தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் 2013-ம் ஆண்டு ரிலீஸாகி சூப்பர் ஹிட் அடித்த தெலுங்குப் படம் ‘அத்தரண்டிகி தாரேதி’.
இதில் பவன்கல்யாணின் மாமியாராக நதியா நடித்திருந்தார்,
தற்போது இப்படத்தை தான் சிம்புவை வைத்து இயக்கி வருகிறார் சுந்தர். சி.
இதில் நாயகியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். மற்றொரு நாயகி தேர்வு நடைபெற்று வருகிறது.
நதியா நடித்த வேடத்தில் குஷ்பூ நடிப்பதாக தகவல்கள் வெளியானது.
ஆனால் தற்போது குஷ்பூக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, நேற்று ஜார்ஜியாவில் தொடங்கியது. செப்டம்பர் 27 ஆம் தேதி வரை அங்கே சூட்டிங் நடைபெற உள்ளதாம்.
ஒரு பாடல்காட்சியும், சேஸிங் காட்சியும் படமாக்கப்படவுள்ளது.
தற்போது பாடல் காட்சியின் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.