கமலுக்காக ஆட்டம் போடும் சஞ்சீவ் & ஆல்யா மானஷா ஜோடி.; விஷயம் அதுவா?

கமலுக்காக ஆட்டம் போடும் சஞ்சீவ் & ஆல்யா மானஷா ஜோடி.; விஷயம் அதுவா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sanjeev alya manasaகுளிர் 100 டிகிரி படத்தில் நடித்தவர் சஞ்சீவ்.

ஆனால் அந்த படத்தை விட விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் அதிக ரசிகர்களைப் பெற்றார்.

இந்த சீரியலில் அவருக்கு ஜோடியாக ஆல்யா மானஷா நடித்திருந்தார்.

எனவே இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த தம்பதிக்கு தற்போது பெண் குழந்தையும் உள்ளது.

தற்போது காற்றின் மொழி சீரியலில் நடித்து வருகிறார் சஞ்சீவ்.

இந்த நிலையில் இந்த தம்பதிகள் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில்… கமல் சாருக்காக நாங்கள் இருவரும் இணைந்து பாடலுக்கு ஆட போகிறோம்.. காணத் தவறாதீர்கள்.. காத்திருங்கள்.. என பதிவிட்டுள்ளனர்.

இந்த ஆட்டம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடர்பாக ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்களுடையே எழுந்துள்ளது.

Sanjeev and alya dance for kamal

கடவுள் முருகனுக்கே ரொமாண்டிக் சாங் போட்ட பாடகர் க்ரிஷ்

கடவுள் முருகனுக்கே ரொமாண்டிக் சாங் போட்ட பாடகர் க்ரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singer krishமுருகனை போற்றும் விதமாக, ஆக்ரோஷம் கொண்ட முருகனை விடுத்து, அமைதியும் அழகும் நிறைந்த பார்வையில், முருக கடவுளின் ஆறுபடை வீடுகளை மையப்படுத்திய, ஆறு பாடல்கள் கொண்ட ஆல்பத்தை உருவாக்கியுள்ளார், பிரபல பாடகர், இசையமைப்பாளர் க்ரிஷ்.

“வெற்றி வேலா” ஆல்பம் குறித்து பாடகர், இசையமைப்பாளர் க்ரிஷ் கூறியதாவது…

சமீப காலமாக முருகர் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளார். பல்லாண்டுகளாக முருகர் பாடல்கள் பலவற்றை நாம் கேட்டு வருகிறோம்.

ஆனால் அதில் முருக கடவுள் அதிகமான ஆக்ரோஷம் கொண்டவராக காட்டப்படுவதாக எனக்கு தோன்றியது. முருகு என்றாலே அழகு என்று தான் அர்த்தம்.

முருக கடவுள் எப்போதும் அமைதியும் அழகும் நிறைந்தவர். மனதை சாந்தப்படுத்துபவர். முருகர் பற்றிய பாடல் ஏன் மெல்லிய வடிவில் மனதை சாந்தப்படுத்தக்கூடாது எனத் தோன்றியது.

இசையை கேட்கும் பழக்கமுள்ள அனைவரும் நல்ல மெல்லிய மெலோடி இசையை கேட்ட பிறகே தூங்குவார்கள்.

நம் அனைவருக்குமே இருக்கும் பழக்கம் அது. அந்த வகையில் முருகர் பாடலை கேட்டுவிட்டு தூங்கினால் எப்படியிருக்கும் என்கிற சிந்தனையில் உருவானது தான் இந்த ஆல்பம்.

கடவுள் முருகனுக்கு ரொமாண்டிக் பாடல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இந்த ஆல்பம் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் இது முழுக்க ரொமாண்டிக் பாடல் அல்ல மென்மையான மெலோடி வடிவில் முருகனை கொண்டாடுவதே இந்த ஆல்பம்.

முருகனின் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக கொண்டு திருப்பரங்குன்றம்,திருச்செந்தூர் பழனி, சிவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என ஆறு பாடல்கள் இந்த ஆல்பத்தில் அமைந்துள்ளது.

எனது மகள் ஷ்வியா பாடும் ஆசையில் இருந்ததால் பழனி பாடலை அவரை பாட வைத்திருக்கிறேன். ஒவ்வொரு பாடலும் இந்த ஆல்பத்தில் முருகனின் படத்துடனும், அதன் கீழே மற்ற விபரங்களும் இருக்கும்படி அமைக்கப்பெற்றிருக்கும்.

எல்லோரும் விரும்பும்படி, அனைவரும் ரசிக்கும்படி இந்த ஆல்பத்தை அமைத்திருக்கிறேன். இதன் ஃபர்ஸ்ட் லுக்கில் கடவுள் இல்லாமல் கடவுளை காட்டும் முயற்சியாக வெறும் வேல் மட்டுமே வைத்து வடிவமைத்தோம். இந்த ஆல்பம் எங்களின் மனமார்ந்த முயற்சி.

இந்தியாவின் மிகப்பெரும் இசை நிறுவனமான சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் இந்த ஆல்பத்தினை வெளியிடுகிறார்கள் அவர்களுக்கு எனது நன்றி. ரசிகர்கள் அனைவருக்கும் இந்த ஆல்பம் பிடிக்கும், மக்கள் கண்டிப்பாக ஆதரவு தருவார்கள் என நம்புகிறேன். நன்றி.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

இசை – க்ரிஷ்

பாடல்கள் – வெ. மதன் குமார்

1.திருப்பரங்குன்றம்

பாடியவர்கள் : க்ரிஷ் & ப்ரியா மாலி

2.திருச்செந்தூர்

பாடியவர்கள் : ப்ரியா மாலி

3.பழனி

பாடியவர்கள் : க்ரிஷ் & ஷிவியா

4.சுவாமிமலை

பாடியவர்கள் : க்ரிஷ்

5.திருத்தணி

பாடியவர்கள் : க்ரிஷ் & S.சாய் சாதனா

6.பழமுதிர்ச்சோலை

பாடியவர்கள் : க்ரிஷ்

இசை கலைஞர்கள்

ரிதம் – டெரிக்

ப்ளூட் – A.சதீஷ்

வீணை – ஶ்ரீமதி T. வீணா காயத்திரி ராஜ்

நாதஸ்வரம் – பாலா

பின்னணி இசை கருவிகள் – செந்தில் தாஸ், ஷாம் கீர்தன் & வேலு

Singer Krish about his new album

பாலா நெற்றியில் முத்தமிடுவதாக மிஷ்கின் சொன்னது ஏன்..?

பாலா நெற்றியில் முத்தமிடுவதாக மிஷ்கின் சொன்னது ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bala mysskinகடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம்,

மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தை பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் டைரக்டர் பாலா தயாரித்திருந்தார்.

2014ல் வெளியான பிசாசு படம் வெற்றி பெற்றது. இதில் ராதாரவி மாறுப்பட்ட நடிப்பை கொடுத்திருந்தார்.

தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு பிசாசு படம் இரண்டாம் பாகம் தயாராகிறது.

முருகானந்தம் தயாரிக்க உள்ள இந்த படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார்.

ஆண்ட்ரியா நடிக்க கார்த்திக் ராஜா இசையமைக்க உள்ளார்.

இந்த நிலையில், டைரக்டர் பாலாவின் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘பிசாசு’ பட டைட்டிலை தனக்கு வழங்கியதற்காக நன்றி தெரிவித்து மிஷ்கின் டுவிட் செய்துள்ளார்.

அதில் “நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா.

‘பிசாசு 2’ இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்கு சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களை பதிக்கிறேன்” என மிஷ்கின் பதிவிட்டுள்ளார்.

Mysskin thanked director bala for title

நவம்பர் 2ல்… ஷாரூக்கான் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் அட்லி.; ஏன்.?

நவம்பர் 2ல்… ஷாரூக்கான் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் அட்லி.; ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

SRK Atleeராஜா ராணி என்ற ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்தார் அட்லி.

இப்படத்தை அடுத்து விஜய்யின் 3 படங்களை இயக்கிவிட்டார் அட்லி.

ஷங்கரின் உதவி இயக்குனராக ‘நண்பன்’ படத்தில் பணிபுரிந்த போது கிடைத்த விஜய்யின் அறிமுகமே இதற்கு முக்கிய காரணம் எனலாம்.

தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கோலிவுட்டில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

விரைவில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளார்.

தீபிகா படுகோனே நாயகியாக நடிக்கவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாராக உள்ளதாம்

இந்நிலையில், இப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.

இப்பட அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஷாருக்கானின் பிறந்தநாளான நவம்பர் 2-ந் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ஜீரோ படத்திற்கு பின் ஷாருக்கான் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

SRKs film with Atlee to start in november ?

பிக்பாஸ் வீட்டில் சிக்கும் சிங்கர்..; இனி பஞ்சமில்லாமல் பாட்டு கேட்கலாம்

பிக்பாஸ் வீட்டில் சிக்கும் சிங்கர்..; இனி பஞ்சமில்லாமல் பாட்டு கேட்கலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

singer velmuruganபிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்களை சிறப்பாக நடத்திய நடிகர் கமல்ஹாசனே நான்காவது சீசனையும் நடத்தவுள்ளார்.

இந்த நிகழ்ச்சி அக்டோபர் முதல் வாரம் முதல் ஒளிப்பரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் சஞ்சனாசிங், சனம் செட்டி, ஷாலு ஷம்மு, ஷிவானி நாராயணன், ரக்சன், ரியோ ராஜ், கரன், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது.

எனவே போட்டியாளர்கள் குறித்த செய்திகள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பிரபல பின்னணிப் பாடகரும் கிராமிய பாடகருமான வேல்முருகன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

’நாடோடிகள்’ படத்தில் இடம்பெற்ற ’ஆடுங்கடா’ ’ஆடுகளம்’ படத்தில் இடம்பெற்ற ’ஒத்த சொல்லால’ உள்பட பல திரைப்பட பாடல்களை பாடியவர் வேல்முருகன்.

ஓரிரு படங்களில் சிறிய வேடங்களில் தோன்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் இணைந்தால் பிக்பாஸ் வீட்டில் இனி பாட்டுக்கு பஞ்சமிருக்காது என நம்பலாம்.

Singer Vel Murugan is part of Bigg Boss 4 Tamil

ஓடிடி-யில் க/பெ.ரணசிங்கம் படத்தை பார்க்க கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

ஓடிடி-யில் க/பெ.ரணசிங்கம் படத்தை பார்க்க கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ka pae ranasingamவிஜய்சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், வேல.ராமமூர்த்தி, பவானி ஸ்ரீ ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ‘க/பெ.ரணசிங்கம்’.

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

நடிகர் பெரிய கருப்பத்தேவரின் மகன் பெ.விருமாண்டி இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

விவசாயம் மற்றும் தண்ணீர் பிரச்னைகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

ஜீ ப்ளக்ஸ் (zee plex) என்ற ஓடிடி நிறுவனம் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றியுள்ளது என்ற செய்தியை நம் தளத்தில் பார்த்தோம்.

அக்டோபர் 2-ஆம் தேதி இப்படத்தை ஆன்லைனில் பார்க்கலாம்.

இந்நிலையில் தியேட்டரில் பணம் கொடுத்து படம் பார்ப்பது போல உள்ள முறையை இப்படத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இந்த முறையில் ஜீ ப்ளக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் முதல் தமிழ்ப் படமாக க/பெ.ரணசிங்கம் அமைந்துள்ளது எனலாம்.

தியேட்டரில் ஒரு டிக்கெட்டில் ஒருவர் மட்டுமே படம் பார்க்க முடியும். ஆனால் இதில் ஒரு குடும்ப உறுப்பினர் பணம் கட்டினால் ஒரு குடும்பமே பார்க்கலாம். அதான் வித்தியாசம்.

ஒருமுறை பார்க்க ரூ.199 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் ஜீ ப்ளக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Ka Pae Ranasingam Budget, Digital Rights Price and Release details

More Articles
Follows