தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 35 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் தனது நகைச்சுவை நடிப்பாலும் பிறருக்கு உதவி செய்யும் குணத்தாலும் தனித்துவமான மதிப்பை பெற்றிருந்தவர் நடிகர் மயில்சாமி.
கடந்த மாதம் திடீரென ஏற்பட்ட இவரது மறைவு எல்லோருக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தனது மரணத்திற்கு முன்பாக விளம்பரம் என்கிற குறும்படம் ஒன்றில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரேகா நாயர் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த குறும்படத்தை A.ராகுல் என்பவர் இயக்கியுள்ளார். அவர் தந்தையான அசோக்குமார் இந்த குறும்படத்தை தயாரித்துள்ளார்.
இந்த குறும்பட வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் மற்றும் மயில்சாமியின் மகன் அன்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குறும்பட குழுவினரை பாராட்டியதுடன் நடிகர் மயில்சாமி குறித்த தங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் அசோக்குமார் பேசும்போது…
“இது என் மகனின் முதல் முயற்சி. இந்த குறும்படத்தை பார்த்தபோது என் மகனும் என்னை மாதிரியே இருக்கிறான் என்கிற திருப்தி ஏற்பட்டது. அவரது துணிச்சலை பாராட்டுகிறேன். இந்த குறும்படத்தால் நமக்கு லாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இது மக்களுக்கு சென்றடைய வேண்டும்.. அதனால் இதை இலவசமாகவே அவர்களுக்கு கொண்டு சேர் என்று கூறிவிட்டேன்” என கூறினார்.
நடிகை ரேகா நாயர் பேசும்போது…
“இந்த குறும்படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் என்னை பார்த்தது கூட கிடையாது. ஆனால் மனிதர்களை, விலங்குகளை துன்புறுத்தக் கூடாது என்று தொடர்ந்து சமூக அவலங்களை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் எனக்கு இந்த படம் கிடைத்தது ஒரு கிப்ட் என்றே சொல்லலாம்.
விளம்பரங்கள் பொதுமக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் விளம்பரத்தில் யார் நடித்தாலும் கண்ணை மூடிக்கொண்டு அதன் உண்மைத்தன்மை அறியாமல் நடிக்க வேண்டியது இல்லை.
நமக்கென ஆறாம் அறிவு இருக்கு.. அதை பயன்படுத்தி ஆராய்ந்து நடியுங்கள்.. மயில்சாமியை பொறுத்தவரை யாருக்காவது உதவி செய்துகொண்டே இருக்க வேண்டும் என நினைப்பவர். சென்னையில் மிகப்பெரிய அளவில் வெள்ளம் சூழ்ந்தபோது நானும் அவரும் மக்களை தேடி சென்று உணவு அளித்தோம். அடுத்தவருக்காகவே வாழ்ந்தவர் மயில்சாமி” என்று கூறினார்.
Rekha Nair advice to her team members