மன்னிப்பு ஓகே துல்கர்.. ஆனா சீன் இருக்கே..; எச்சரிக்கும் சீமான்!

மன்னிப்பு ஓகே துல்கர்.. ஆனா சீன் இருக்கே..; எச்சரிக்கும் சீமான்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Seeman warns Dulquer to remove controversial scene from Varane Avashyamundஅனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’.

இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் டிஜிட்டலில் இணையத்தில் வெளியானது.

இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் ஒரு காமெடி காட்சியும் இருக்கிறது.

இதனையடுத்து இந்த காட்சியை பார்த்த தமிழர்கள் காட்சியை நீக்க வேண்டும் எனவும் படத்தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…

மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்துள்ள “வரனே அவசியமுண்ட (Varane Avashyamund)” படத்தில் உள்ள ஒரு காட்சியில், தமிழ்த் தேசிய இனத்தின் முகமாகவும் முகவரியாகவும் அடையாளமாகவுமிருக்கும் இப்பேரினத்தின் ஒப்பாரும் மிக்காரும் இல்லா உயர்ந்த உன்னதத் தலைவராம் மேதகு வே.பிராபகரன் அவர்களின் பெயரை தவறாகப் பயன்படுத்தி அவமதிக்கும் வகையில் காட்சியமைக்கப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

உலகமே வியக்கும் தம்முடைய போர்த்திறனாலும், மரபு சார்ந்த நவீன வலிமை வாய்ந்த இராணுவ கட்டமைப்பினாலும், கட்டுக்கோப்பான ஒழுக்கத்தினாலும், இன விடுதலைக்குக் குரல்கொடுக்கும் உலக மாந்தர்களால் இன்றளவும் போற்றப்படும் மேதகு வே.பிரபாகரன் அவர்களைத் நடிகர் துல்கர் சல்மான் அவர்களோ, அல்லது தொடர்புடைய அவரது படக்குழுவினரோ அறியாமல் இருக்க வாய்ப்பில்லை.

மேலும் துல்கர் சல்மான் அவர்களின் நடிப்பில் வெளிவந்த முந்தைய படமான “காம்ரேட் இன் அமெரிக்கா (COMRADE IN AMERICA)” திரைப்படத்திலும் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் புகைப்படம் ஒரு காட்சியில் பயன் படுத்தப்பட்டிருப்பதால் அவருக்குக் கட்டாயம் தெரிந்திருக்கக்கூடும்.

அந்தக் காட்சியிலும் ஒரு குடிகாரர் வீட்டில் இருக்கும் அப்புகைப்படம் இறந்துவிட்டார் என்பதைக் குறிக்கும் விதமாகக் காட்டப்பட்டிருப்பதும் இயல்பானதாக இல்லை.

எனவே தெரியாமல் வைத்துவிட்டோம் என்றோ, கேரளாவில் அது பெரும்பாலானோர் வைத்திருக்கும் பொதுப்பெயர் என்றோ துல்கர் சல்மான் அவர்கள் கூறும் காரணங்கள் ஏற்புடையதல்ல.

படக்குழுவினர் நினைத்திருந்தால் இப்படி ஒருகாட்சியில் அத்தகைய பெயரை பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். மேலும் படக்குழுவினருக்கு எவ்வித உள்நோக்கமும் இல்லையென்றால் அந்த ஒரு குறிப்பிட்ட பெயர் இடம்பெறும் காட்சியை மட்டும் தனியாக விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் ஏன் வந்தது? என்ற கேள்வியும் எழுகிறது.

பழைய படத்தில் இடம்பெற்ற தொடர்ச்சி அந்தக் காட்சி என்றால் அது இன்றைய சூழலில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று படக்குழுவினர் கணித்திருக்க வேண்டும்.

தமிழக இளம் தலைமுறையிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தவுடனேயே தற்போது துல்கர் சல்மான் அவர்கள் பொதுவெளியில் மன்னிப்புக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் படத்திலிருந்து அந்தச் சர்ச்சைக்குரிய காட்சியை உடனடியாக நீக்க வேண்டும்.

அதுவரை தங்களுடைய படத்திற்கு எதிரான தமிழர்களின் எதிப்பு என்பது தொடர்ந்துக் கொண்டே இருக்குமென்று எச்சரிக்கிறேன். எனவே காயம்பட்ட ஒவ்வொரு தமிழனின் உள்ளத்து உணர்வையும், அவர்களின் எதிர்ப்பு நிலைப்பாட்டின் தீவிரத்தையும் உணர்ந்து படத்திலிருந்து அக்காட்சியை முழுமையாக நீக்க வேண்டும்.

மேலும் எதிர்காலத்திலும் இவ்வாறு மலிவான காட்சிகள் மூலம் தமிழர்கள், தமிழ்த் தலைவர்களை இழிவுபடுத்திவிடலாம் என்ற சிந்தனையே எழாமல் இருப்பது தான் இரு சகோதர தேசிய இனங்களின் ஒற்றுமைக்கும், மேன்மைக்கும் நலம்பயக்கும் என்பதைத் தொடர்புடைய படக்குழுவினர் உணர்ந்து செயல்படுவர் என்று நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார் சீமான்.

Seeman warns Dulquer to remove controversial scene from Varane Avashyamund

https://twitter.com/dulQuer/status/1254404061735997440

 

‘மாஸ்டர்’ வீட்டில் மாளவிகா சமையல்.; கடுப்பேற்றிய விஜய் ரசிகர்

‘மாஸ்டர்’ வீட்டில் மாளவிகா சமையல்.; கடுப்பேற்றிய விஜய் ரசிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Malavika angry on Master cartoon about Corona Quarantineலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா, சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜீன் தாஸ், கௌரி உள்ளிட்டோர் நடித்துள் படம் மாஸ்டர்.

இப்பட ரிலீஸ் கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் படக்குழுவினர் கொரோனா லாக்டவுனில் தற்போது வீட்டில் என்ன செய்வார்கள்… என்ன செய்து கொண்டிருப்பார்கள் என என விஜய் ரசிகர் ஒருவர் கார்ட்டூன் வரைந்து வெளியிட்டுள்ளார்.

அந்த ஓவியத்தில் மாஸ்டர் நாயகி மாளவிகா சமைத்துக் கொண்டிருப்பது போல வரைந்துள்ளார்.

இதனை பார்த்த மாளவிகா கோப்ப்பட்டு தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

“இந்த ஒரு மூவி (மாஸ்டர்) வீட்டில் கூட பெண்கள் சமைக்கும் வேலை தான் செய்ய வேண்டுமா? இப்படி பெண்கள் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என சொல்லும் முறை எப்போது சாகும்? ச்சை” என மாளவிகா தன் ஆவேசத்தை பதிலாக பதிவிட்டுள்ளார்.

Malavika angry on Master cartoon about Corona Quarantine

Malavika angry on Master cartoon about Corona Quarantine

நாய்க்கு பிரபாகரன் பெயர்; விளக்கமளித்து மன்னிப்பு கேட்ட துல்கர்

நாய்க்கு பிரபாகரன் பெயர்; விளக்கமளித்து மன்னிப்பு கேட்ட துல்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dulquer apologises for Prabhakara dog name in Varane Avashyamundஅனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த படம் ‘வரனே அவஷ்யமுண்டு’.

இதில் சுரேஷ் கோபி, ஷோபனா, துல்கர் சல்மான், கல்யாணி ப்ரியதர்ஷன் ஆகியோரும் நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 2 மாதங்கள் ஆகிவிட்டது.

இந்த படத்தில் மும்பையை சேர்ந்த பெண் பத்திரிகையாளரின் புகைப்படத்தை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக துல்கர் மன்னிப்பு கேட்டார்.

சில நாட்களுக்கு முன்பு இந்தப் படம் டிஜிட்டலில் இணையத்தில் வெளியானது.

தற்போது மீண்டும் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

இப்படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும் நாய்க்கு பிரபாகரன் என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்தது. அத்துடன் ஒரு காமெடி காட்சியும் இருக்கிறது.

இதனையடுத்து இந்த காட்சியை பார்த்த தமிழர்கள் காட்சியை நீக்க வேண்டும் எனவும் படத்தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதனையறிந்த நடிகர் துல்கர் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனது தரப்பு நியாயத்தை விளக்கியும் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

வரனே அவஷ்முண்டு படக்குழு மற்றும் என் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வரனே அவஷ்யமுண்டு படத்தில் வந்த பிரபாகரன் ஜோக் தமிழ் மக்களை அவமதிப்பதாக உள்ளது என்று பலர் என்னிடம் தெரிவித்தார்கள். அது வேண்டும் என்றே செய்யவில்லை.

அந்த ஜோக் பழைய மலையாள படமான பட்டன பிரவேஷம் பற்றியது, மேலும் அது கேரளாவில் பிரபலமான மீம் ஆகும். அந்த பெயர் கேரளாவிலும் பொதுவான பெயர். அதனால் உயிருடன் இருப்பவர்கள் அல்லது இறந்தவர்கள் யாரையும் குறிப்பது அல்ல.

இந்த காட்சிக்கு ரியாக்ட் செய்பவர்களில் பலர் படத்தை பார்க்காமல் பேசுகிறார்கள், வெறுப்பை பரப்ப முயற்சி செய்கிறார்கள்.

என்னையோ, இயக்குநர் அனுப்பையோ வெறுப்பதை ஏற்க முடியும். இதை நம் அளவில் வைத்துக் கொள்வோம்.
ஆனால் தந்தை அல்லது சீனியர் நடிகர்களை தொடர்புபடுத்த வேண்டாம். அன்பான தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

யாரையும் அவமதிக்க வேண்டும் என எப்பொழுதும் நினைத்தது இல்லை. இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

உங்களில் சிலர் மோசமாக பேசுவதுடன் மிரட்டவும் செய்கிறீர்கள். இது நடந்திருக்க வேண்டாம் என விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சர்ச்சையான அந்த காமெடி காட்சியின் வீடியோவை துல்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Dulquer apologises for Prabhakara dog name in Varane Avashyamund

 

https://twitter.com/dulQuer/status/1254404061735997440

https://twitter.com/dulQuer/status/1254404555338481664

dulquer statement prabhakara dog name

ஆன்லைனில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்.?; அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!

ஆன்லைனில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்.?; அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Whether Vijays Master will be released in OTT platformஜோதிகா நடிப்பில் தான் தயாரித்துள்ள பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக ஆன்லைனில் (OTT) ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சூர்யா.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இந்த முடிவில் இருந்து சூர்யா பின்வாங்காவிட்டால் இனி சூர்யா தயாரிக்கும் படங்களை திரையிட போவதில்லை என தியேட்டர்கள் அறிவித்துள்ளன.

தமிழைப் போல இந்தியில் அக்‌ஷய் குமாரின் லக்ஷ்மி பாம், ரன்வீர் சிங்கின் 83 போன் டாப் ஹீரோக்களின் படங்களையும் ஆன்லைனில் வெளியிட OTT நிறுவனங்கள் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டதாம்.

இந்த நிலையில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தையும் நேரடியாக ஆன்லைனில் வெளியிட ஆன்லைன் நிறுவனம் முயற்சித்து வருகிறதாம்.

மாஸ்டர் பட சூட்டிங் சமயத்திலேயே கிட்டத்தட்ட ரூ.200 கோடிக்கு வியாபாரம் ஆனது.

இதன் தமிழக உரிமம் ரூ.70 கோடி, வெளிநாட்டு உரிமம் ரூ.30 கோடி, பிற மாநிலங்களின் உரிமம் ரூ.25 கோடி என கோலிவுட்டையே ஆச்சரியப்படுத்தியது.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் எப்போது என கேள்வி எழுந்துள்ளது.

மேலும் கொரோனா ஊரடங்கு பல நாடுகளில் ஆகஸ்ட் மாதம் வரை கூட நீடிக்க வாய்ப்புள்ளது.

இதனால் வெளிநாட்டு உரிமையை வாங்கிய நிறுவனங்கள் பட வெளியீட்டில் இருந்து பின்வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மாஸ்டர் படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துவிட்டதால் திருட்டுத்தனமாக இணையத்தில் லீக்காகி விடுமோ என்ற அச்சமும் நிலவுகிறதாம்.

ஆனால் மாஸ்டர் படம் எப்போது வெளியானாலும் அது திருவிழா கொண்டாட்டம்தான் என பட இயக்குனர் லோகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் விஜய் படத்தை திரையரங்குகளில் பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

எனவே கொரோனா தொற்று முற்றிலும் நீங்கிய பிறகு மாஸ்டர் படத்தை தியேட்டரில் வெளியிட வே காத்திருக்கிறதாம் படக்குழு.

Whether Vijays Master will be released in OTT platform

பட விற்பனையில் சூர்யாவுக்கே முழு உரிமை; 30 தயாரிப்பாளர்கள் ஆதரவு.?

பட விற்பனையில் சூர்யாவுக்கே முழு உரிமை; 30 தயாரிப்பாளர்கள் ஆதரவு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

30 Tamil producers supports Suriya in OTT movie release ஜோதிகா நடிக்க அவரது கணவரும் நடிகருமான சூர்யா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’.

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் படம் OTT ஆன்லைன் தளங்கள் மூலம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எதிர்ப்புகள் உருவானது.

ஒருவேளை அவர்கள் ஓடிடியில் வெளியிட்டால் இனி சூர்யா தயாரிக்கும் படங்களை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறியிருந்தனர்.

இந்த நிலையில் தமிழ் சினிமாவை சார்ந்த 30 தயாரிப்பாளர்கள் ஒன்றாக சேர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அவர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

“திரைப்பட தயாரிப்பு அதிகம் ரிஸ்க் உள்ள ஒரு துறை. அதில் ஆர்வத்துடனும் நம்பிக்கையுடனும் இன்று நிறைய தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுத்து வருகிறார்கள். அவர்களில் சிறிய மற்றும் மீடியம் பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

அவர்கள் ஒரு படத்தை எடுத்து முடித்தாலும் அப்படத்தை வெளியிட யாரும் முன் வருவதில்லை.

அப்படியே வெளியிட்டாலும் அப்படங்களுக்கு திரையரங்கு மற்றும் ஷோ கிடைக்காமல் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்கள். இத்தகைய பிரச்சனைகள் பெரிய நடிகர்கள்-இயக்குனர்கள் படங்களுக்கு அதிகம் இல்லை.

மேலும் முதலீடு செய்யும் ஒரு தயாரிப்பாளருக்கு அப்படத்தை எல்லா விதங்களிலும் வியாபாரம் செய்ய அனைத்து உரிமையும் உள்ளது என்று தற்போது திரைப்படங்கள் எடுத்துவரும் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் தெரிவித்து கொள்கிறோம்.

தனிப்பட்ட எந்த சங்கமும் தன்னிச்சையாக எந்த ஒரு தயாரிப்பாளரையும் பாதிக்கும் முடிவுகளை எடுத்து அறிவிக்க வேண்டாம் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறோம்.

இந்த கொரோனா லாக் டவுன் முடிந்தவுடன் அனைத்து சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்தாலோசித்து, விவாதித்து, இதற்கான (OTT படங்கள்) வரைமுறைகளை வகுத்து, தமிழ் சினிமா வளமாக செயல்பட, சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அனைவரையும் கேட்டு கொள்கிறோம்.

இன்றைய சூழ்நிலையில் தொழில்நுட்பம் வளர்ந்து OTT (OVER THE TOP) மூலம் புதிய படங்கள் நேரடியாக வெளிவரும் முறை உலகெங்கும் உள்ள நிலையில், தற்போது பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வாங்கி, நேரடியாக வெளியிட முன் வந்திருப்பதை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், கே.முரளிதரன், டி.சிவா, கே.எஸ். ஸ்ரீனிவாசன், கே. ராஜன், ஞானவேல்ராஜா, ஹெச். முரளி, பெப்சி சிவா, தனஞ்செயன், சஷிகாந்த், சுரேஷ் காமாட்சி, மனோபாலா உட்பட 30-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

30 Tamil producers supports Suriya in OTT movie release

கொரோனா நிவாரணம் : 750 தயாரிப்பாளருக்கு உதவ ரஜினி முடிவு

கொரோனா நிவாரணம் : 750 தயாரிப்பாளருக்கு உதவ ரஜினி முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini plans to help 750 producers in Corona Crisis கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கடந்த ஒரு மாதமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

காய்கறி, அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் செல்லும் நிலை உள்ளது.

இதனால் தினக்கூலிகள், வணிகர்கள் முதல் பலரும் தங்கள் வருமானத்தை இழந்து உள்ளனர்.

இவர்களை போல பெப்சி உள்ளிட்ட சினிமா சார்ந்த தொழிலாளர்களும் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு வசதியான நடிகர்கள், கலைஞர்கள் பலரும் உதவி வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் பெப்சி தொழிலாளர்களுக்கு 50 லட்சம் வழங்கியிருந்தார்.

மேலும் நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம் என பல சங்கத்தினருக்கும் நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கும் உதவ முன்வந்துள்ளார் ரஜினிகாந்த்.

நலிவடைந்த 750 தயாரிப்பாளர்களுக்கு கொரோனா நிவாரண உதவிகளை மே முதல் வாரத்தில் வழங்கவுள்ளார் ரஜினி.

இந்த தகவலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் துணைத் தலைவர் கே. ராஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Rajini plans to help 750 producers in Corona Crisis

rajini corona help 750 producers

More Articles
Follows