மன்னிப்பு கேட்க மாட்டேன் என முருகதாஸ் கூறியதற்கு ரஜினி படம் பின்னணியா..?

rajini kanth and AR Murugadossவிஜய் நடிப்பில் உருவான சர்கார் படத்தை ஏஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை தீயிட்டு கொளுத்தும் காட்சிக்களை வைத்திருந்தார் முருகதாஸ்.

மேலும் அந்த காட்சியில் அவரே நடித்தும் இருந்தார்.

பல கட்ட பிரச்சினைகளுக்கு பிறகு அந்த காட்சி நீக்கப்பட்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

அதன்பின்னர் முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக அரசு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

ஆனால் மன்னிப்பும் கேட்க முடியாது. அரசை விமர்சிக்கும் காட்சிகளை இனி என் படங்களில் வைக்க மாட்டேன் என்ற உத்திரவாதமும் தர முடியாது என உறுதியாக கூறினார் முருகதாஸ்.

இந்நிலையில் முருகதாஸ் அடுத்து ரஜினி நடிக்கவுள்ள படத்தை இயக்குகிறார்.

அதில் ரஜினி ஆலோசனைப்படி நிறைய அரசியல் பன்ச்களும் இருக்கும் எனத் தெரிகிறது.

மேலும் முழுக்க முழுக்க அரசியல் படமாக இருக்கும் என கூறப்படுகிறது.

அப்படியிருக்கையில் அரசை விமர்ச்சிக்கும் காட்சிகளை இனி வைக்க மாட்டேன் என முருகதாஸ் எப்படி? உத்திரவாதம் அளிப்பார். என விவரமறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

Overall Rating : Not available

Latest Post