கூட்டணியே இல்லாமல் சாதித்த சீமான்.: பேச்சாடா பேசுனீங்க.; நாம் தமிழரை நசுக்கிய தமிழர்கள்.; வாய்ப்பில்ல ராஜா-ன்னு சொன்னாரே அது அவருக்கா?

seeman (1)தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ல் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட்டார்.

எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் 117 ஆண் + 117 பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிற்க வைத்து அவர்களுக்கு ஆதரவாக 234 தொகுதிகளிலும் அனல் பறக்க பிரச்சாரங்களை செய்தார்.

வேட்பாளர்கள் தேர்விலும் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கியது மற்ற கட்சியினரை ஆச்சர்யப்படுத்தியது.

சீமானின் பேசிய வீடியோக்கள் தேர்தல் சமயத்தில் வைராலனது. இதனால் நாம் தமிழர் தம்பிகளும் சில இடங்களில் ஓவராகவே பேசி திரிந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய வாக்கு எண்ணிக்கையில் திமுக வேட்பாளர் கே.பி.சங்கரிடம் 39588 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றுள்ளார் சீமான்.

நாம் தமிழரில் யார் வெற்றி பெறவில்லை என்றாலும் சீமான் சிக்ஸர் அடிப்பார் என மக்களே எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எல்லாம் முடிந்துவிட்டது.

வாய்ப்பில்ல ராஜா… வாய்ப்பில்ல ராஜா-ன்னு சொன்னாரே அது அவருக்காக அவரே சொன்னாரா? எனவும் சிலர் கிண்டலடித்தனர்.

நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலையே பெறவில்லை.

ஆனால் பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளை பெற்று திமுக & அதிமுகவை அடுத்து 3வது இடத்தில் உள்ளது.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பெற்றுள்ளது எனலாம்.

இந்த வாக்கு வங்கி வளர்ச்சி அடுத்த தேர்தலுக்கு நாம் தமிழருக்கு உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

மேலும் பெரிய பெரிய கட்சிகளே கூட்டணியை நம்பிய போதும் தன் கட்சியை மட்டுமே நம்பி தேர்தல் களமிறங்கிய சீமானை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சீமான்..

Seeman wins no seats but his party makes a mark

Overall Rating : Not available

Latest Post