடம்பரமான பகுதியின் முன்பு ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஷாருக் ரசிகர்களுக்கு பறக்கும் முத்தங்களை கொடுத்தார் . அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Shah Rukh Khan’s sudden visit to Nayanthara’s house goes viral

‘சர்தார்’ இயக்குனர் பி.எஸ். மித்ரன் திருமண புகைப்படம் வைரல்

‘சர்தார்’ இயக்குனர் பி.எஸ். மித்ரன் திருமண புகைப்படம் வைரல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சர்தார்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் மித்ரன் , முன்னணி ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுடன் புதிய திட்டங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன் மித்ரனுக்கும், ஊடகவியலாளர் அஷமீரா ஐயப்பனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று இருவரும் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்ள பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
‘Sardar’ director P.S. Mithran gets married, photos go viral

விக்ரம் – துணிவு – பீஸ்ட் வரிசையில் இணைந்த சிவகார்த்திகேயனின் மாவீரன்

விக்ரம் – துணிவு – பீஸ்ட் வரிசையில் இணைந்த சிவகார்த்திகேயனின் மாவீரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் ‘மாவீரன்’.

இதில் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக நடித்து வருகிறார்.

இவர்களுடன் மிஷ்கின், சரிதா, யோகிபாபு ஆகியோரும் நடிக்க பரத் சங்கர் என்பவர். இசையமைத்துள்ளார்.

இசை வெளியீட்டு உரிமையை சரிகம சவுத் நிறுவனம் வாங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்திற்காக மோகோபாட் எனும் நவீன காஸ்ட்லி கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளதாம்.

இதற்குமுன் கமல்ஹாசனின் விக்ரம், அஜித்தின் துணிவு, விஜய்யின் பீஸ்ட் ஆகிய படங்களில் மோகோபாட் கேமரா பயன்படுத்தப்பட்டது.

இந்த மோகோபாட் கேமரா சண்டைக் காட்சிகளை பிரத்யேகமாக படம்பிடிக்க உருவாக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு இருந்தார்.

Sivakarthikeyan’s Maaveeran follows Vikram, Thunivu, Beast formulae

அந்த உறவு இருந்தால்தான் என்னால் வாழ முடியும்.; ஆளும் / ஆண்ட கட்சி வார்த்தையே கூடாது.. – கமல்

அந்த உறவு இருந்தால்தான் என்னால் வாழ முடியும்.; ஆளும் / ஆண்ட கட்சி வார்த்தையே கூடாது.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குநர் பா. இரஞ்சித் ‘ நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று (12.2.2023 ) எழும்பூரில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் வருகை தந்தார்

பெரும் திரளான புத்தக வாசிப்பாளர்களும், ரசிகர் கூட்டமும், பத்திரிகை நண்பர்களும் கலந்து கொண்டு இந்நிகழ்வினை சிறப்பித்தனர். நீலம் புக்ஸ்’ புத்தக விற்பனையகம், அனைத்து விதமான கலை பண்பாட்டு இலக்கிய செயல்பாடுகளுக்கான தளமாக இயங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன்,

உயிரே உறவே தமிழே..

இந்த வாக்கியத்தை நான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி இருந்தாலும் இதுதான் என்னுடைய வாழ்க்கையின் உண்மை தத்துவம். அலங்காரத்திற்காக சொல்லும் வார்த்தை அல்ல இது. இந்த உறவு இருந்தால்தான் என்னால் உயிர்வாழ முடியும். இது மூன்றையும் காக்க வேண்டியது என் கடமை.

பா. ரஞ்சித்தின் ஆரம்ப விழாக்களிலெல்லாம் நான் கலந்து கொள்ள வில்லை. ஆனால் நானும் அவரும் இல்லாத போதும் இருக்கும் தாக்கம் இது.

அரசியல் என்பதை தனியாகவும், கலாசாரத்தை தனியாகவும் வைத்திருக்க வேண்டிய நிர்பந்தத்தில் நாம் இருக்கிறோம். நாம் உருவாக்கியதுதான் அரசியல்.

ஆளும் கட்சி, ஆளுகிற கட்சி என்ற வார்த்தையே இனி வரக்கூடாது என்று நினைக்கிறேன்.

நான் நியமித்தவர் என்ற எண்ணம் மக்கள் மனத்தில் உதிக்கும் பட்சத்தில் ஜனநாயகம் நீடுழி வாழும். தலைவனை வெளியே தேடிக்கொண்டிருக்கும் தலைவர்கள் பலர் இங்கு குடிமகன்களாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் தன்னளவில் தலைவன் தான் என்று நினைக்கும் பட்சத்தில் உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக இந்தியா வரக்கூடும்.

அரசியலில் என்னுடைய மிக முக்கியமான எதிரி சாதிதான். நான் அதை இன்று சொல்லவில்லை; அதை நான் 21 வயதில் இருந்தே சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

இப்போது நான் அதனை தரமான வார்த்தைகளில் பக்குவமாக சொல்கிறேன். ஆனால் கருத்து மாறவே இல்லை. சக்கரத்திற்கு பிறகு மனிதனின் மாபெரும் சிருஷ்டி கடவுள். அதை மறந்து விடாதீர்கள். நம்முடைய உருவாக்கம் நம்மையே தாக்குவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதன் கொடூரமான ஆயுதம் சாதி.
இது எனக்கு மூன்று தலைமுறைகளை முன்னர் இருந்த அம்பேத்கர் காலத்தில் இருந்து சொல்லப்பட்டு வந்து கொண்டிருக்கிறது; ஆனால் இன்றும் நடந்த பாடில்லை; எழுத்து வேண்டுமானால் வேற வேறயாக இருக்கலாம்.

ஆனால், மய்யமும் நீலமும் ஒன்றுதான்.”
என்று பேசினார் கமல்ஹாசன்.

Kamal speech at Neelam books opening ceremony

சாமீ… சாமீ..; ரசிகரின் தந்தைக்கும் உதவிய நடிகர் அல்லு அர்ஜுன்

சாமீ… சாமீ..; ரசிகரின் தந்தைக்கும் உதவிய நடிகர் அல்லு அர்ஜுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

முக்கியமாக ‘புஷ்பா’ படத்திற்கு பிறகு வட இந்தியாவிலும் ரசிகர்கள் உருவாகினர்.

இந்த நிலையில் இவரது ரசிகர்களில் ஒருவர் குடும்பத்திற்கு நிதியுதவி தேவைப்படுவதாக தகவல் வெளியானது.

அந்த ரசிகருடைய தந்தையின் நுரையீரல் பாதிப்பு சிகிச்சைக்கு ரூ.2 லட்சம் தேவை என தகவல் வந்தது.

இது அல்லு அர்ஜுனின் கவனத்திற்கு செல்லவே ரசிகர் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை நடிகர் அல்லு அர்ஜுன் தனது குழுவினர் மூலம் செய்துள்ளார்.

எனவே அந்த ரசிகர் மன்றம் அல்லு அர்ஜுனை ‘சாமி’ என பாராட்டி பதிவிட்டுள்ளது.

‘புஷ்பா’ படத்தில் ‘சாமி… சாமி…’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது இங்கே கவனிக்கத்தக்கது.

Allu Arjun helps his fan family for medical treatment

இந்தியாவை திணறடித்த ‘த்ரிஷ்யம் 1 & 2’ படங்கள் ஹாலிவுட்டில் ரீமேக்

இந்தியாவை திணறடித்த ‘த்ரிஷ்யம் 1 & 2’ படங்கள் ஹாலிவுட்டில் ரீமேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் & மீனா ஜோடியாக நடித்த படம் ‘த்ரிஷ்யம்’.

மலையாளத்தில் இந்த படம் 2013-ம் ஆண்டில் வெளியானது. சில வருடங்களுக்கு பின் இதன் இரண்டாம் பாகம் ஓடிடி தளத்தில் வெளியாகி அதுவும் சூப்பர் ஹிட்டானது.

‘த்ரிஷ்யம்’ முதல் பாகம் மலையாளத்தில் பெரும் வரவேற்பை பெறவே தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.

தமிழில் ஜீத்து ஜோசப் இயக்க கமல்ஹாசன் நடிக்க ‘பாபநாசம்’ என்ற பெயரில் வெளியானது.

மேலும் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்தியப் படம் இது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பனோரமா ஸ்டூடியோஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் ‘த்ரிஷ்யம்’ பார்ட் 1 & 2 படங்கள் ஹாலிவுட்டில் (ஆங்கிலம் – கொரியா) ரீமேக் செய்யப்பட உள்ளதாம்.

அதாவது இந்திய மொழிகள் தவிர்த்து பிற மொழிகளில் த்ரிஷ்யத்தை ரீமேக் செய்ய இந்த நிறுவனம் உரிமை பெற்றுள்ளதாம்.

Drishyam films to be remade in hollywood

More Articles
Follows