தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நேற்று மே 28 மதுரையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவருமான நடிகருமான சரத்குமார் பங்கேற்றார்.
அப்போது தொண்டர்கள் மத்தியில் சரத்குமார் பேசியதாவது…
“2026 தேர்தலில் உங்கள் நாட்டாமை (சரத்) அரியணை ஏறவேண்டும் என்று சமக பொதுக்குழு தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அது சாத்தியமா என்பது சட்டமன்ற தேர்தலில்தான் தெரியவரும்.
அதனை சாத்தியமாக்க முயற்சி, நேர்மை, உடலுடன் மனவலிமை வேண்டும்.
நான் தற்போது 70 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போதும் 25 வயது இளைஞனாக இருக்கிறேன்.
என்னால் 150 வயது வரை உயிருடன் இருக்க முடியும். 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அதற்கான வித்தையை நான் கற்று வைத்திருக்கிறேன்.
அந்த வித்தையை 2026 ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நீங்கள் என்னை அரியணையில் ஏற்றும்போது அந்த வித்தையை சொல்வேன்.” என சரத்குமார் பேசினார்.
Sarath Kumar said he is going to live 150 years