கமல் மற்றும் விஜய் சேதுபதியை இயக்கும் அஜீத் பட இயக்குனர் ?

கமல் மற்றும் விஜய் சேதுபதியை இயக்கும் அஜீத் பட இயக்குனர் ?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் 233வது படத்தை வினோத் இயக்க உள்ளார்.

இந்த மெகா ஆக்‌ஷன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், கமல் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளையும் ஒரு மாதத்திற்குள் முடித்துவிடுவதாக இயக்குனர் உறுதியளித்துள்ளார்.

விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படம் இன்னும் சில வாரங்களில் தொடங்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் அல்லது ஜூலை நடுப்பகுதியில் வினோத்துடன் இணைந்து ‘கேஎச்233’ படத்தை முடித்துவிட்டு, அதன்பிறகு மணிரத்னத்தின் ‘கேஎச் 234’க்கு செல்வார் என்று கூறப்படுகிறது.

Kamal and Vijay Sethupathi again joins for a new movie

மறைந்த விவேக் & நெடுமுடி வேணு காட்சிகளில் ட்விஸ்ட் வைக்கும் ஷங்கர்

மறைந்த விவேக் & நெடுமுடி வேணு காட்சிகளில் ட்விஸ்ட் வைக்கும் ஷங்கர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷங்கர் தற்போது கமல்ஹாசனை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஆனால், ‘இந்தியன் 2’ சில காரணங்களால் நடுவில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டது.

அந்த நேரத்தில் இரண்டு முக்கிய நட்சத்திரங்களான விவேக் மற்றும் நெடுமுடி வேணு உடல்நிலை காரணமாக மரணமடைந்தனர்.

இந்த நிலையில், மறைந்த நடிகர்களின் மீதமுள்ள பகுதிகளை படமாக்க இயக்குனர் ஷங்கர் ஒரு மாற்றீட்டைக் கண்டுபிடிப்பார் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், மறைந்த நட்சத்திரங்களின் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு படமாக்க இன்னும் சில பகுதிகள் உள்ளன.

எனவே, மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணுவின் மீதமுள்ள பகுதிகளை VFX ஐப் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படமாக்க திட்டமிட்டு ஒரு புத்திசாலித்தனமான யோசனையை ஷங்கர் கொண்டு வந்துள்ளார்.

‘Indian 2’ to again feature late actors Vivek and Nedumudi Venu

‘விடுதலை’ ஓடிடி ரிலீஸ்.; திரையில் பார்க்காத சீன்களை இணைக்க படக்குழு திட்டம்

‘விடுதலை’ ஓடிடி ரிலீஸ்.; திரையில் பார்க்காத சீன்களை இணைக்க படக்குழு திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வெற்றி மாறன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய வேடங்களில் நடித்து வெளியான படம் ‘விடுதலை’.

இப்படத்தில் பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

‘விடுதலை’ படம் மார்ச் 31 அன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியது.

இப்படம் 24 நாட்களைக் கடந்தும் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில். விடுதலை படத்தை ஏப்ரல் 28 முதல் பிரபலமான டிஜிட்டல் தளமான ZEE 5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓடிடியில் வெளியாக உள்ள விடுதலை படத்தில் கூடுதலாக 20 நிமிட காட்சிகளை சேர்க்க வெற்றிமாறன் பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

‘Viduthalai’ to stream on OTT from April 28th

சூர்யாவின் கங்குவா படத்தில் இணைந்த KGF பிரபலம் !

சூர்யாவின் கங்குவா படத்தில் இணைந்த KGF பிரபலம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யாவின் கங்குவா படக்குழு தற்போது கொடைக்கானலில் உள்ள வனப்பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகிறது. இந்த படப்பிடிப்பில் பீரியட் போர்சன் காலப்பகுதிகள் படமாக்கப்படுகின்றன. இந்த படப்பிடிப்பு சுமார் 3 வாரங்கள் (20 நாட்கள்) வரை நடைபெறும் என சொல்ல படுகிறது. புதிதாக ‘கேஜிஎஃப்’ புகழ் நடிகர் பி.எஸ்.அவினாஷும் படப்பிடிப்பில் இணைந்துள்ளது படக்குழுவுக்கு உற்சாகத்தை தந்துள்ளது . சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார்.

சூர்யா பல வேடங்களிலும் கெட்டப்புகளிலும் நடிக்கும் பீரியட் ஃபேன்டஸி படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exciting red hot updates on Suriya’s Kanguva

‘அயலான்’ ரிலீஸ் அப்டேட்.; தீபாவளி விருந்தளிக்கும் சிவகார்த்திகேயன்

‘அயலான்’ ரிலீஸ் அப்டேட்.; தீபாவளி விருந்தளிக்கும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள, ஆர். ரவி குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 24 AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில், KJR ஸ்டுடியோஸ்-இன் பிரம்மாண்ட வெளியீடான ‘அயலான்’ இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது.

இது குறித்து KJR ஸ்டுடியோஸ், கோட்டபாடி ஜே ராஜேஷ் பேசுகையில்…

“இந்த திரைப்படத்தை இடைவிடாத கடின உழைப்பை செலுத்தி படமாக்கியுள்ளோம். மேலும் பல தடைகளை தாண்டி. “அயலான்” திரைப்படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் CGI காட்சிகளுக்கு பெரும் மெனக்கெடலுடன் பணி புரிந்துள்ளோம்.

அயலான், ஒரு பான்-இந்தியன் திரைப்படத்திற்கு அதிக எண்ணிக்கையிலான CGI காட்சிகளைக் கொண்டிருக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. திரைப்படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது.

திரைப்படம் முழுவதும் வரும் வேற்றுகிரகவாசி கதாபாத்திரம் அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தபட்டுள்ளது.

மேலும், 4500+ VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ்-ஆக்சன் திரைப்படமாக ‘அயலான்’ இருக்கும் என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த நேரத்தில், பல ஹாலிவுட் திரைப்படங்களின் CG-க்குப் பின்னால் உள்ள Phantom FX நிறுவனத்திற்கு, அவர்களது அளப்பரிய CG பணிக்காக நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம்.

உங்களது பொறுமை மற்றும் இடைவிடாத ஆதரவிற்காக அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். உங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் திரைப்படமாக அயலான் இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.”

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாக இருக்கும் ‘அயலான்’ மூலம் கற்பனைக்கு அப்பாற்பட்ட, அதிசயங்கள் நிறைந்த புதிய உலகத்திற்கு செல்ல தயாராகுங்கள்.

Sivakarthikeyan’s ‘Ayalaan’ release date announced

An extra terrestrial visit and a Diwali treat from beyond the stars!
Experience the awe and wonder of an alien presence 👽

#AyalaanFromDiwali2023 🔥

#Ayalaan @Siva_Kartikeyan @arrahman @Ravikumar_Dir @kjr_studios @24amstudios @Phantomfxstudio @Rakulpreet @ishakonnects @SharadK7 @iYogiBabu #Karunakaran #Niravshah @AntonyLRuben @muthurajthangvl @anbariv @SOUNDARBAIRAVI @gopiprasannaa @Pallavi_offl @sonymusicsouth @DoneChannel1 @gobeatroute

ஐஸ்வர்யா ராஜேஷ் – செல்வராகவன் இணையும் பட ரிலீஸ் அப்டேட்

ஐஸ்வர்யா ராஜேஷ் – செல்வராகவன் இணையும் பட ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் அடுத்த தயாரிப்பான ‘ஃபர்ஹானா’ மே 12-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

‘ஜோக்கர்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘அருவி’, ‘கைதி’ உள்ளிட்ட சிறந்த படங்களின் மூலம் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்.

தற்போது ‘ஃபர்ஹானா’வுடன் தங்களின் சிறந்த படைப்புகளுக்கான பட்டியலில் மற்றொரு பெயரைச் சேர்க்கவுள்ளது.

தற்போதைய தமிழ் சினிமாவின் தனித்துவமிக்க நடிகைகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்தப் படம் ‘ஃபர்ஹானா’ மட்டுமல்ல, பொதுவாக பெண்களின் வாழ்க்கையில் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை நுணுக்கமாகப் பிரதிபலிக்கும் ஒரு கதையாக உருவாகியுள்ளது.

அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் திரைக்கதையும், அழுத்தமான கதாபாத்திரங்களும் எழுதப்பட்டுள்ளன.

‘ஒரு நாள் கூத்து’, ‘மான்ஸ்டர்’ என தனது முதல் 2 படங்களின் மூலம் வெற்றி கண்ட நெல்சன் வெங்கடேசன் ‘ஃபர்ஹானா’வை இயக்கியுள்ளார்.

மேலும் இதில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘மான்ஸ்டர்’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, தேசிய விருது பெற்ற சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மே 12-ம் தேதி 3 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது ‘ஃபர்ஹானா’.

Aishwarya Rajesh – Selvaraghavan movie release update

More Articles
Follows