தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூபாய். 9,25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ரூபாய். 9,25,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“தளபதி விஜய்” அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில தலைமை
தளபதி விஜய் மக்கள் இயக்கம் மற்றும் அனைத்து தொகுதி தலைவர்கள், இளைஞர் அணி
தலைவர்கள், தொண்டரணி தலைவர்கள், மாணவரணி தலைவர்கள், கிளை மக்கள் இயக்க
தலைவர்கள், நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து 18.06.2022 (சனிக்கிழமை)
மாலை 6.00.மணியளவில் மறைமலை அடிகள் சாலை (சுதேசி மில் அருகில்) மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சுமார் ரூபாய்.9,25,000/-(ஒன்பது லட்சத்து இருபத்தைந்தாயிரம்) மதிப்பிளான செலவில் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்து அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் 1000 நபர்களுக்கு தலா 5 கிலோ வீதம் அரிசியும், 925 பெண்களுக்கு
புடவையும், 225 குடும்பங்களுக்கு மளிகை பொருட்களும், 15 நபர்களுக்கு காது கேட்டும் கருவி,700 நபர்களுக்கு சர்க்கரையும், 200நபர்களுக்கு கடிகாரமும், 150 நபர்களுக்கு டிபன் பாக்ஸ்,5 நபர்களுக்கு ஆடு, 1 ஏழை மாணவருக்கு லேப்டாப், 25 நபர்களுக்கு ஐயன் பாக்ஸ்,
70 நபர்களுக்கு பிளாஸ்டிக் வாலி, 70 நபர்களுக்கு பிளாஸ்டிக் குடம், விளையாட்டு பொருட்கள் கிரிக்கெட் செட் 1 குழவிற்கும், 3 நபர்களுக்கு கேரம் போர்டு, 25 நபர்களுக்கு சேர்,100 மாணவ மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், ஜாமன்டிரி பாக்ஸ் மற்றும் உப்பளம் தொகுதி அம்பேத்கர் சாலையில் உள்ள திரு. முத்துஜான் என்கிற நபருக்கு மருத்துவ உதவியாக ரூபாய்.10,000/-த்தையும், புதுச்சேரி மாநில செயலாளர் திரு.G.சரவணன் மற்றும் புதுச்சேரி மாநில தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் முன்னிலையில் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்ஸி. N.ஆனந்து அவர்கள் வழங்கினார்.

மேலும் இவ்விழாவில் மாநில நிர்வாகிகள் பொன்முடி, புதியவன், மோரீஸ், நிரேஷ்,
சார்லஸ், அமீன் மற்றும் தொகுதி தலைவர்கள் முத்தியால்பேட்டை ராமு, முதலியார்பேட்டை
மணிபாலன், ஊசுடு டேவிட், ராஜ்பவன் பிரதீபன், வில்லியனூார் பிரபு, உழவர்கரை ராஜசேகர்,
உருளையன்பேட்டை மணிவண்ணன், நெல்லித்தோப்பு செந்தில், காலாப்பட்டு தர்மா, அரியாங்குப்பம் வசந்த், லாஸ்பேட்டை சரவணன், இந்திராநகர் குமாரவேல், கதிர்காமம் வேல்முருகன், காமராஜர்நகர் விஜி, தட்டாஞ்சாவடி அருள், உப்பளம் முனியன், ஏம்பலம் மணிகண்டன், திருபுவனை கிருஷ்ணா, நெட்டப்பாக்கம் சுகுமார், மண்ணாடிப்பட்டு பாரதிதாசன், இளைஞரணி தலைவர்கள் உருளையன்பேட்டை பிரான்சிஸ், நெல்லித்தோப்பு செந்தில், உப்பளம் பேட்ரிக், ராஜ்பவன் பிரபு,உழவர்கரை அசோக், அரியாங்குப்பம் ஜீவா, காலாப்பட்டு மனோகர், கதிர்காமம் அருள்பாண்டி,வில்லியனூர் சுகுமார், திருபுவனை ராஜா, காமராஜர் நகர் சூர்யா, மணவெளி வசந்த், ஏம்பலம்,மதன், இந்திரா நகர் பார்த்திபன், தொண்டரணி தலைவர்கள் அரியாங்குப்பம் பிரபு, உப்பளம் சிவா
மற்றும் நிர்வாகிகள் உருளையன்பேட்டை பிரபு, நாகராஜ், சதீஷ், நரேஷ், வேலு, நெல்லித்தோப்பு
வேலு, விஷ்ணுகுமார் மாதவன், ராஜ்பவன் ஆனந்து, ஹரி, சந்துரு, வினோத், யுவராஜ்,
முதலியார்பேட்டை வரதன், பழனி, ஜெகன், கௌதம், முத்தியால்பேட்டை சுரேஷ், மகேஷ்,
சந்தோஷ், உப்பளம் ஐயப்பன், சுமன், அருள், வினாயகம், ஜார்ஜ், ஆனந்து, கண்ணன், உழவர்கரை
சுரேஷ், விஜய், ரியாஸ், அரியாங்குப்பம் ஜெகதீஷ், பிரதீவ், சிவா, செல்வா, மணிகண்டன்,
லாஸ்பேட்டை அந்தோணிராஜ், மணவெளி மணிகண்டன், பிரசாந்த், வில்லியனூர் அருண்குமார்,
சிவராமன், ஏம்பலம் அருள்மணி, கிருஷ்ணசாமி, மணிகண்டன், மற்றும் திரலான ரசிகர்கள்
தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

Rs. 9,25,000 worth of welfare activities by Vijay fans

என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை!

என் பாடல்களில் தரம் இருக்கும்! வளரும் பாடலாசிரியர் தரன் நம்பிக்கை!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அண்மையில் நயன்தாரா நடித்த ஓ2 படத்தில் பயணம் குறித்தான பாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில் வரும் வரிகள்தான் இது.

காத்தோடுதான் காத்தாக மெதப்போம்
நீரோடுதான் நீராக கலப்போம்
இயற்கையின் மடியில் கொஞ்சம்
வா சோம்பல் முறிப்போம்…

இதை எழுதியவர் வளர்ந்து வரும் பாடலாசிரியர் தரன். இலக்கிய தரத்தோடு சினிமா பாடல்கள் வர வேண்டும். அதே நேரத்தில் எளிதான வரிகளை உள்ளடக்கியும் இருக்க வேண்டும் என்கிற முனைப்போடு பாடல்களை எழுதி வருகிறார் இவர்.

தமிழில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் தரன், சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைப்படத்தில் எழுதிய ‘பக்கா மிடில் கிளாசுடா’ என்ற பாடல் மிடில் கிளாஸ் இளைஞர்களின் மோட்டிவேசன் பாடலாக இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இவர் ஜி.வி.பிரகாஷின் கடவுள் இருக்கான் குமாரு, திரிஷாவின் பரம்பத விளையாட்டு, எஸ் எஸ் குரமன் இசையில் பட்டதாரி உள்ளிட்ட சில படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான தனியிசை ஆல்பங்களும் எழுதியிருக்கிறார்.

அயல்நாடுகளில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள் தமிழில் பேசுவதோடு நின்றுவிடக் கூடாது. தமிழ் இலக்கண இலக்கியங்களை அறிந்து கொள்வதோடு, பிழையின்றி எழுத படிக்கவும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார் தரன். அதற்காக கணிணி வழியாக அவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவதைக் கடந்த பல ஆண்டுகளாக வெற்றிகரமாகவும் செய்து வருகிறார்.

பாடலாசிரியர்களில் வைரமுத்துவையும் பட்டுக்கோட்டையையும் அதிகம் நேசிக்கும் தரன், தன் பாடல்களிலும் அப்படி ஒரு தரம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

ஓ2 படத்தைத் தொடர்ந்து யங் மங் சங், ரஜினி, சண்டக்காரி, சூப்பர் ஸ்டார், ஒன் டூ ஒன், எம்.ராஜேஷ் இயக்கத்தில் வரவிருக்கும் படம் என கைவசம் கணிசமான வாய்ப்புகளை வைத்திருக்கிறார் தரன். பாடலோடு மட்டுமல்லாமல் தற்பொழுது சன்னி லியோன், பிரியா மணி நடிக்கும் Quotation gang திரைப்படத்தில் வசனமும் எழுதிவருகிறார்

Emerging songwriter Dharan’s hope

கே. ராஜன் வெற்றி.: சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் முடிவுகள்

கே. ராஜன் வெற்றி.: சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத் தேர்தல் முடிவுகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னை காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் கே.ராஜன் தலைமையிலான நிர்வாகிகள் அனைவரும் வெற்றிபெற்றுள்ளனர்.

செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர்களில் ஒன்பது பேர் கே.ராஜன் அணியை சேர்ந்தவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

வாக்களிக்க உரிமையுள்ளவர்கள் 469 பேர்
தேர்தலில் வாக்களித்தவர்கள்
359 பேர்

வாங்கிய வாக்கு விவரம்
தலைவர்
கே.ராஜன் 230
திருவேங்கடம் 124
செல்லாத ஓட்டு 5

செயலாளர்
கே.காளையப்பன் 186
ஸ்ரீராம் 109
அல்டாப் 53
செல்லாத ஓட்டு 11

துணைத் தலைவர்
எஸ்.நந்தகோபால் 196
அனந்த் 154
செல்லாத ஓட்டு 9

பொருளாளர்
பி.முரளி 176
சஞ்சய்லால்வானி 175
செல்லாத ஓட்டு 8

இணைச்செயலாளர்
சாய் என்கிற சாய்பாபா 199
ராஜகோபால் 147
செல்லாத ஓட்டு 13

*செயற்குழு உறுப்பினர்கள்*
மெட்ரோ ஜெயகுமார்
கிருஷ்ணன்
சந்திரன்
பிரபுராம்பிரசாத்
தியாகு
பன்னீர்செல்வம்
மனோகர்
சொக்கலிங்கம்
ஆனந்தன்
சுதாகர்
கிருஷ்ணமூர்த்தி
ராஜா ரகீம்
குரோம்பேட்டை பாபு
ஏ.ஜி.ரகுபதி
கருணாகரன்
நானி செல்வம்
ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

K. Rajan wins .: Chennai Kanchipuram Tiruvallur District Film Distributors Association Election Results

தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு படத்தை தமிழில் வெளியிடும் AR என்டர்டைன்மெண்ட்ஸ்

தேசிய விருதுபெற்ற ஜல்லிக்கட்டு படத்தை தமிழில் வெளியிடும் AR என்டர்டைன்மெண்ட்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாளத்தின் பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கிய ஜல்லிக்கட்டு படம் கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது.கேரள அரசின் விருது பெற்ற இந்த படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டது.சிறந்த ஒளிப்பதிவிற்காக இப்படம் தேசிய விருதினையும் வென்றுள்ளது . மேலும் ஆஸ்கர் விருதிற்காகவும் பரிந்துரை செய்யப்பட்டது . இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், சாபுமோன் அப்து சமது ,சாந்தி பாலச்சந்திரன் ஆகியோர் நடித்திருந்தனர்.

கிரிஷ் கங்காதரன் இந்த படத்திற்காக ஒளிப்பதிவு செய்து தேசிய விருதினை பெற்றுத்தந்தார் . தீப்பு ஜோசப் இப்படத்திற்கு பின்னணி இசையை உருவாக்கியுள்ளார் . மாபெரும் வெற்றி மற்றும் வரவேற்பை பெற்ற இந்த படத்தின் தமிழ் உரிமையை AR என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரிப்பாளர் அமித் குமார் அகர்வால் கைப்பற்றி தமிழில் டப்பிங் செய்து தற்போது அமேசான் பிரைமில் வெளியிட்டுள்ளார் .

கேரளாவில் ஒரு மலையோர கிராமத்தில் இறைச்சிக்காகக் கொண்டு வரப்படும் ஒரு எருமை, கட்டை அவிழ்த்து ஓடுகிறது. அந்த எருமையை ஊர் மக்களே சேர்ந்து பிடிப்பது தான் இந்தப் படத்தின் கதையாகும். மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான இப்படம் தற்போது தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது .

ஜல்லிக்கட்டு

AR Entertainments to release national award winning film Jallikattu in Tamil

விஜய் பிறந்தநாளுக்கு முன்பே ‘தளபதி 66’ படத்தின் மெகா விருந்து

விஜய் பிறந்தநாளுக்கு முன்பே ‘தளபதி 66’ படத்தின் மெகா விருந்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கிய ‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்தை தெலுங்கு இயக்குனர் இயக்குவதால் இது விஜய் நடிப்பில் உருவாகும் முதல் தெலுங்கு படம் என்றும் கூறலாம்.

இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை என்பதால் தற்காலிகமாக ‘தளபதி 66’ என்று அழைக்கப்படுகிறது.

வம்சி இயக்கும் இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

இதில் விஜய்யுடன் ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

‘விஜய் 66’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இந்நிலையில், வரும் ஜூன் 22-ம் தேதி நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு ஒரு நாள் முன்னதாக ஜூன் 21-ம் தேதி மாலை 6.01 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

Mega party of ‘Thalapathy 66’ before Vijay’s birthday

கர்ப்பிணி மனைவி லலிதாவுடன் சென்று தன் குரு கமலிடம் ஆசி பெற்ற ஷோபி

கர்ப்பிணி மனைவி லலிதாவுடன் சென்று தன் குரு கமலிடம் ஆசி பெற்ற ஷோபி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த படம் ‘விக்ரம்’.

முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்திருந்தார்.

இந்த படம் ஜூன் 3-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கமல் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் “விக்ரம்” பட வெற்றிக்கு வாழ்த்து கூறி, தனது குடும்பத்துடன் குரு கமலஹாசனிடம் ஆசி பெற்றுள்ளனர் நடன இயக்குநர்கள் ஷோபி மற்றும் லலிதா ஷோபி

கோலிவுட் முதல் பாலிவுட் வரை முன்னணி நட்சத்திரங்களை ஆட்டுவிக்கும் பிரபல நடன இயக்குநர் ஷோபி மற்றும் அவரது மனைவி நடன இயக்குநர் லலிதா ஷோபி ஆகிய இருவரும் தங்களது மகள் ஸ்யமந்தகமணி அஷ்விகா ஷோபி உடன் தனது குருவான உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து “விக்ரம்” படத்திற்கு வாழ்த்து கூறியதுடன், அவரிடம் ஆசி பெற்றிருக்கிறார்.

நடன இயக்குநர் ஷோபி. 2004 ஆம் ஆண்டு வெளியான கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம் பி பி எஸ்’ படம் மூலம் நடன இயக்குநராக திரைத்துறையில் அறிமுகமானவர்.

அவர் தனது கர்ப்பமாக உள்ள தனது மனைவி லலிதா ஷோபியுடன், திரைத்துறையில் அவர்களது குருவாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும் கமல்ஹாசன் அவர்களை, “விக்ரம்” படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, சந்தித்து வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள், நடன இயக்குநர் லலிதா ஷோபி அவர்களை அக்கறையுடன் உடல்நலம் விசாரித்து அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்து கூறினார்.

Shobi and his pregnant wife Lalita received blessings from Kamal

More Articles
Follows