ஒற்றுமைக்கான முயற்சியில் பப்லு – ஜேம்ஸ்வசந்தன் – ரேகா நாயர் பங்கேற்பு.; Eternal Gift First look Release

ஒற்றுமைக்கான முயற்சியில் பப்லு – ஜேம்ஸ்வசந்தன் – ரேகா நாயர் பங்கேற்பு.; Eternal Gift First look Release

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கண்டறி… மீட்பு… புத்தாக்கம் ( Find.. Rescue… Recover..) எனும் கொள்கைகளை இலட்சியமாகக் கொண்டு இயங்கி வரும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு (UNITED SAMARITAN INDIA FOUNDATION) இந்தியா அறக்கட்டளை‌ சார்பில், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளை முன்னிட்டு, புத்தக வெளியீடு, கண் தான சான்றளிப்பு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்று திறனாளிகளை கௌரவப்படுத்தும் நிகழ்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் ‘ஒற்றுமைக்கான புது முயற்சி’ ( ‘The Togetherness Initiative ) எனும் பெயரில் சோழிங்கநல்லூரில் உள்ள முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Mohamed Sathak college Arts and science ,Sholinganallur) வளாகத்தில் நேற்று ஆகஸ்ட் 3 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பப்லு - ஜேம்ஸ்வசந்தன் - ரேகா நாயர்

முன்னாள் மிஸ் தமிழ்நாடு டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes ) தலைமையில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு ஒருங்கிணைக்கும் இவ்விழாவிற்கு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. ராகுல் நாத் (Thiru.A.R.Rahul Nath IAS-District collector chengalpattu )இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாட்டு துணைத்தலைவரான திரு சங்கர் நாகநாதன் (Thiru.Sankar Naganathan ) ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

இவர்களுடன் தமிழ் திரையுலக முன்னணி நட்சத்திர நடிகரான பப்லு பிருத்விராஜ் (Actor Babloo Prithiviraj ), இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (Music Director James vasantham ), நடிகை ரேகா நாயர் (Actress Rekha Nair ) உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

பப்லு - ஜேம்ஸ்வசந்தன் - ரேகா நாயர்

இந்நிகழ்வில் I AM TOUGH… BECAUSE I AM GOOD & MAGIC OF QUIET EGO எனும் இரண்டு உளவியல் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

முகமது சதக் கலை & அறிவியல் கல்லூரிகள் (Mohamed sathak college of arts &science), ஆசான் மெமோரியல் கலை & அறிவியல் கல்லூரி(Adan Memorial college of arts &sciene)), சென்னை கிறிஸ்தவ கல்லூரி (Madras christian college)., காயிதே மில்லத் ஆண்கள் கல்லூரி(the Quaide Milleth college for men ) ஆகிய நான்கு கல்லூரியைச் சேர்ந்த 2500 மாணவ மாணவிகள் தங்களுடைய கண்களை தானமாக பெறுவதற்கு ஒப்புதல் அளித்திருந்தனர். அதற்கான‌ சான்றிதழ் கல்லூரிகளுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

பப்லு - ஜேம்ஸ்வசந்தன் - ரேகா நாயர்

தனி திறமைகளால் ஜொலிக்கும் 25-க்கும் மேற்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கௌரவப்படுத்தும் வகையில் விருது வழங்கப்பட்டது.

ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பு (UNITED SAMARITAN INDIA FOUNDATION) இந்தியா அறக்கட்டளை அமைப்பின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமான டாக்டர் ஷீபா லூர்தஸ் (Dr.Sheeba Lourdhes ) இயக்கத்தில் உருவான ‘ எடனர்ல் கிஃப்ட் ‘(Eternal Gift ) எனும் குறும்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. ETERNAL GIFT என்கிற ஷார்ட் பிலிம் ஒன்றுபட்ட சமாரியர்கள் அமைப்பின் மூலம் 25க்கும் மேற்பட்ட உலக திரைப்பட விழாக்களில் இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளது.

இதைத் தவிர்த்து வருகை தந்திருக்கும் பார்வையாளர்களை மகிழ்விக்கும் வகையில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பப்லு - ஜேம்ஸ்வசந்தன் - ரேகா நாயர்

Babloo James Vasanthan Rekhanair participated in Togetherness Initiative

‘டிமான்ட்டி காலனி 2’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட்

‘டிமான்ட்டி காலனி 2’ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2015-ம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான படம் ‘டிமான்ட்டி காலனி’.

‘டிமான்ட்டி காலனி’ முதல் பாகம் வரவேற்பை பெற்றதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் அருள் நிதி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இப்படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவந்ததையடுத்து சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் (03-08-2023) மாலை 5.01-க்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘டிமான்ட்டி காலனி -2’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மேலும், ‘டிமான்ட்டி காலனி -2’ திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிமான்ட்டி காலனி 2

Arulnithi’s Demonte Colony 2 first look poster released

இளையராஜாவின் வாழ்க்கை கதையில் தனுஷ்.; இயக்குனர் யார் தெரியுமா.?

இளையராஜாவின் வாழ்க்கை கதையில் தனுஷ்.; இயக்குனர் யார் தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இந்திய சினிமாவின் மிகப் பெரிய ஆளுமை என்றால் அதில் இளையராஜாவை சொல்லலாம்.

50 ஆண்டுகளாக இசை உலகை தன்னுடைய இசை தாலாட்டால் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

கிட்டத்தட்ட சுமார் 1500 படங்களுக்கு மேல் இவர் இசையமைத்துள்ளார். தமிழக ரசிகர்களை பொறுத்தவரை அவர்களது வாழ்வில் இன்பம் துன்பம் என எல்லா உணர்வுகளிலும் தன் இசையால் கலந்திருப்பவர் இளையராஜா.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இவர் இசையமைத்திருக்கிறார்.

இசைஞானி மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் இளையராஜாவின் வாழ்க்கையை திரைப்படமாக முயற்சித்து வருகின்றனர்.

இளையராஜா வேடத்தில் நடிகர் தனுஷை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தனுஷை வைத்து இளையராஜாவின் பயோபிக்கை உருவாக்கவுள்ளதாக பாலிவுட் இயக்குனர் ஆர்.பால்கி என்ற ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆர்.பால்கி

ஹிந்தியில் அமிதாப்பச்சன், தனுஷ் நடிப்பில் ரிலீசான ‘ஷமிதாப்’ என்ற படத்தை இயக்கியவர் தான் ஆர்.பால்கி.

அவரின் சமீபத்திய பேட்டியில்…

“என் வாழ்நாள் கனவு என்பது, இளையராஜாவின் வாழ்க்கையை படமாக்குவது. அதில் தனுஷை நடிக்க வைத்து இயக்குவதுதான்.

அப்படி மட்டும் நடந்தால், அது நான் தனுஷுக்கு கொடுக்கக்கூடிய பெரிய பரிசாக இருக்கும்.

என்னைப்போல் தனுஷும் இளையராஜாவின் ரசிகர். இவ்வாறு ஆர்.பால்கி கூறினார்.

இவர் ஹிந்தியில் இயக்கிய ‘சீனி கம்’, ‘பா’, ‘ஷமிதாப்’, ‘கி அன்ட் கா’ ஆகிய படங்களுக்கு இளையராஜா இசை அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.

ஆர்.பால்கி

Dhanush will act in ilaiyaraaja biopic

ஒரு கட்டத்துக்கு மேல என்கிட்ட பேச்சு இல்ல.. வீச்சு தான்.; ரஜினியின் ‘ஜெயிலர்’ ட்ரைலர் 10M ரீச்சு

ஒரு கட்டத்துக்கு மேல என்கிட்ட பேச்சு இல்ல.. வீச்சு தான்.; ரஜினியின் ‘ஜெயிலர்’ ட்ரைலர் 10M ரீச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ படத்தின் டிரைலர் நேற்று ஆகஸ்ட் 2 தேதி மாலை 6 மணிக்கு வெளியானது.

இந்த ட்ரெய்லரில் ரஜினியின் ஓவர் பில்டப் பஞ்ச் டயலாக் எதுவும் இல்லாமல் மிகவும் யதார்த்தமாக நெல்சன் இயக்கிய முந்திய படங்களை போல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே இது அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இந்த படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்திருப்பார் என்பதால் அவரின் காட்சிகள் பெரிதாக இடம் பெறவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்த ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தை கடக்கின்ற நிலையில் இதுவரை 10 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது என படக்குழுவினர் அறிவித்து புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டிவிட்டர் பதிவில்.. “இங்க இவருதான் கிங்கு இவரு வைக்கிறதுதான் ரூல்ஸ் என ஒரு கோடி பார்வையாளர்களின் வீடியோ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த ‘ஜெயிலர்’ ட்ரெய்லரில்.. “ஒரு கட்டத்துக்கு மேல என்கிட்ட பேச்சு இல்ல.. வீச்சு தான் என்கிற டயலாக் ரசிகர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

The much awaited Jailer Showcase crosses 10M Views in 20 hours

‘சுப்ரமணியபுரம்’ படம் ரீ ரிலீஸ்.; புதிய ட்ரைலரை வெளியிட்ட படக்குழு

‘சுப்ரமணியபுரம்’ படம் ரீ ரிலீஸ்.; புதிய ட்ரைலரை வெளியிட்ட படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி சசிகுமார் இயக்கத்தில் வெளியான படம் ‘சுப்ரமணியபுரம்’.

இப்படத்தில் ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, சுவாதி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பில் உருவான படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

‘சுப்ரமணியபுரம்’ படம் வெளியாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலீசாக உள்ளது என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் புதிய வெர்ஷன் டிரைலரை இயக்குனர் சசிகுமார் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

‘Subramaniapuram’ launch a new trailer ahead of the film’s re-release

ஆதி – ஹன்சிகா இணைந்த ‘பார்ட்னர்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

ஆதி – ஹன்சிகா இணைந்த ‘பார்ட்னர்’ படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக இயக்குனர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பாட்னர்’.

இப்படத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி, பாலக் லால்வானி, யோகி பாபு, பாண்டியராஜன், ரோபோ சங்கர், ஜான் விஜய், ரவி மரியா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ராயல் ஃபார்ச்சூனா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் கோலி சூரிய பிரகாஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘பாட்னர் ‘ படம் வருகிற 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பார்ட்னர்

Aadhi’s partner movie release date announced

More Articles
Follows