ஒரு பாடலுக்கு 8 கோடி பட்ஜெட்.; ஐநா-சபை திரும்பி பார்க்கும் – கே டி குஞ்சுமோன்

ஒரு பாடலுக்கு 8 கோடி பட்ஜெட்.; ஐநா-சபை திரும்பி பார்க்கும் – கே டி குஞ்சுமோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா தயாரிப்பாளர் கே டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் ஜென்டில்மேன்-ll.

ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி இசை அமைக்கும் இந்த படத்தின் துவக்க விழா இன்று ஆகஸ்ட் 19 காலை எழும்பூரில் உள்ள ராஜா முத்தையா மன்றத்தில் விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கோகுலம் பைஜூ, தயாரிப்பாளர் காட்ரகட்ட பிரசாத், கே.ராஜன், தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, இயக்குனர்கள் ஆர்.வி உதயகுமார், பி.வாசு, கதிர், இசையமைப்பாளர் தினா, நாஞ்சில் சம்பத், நடிகைகள் சித்தாரா, சத்யபிரியா, ஸ்ரீரஞ்சனி, விஜி சந்திரசேகர், குட்டி பத்மினி, காணேஷ், ஹாரத்தி கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் துவக்கத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஜப்பான் துணை தூதர் திரு தாகா மஸாயூகி, வங்கதேச குடியரசின் துணை உயர் கமிஷனர் MD.அரிபுர் ரஹ்மான், தென்னிந்திய ஃபிலிம் சேம்பர் தலைவர் ரவி கொட்டாரக்கரா, திருமதி ஐரின் குஞ்சுமோன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி ஜென்டில்மேன்-ll படத்தை துவங்கி வைத்தனர்.

படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் கிளாப் போர்டை இயக்குநர் ஏ.கோகுல் கிருஷ்ணாவிடம் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் வழங்கினார்.

இசையமைப்பாளர் கீரவாணிக்கு ஆளுயர மாலை அணிவித்து தலைப்பாகையும் சூட்டப்பட்டு கவுரவம் செய்யப்பட்டது.

இப்படத்தின் இசையமைப்பாளர் யார் என கணித்து சொன்ன மூன்று நபர்களில் இருவருக்கு இசையமைப்பாளர் கீரவாணியின் கைகளால் தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.

இன்று வருகை தர இயலாத ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு நபருக்கு அங்கே படப்பிடிப்பு நடக்கும்போது தங்க நாணயம் வழங்கப்பட உள்ளது,

இந்த நிகழ்வில் *மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசும்போது…

“இங்கே தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் இந்த ஜென்டில்மேன் 2 படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்த வந்திருக்கின்றனர். இந்த படத்தின் பணிகளை கொரோனாவுக்கு முன்பே ஆரம்பித்தோம்.

நானும் இயக்குனர் செந்தமிழனும் இந்த படத்திற்கான கதையை உருவாக்கினோம். எப்போதுமே கதைக்கு ஏற்ற மாதிரியான ஆட்களை தான் தேர்வு செய்வேன். அதில் நான் பிடிவாதக்காரன். ஒவ்வொரு நபருமே ஜென்டில்மேன் ஆக இருந்து விட்டால் பிரச்சினை ஏதும் இருக்காது. அதைத்தான் இந்த கதை சொல்கிறது..

இந்த படத்திற்காக நான் அட்வான்ஸ் கொடுத்தபோது கீரவாணி, வைரமுத்து இருவருமே அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.

என்னுடைய குருவாக இருந்த ஜீவி ஒரு கட்டத்தில் பிரச்சனைகளை தாள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். பிரச்சனைக்கு அது தீர்வு அல்ல.. எனக்கும் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் அதிலிருந்து நான் மீண்டு வர வேண்டும் என்பதற்காக தான் இங்கே அனைவரும் வந்துள்ளனர்.

ஏ.ஆர் ரகுமானை வைத்து நான்கு படங்களை எடுத்துள்ளேன். இயக்குனர் ஷங்கரை வைத்து படம் பண்ணியுள்ளேன்.

100 படங்களுக்கு மேல் விநியோகஸ்தராக பணியாற்றி தான், தயாரிப்பாளர் என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளேன். அதனால் எந்த படம் எப்படி ஓடும் என்கிற பல்ஸ் எனக்கு தெரியும். எப்போதுமே படம் பார்க்கும் ஆடியன்ஸ்க்கு நஷ்டம் வராத மாதிரி தான் படம் எடுக்க வேண்டும்.

ஹீரோ ஹீரோயினுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்காமல் வளர்ந்து வருகின்ற இளம் நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து படம் எடுப்பதுதான் எனது பாணி. அப்படித்தான் ஷங்கர், ஏ.ஆர் ரகுமான், கதிர் ஆகியோர் உருவானார்கள்.

இப்படத்தை துவங்குவதற்கான காரணம் என்று சொன்னால் அது இசையமைப்பாளர் கீரவாணி தான். இப்படத்தில் பணியாற்ற வேண்டுமென இசையமைப்பாளர் கீரவாணியிடம் நேரில் சென்று பேசியபோது அவர் படத்தின் கதை, கதாநாயகன், இயக்குனர் யாரென்று எல்லாம் கேட்கவில்லை. குஞ்சுமோன் சாருக்காக இந்த படம் பண்ணுகிறேன் என்றார்.

இப்படத்திற்காக வைரமுத்து எழுதியுள்ள ஒரு பாடல் வரிகளை படமாக்க வேண்டும் என்றால் ஐநா சபையை திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்றால் கிட்டதட்ட எட்டு கோடியாவது அந்த பாடலுக்கு செலவு பண்ண வேண்டும்” என்றார்.

KT Kunjumon plan to spend Rs 8 crores for Gentleman2 single song

BRO பட நடிகர் சாய்தரம் தேஜ்வின் SOUL OF SATYA வீடியோவை வெளியிட்ட ராம்சரண்

BRO பட நடிகர் சாய்தரம் தேஜ்வின் SOUL OF SATYA வீடியோவை வெளியிட்ட ராம்சரண்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் சாய் தரம் தேஜ் மற்றும் நடிகை ஸ்வாதி ரெட்டி நடிப்பில், சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) மியூசிக் வீடியோவை, நவின் விஜய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

மியூசிக் வீடியோவை முன்னணி நட்சத்திர நடிகர் ராம்சரண் வெளியிட்டார்.

‘ப்ரோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, நடிகர் சாய் தரம் தேஜ் மற்றொரு சுவாரஸ்யமான படைப்புடன் ரசிகர்களை மகிழ்விக்க வந்துள்ளார். ஆனால் இந்த முறை ஒரு அழகான மியூசிக் வீடியோவில் அசத்தியிருக்கிறார்.

சத்யாவின் ஆத்மா ( Soul Of Satya ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மியூசிக் வீடியோவில் நடிகை சுவாதி ரெட்டி இணைந்து நடித்துள்ளார்.

இந்த மியூசிக் வீடியோவை சாய் தரம் தேஜின் உறவினரும் நட்சத்திர நடிகருமான ராம் சரண் சமூக வலைதளங்களில் வழியே வெளியிட்டார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட மியூசிக் வீடியோ, நாட்டின் மீது கொண்ட அன்பிற்காக நாட்டை காக்க, தேசத்தின் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் தியாகங்கள் மற்றும் தடைகளை சித்தரிப்பதாக அமைந்துள்ளது.

Soul Of Satya

மியூசிக் வீடியோ வெளியீட்டை அறிவித்த சாய் தரம் தேஜ் ட்வீட் செய்துள்ளதாவது, “, விதி அதன் மேஜிக்கை மீண்டும் நிரூபித்துவிட்டது.

எங்களை ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திய நாயகன் மற்றும் எங்கள் நட்பின் அடையாளமாக இருப்பவர், இப்போது நாங்கள் இருவரும் இணைந்து உருவாக்கிய #TheSoulOfSatya உடைய பாடலை வெளியிடுகிறார்.

இந்த அற்புதமான மனிதரை எனக்கு அறிமுகப்படுத்தியற்கும் மற்றும் எங்கள் மியூசிக் வீடியோவை வெளியிட்டதற்கும் சரண் @AlwaysRamCharan நன்றி. @NawinVK நவீன் மற்றும் சத்யாவின் ஆத்மா படைப்பின் மொத்த குழுவிற்கும் இது மிகப்பெரும் பெருமை”

இந்த மியூசிக் வீடியோவை நவீன் விஜய் கிருஷ்ணா இயக்கியுள்ள நிலையில், ஸ்ருதி ரஞ்சனி பாடி இசையமைத்துள்ளார்.

பாடலாசிரியர் விவேக் ரவி இப்பாடலை தமிழில் எழுதியுள்ளார்.. தில் ராஜு புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பாலகம் என்ற வெற்றிப் படத்தை தயாரித்த ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஹன்சிதா ரெட்டி இந்த படைப்பைத் தயாரித்துள்ளனர்.

சாய் தரம் தேஜ் சமீபத்தில் ப்ரோ படம் மூலம் 100 கோடி கிளப்பில் நுழைந்து மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளார். அவரது மாமா பவன் கல்யாண் படத்தில் அவர் இணைந்து நடித்ததால் இது சாத்தியமானது என்கின்றனர் திரைப்பட ஆய்வாளர்கள்.

Soul Of Satya

SaiDharam Tej’s ‘SOUL OF SATYA’ video released Ramcharan

2 வருட ஆராய்ச்சிக்குப்பின் சிவன் பக்தன் ‘கண்ணப்பா’ கதையை படமாக்கும் விஷ்ணு மஞ்சு

2 வருட ஆராய்ச்சிக்குப்பின் சிவன் பக்தன் ‘கண்ணப்பா’ கதையை படமாக்கும் விஷ்ணு மஞ்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா – ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ படம் நேற்று ஸ்ரீ காளஹஸ்திரி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது.

சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம் மற்றும் பக்தியை பிரமாண்டமான திரைக்காவியமாக மக்களுக்கு கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட நடிகர் விஷ்ணு மஞ்சு, இதற்காக கடந்த இரண்டு வருடங்களாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

கண்ணப்பா

கண்ணப்பாவின் வாழ்க்கை மற்றும் அவருடைய பக்தியின் மகிமை குறித்து பல ஆச்சரியமான மற்றும் அதிசய தகவல்களை சேகரித்தவர், அவற்றைக் கொண்டு பிரமாண்டமான பான் இந்திய படத்தை கொடுப்பதற்கான வேலையை தொடங்கியுள்ளார்.

24 ஃபிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏவிஏ என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர்.மோகன் பாபு தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்ச் செலவில் பிரமாண்டமான காவியமாக உருவாக இருக்கும் இப்படத்தில் கண்ணப்பா வேடத்தில் விஷ்ணு மஞ்சு நடிக்கிறார்.

கதையின் நாயகியாக நுபுர் சனோன் நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள்.

கண்ணப்பா

பிரபல எழுத்தாளர்கள் பருச்சுரிகோபாலகிருஷ்ணா, தோட்டா பிரசாத், தோட்டப்பள்லி சாய்நாத், புர்ரா சாய் மாதவ் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளனர்.

மணிசர்மா மற்றும் ஸ்டீபன் தேவஸ்ஸே இசையமைக்கின்றனர். ஷெல்டன் ஷா ஒளிப்பதிவு செய்ய, சின்னா கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘மஹாபாரதம்’ தொடரை இயக்கிய முகேஷ் சிங் ‘கண்ணப்பா – ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படத்தை இயக்குகிறார்.

இந்திய சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் இன்றி ஹாலிவுட் சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றும் இப்படம் இந்திய சினிமாவின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக மட்டும் இன்றி உலக மக்களையும் கவரும் வகையில் பிரமாண்டமான படைப்பாக உருவாக உள்ளது.

கண்ணப்பா

இப்படம் குறித்து கூறிய நடிகர் விஷ்ணு மஞ்சு…

“மிகுந்த உற்சாகத்துடனும், பெருமிதத்துடனும், எனது நேசத்துக்குரிய படைப்பான ‘கண்ணப்பா – ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ படத்தை தொடங்கியிருக்கிறேன்.

இந்த திரைப்படம் தலைசிறந்த படைப்பாகவும், அன்பின் உழைப்பாகவும் பல ஆண்டுகளாக கவனமாக வளர்க்கப்பட்டது. ‘கண்ணப்பாவின்’ ஆழமான கதை பல தலைமுறைகளாக சினிமா ரசிகர்களின் இதயங்களில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது. சிவபெருமானின் அசைக்க முடியாத பக்தரான கண்ணப்பாவின் காலத்தால் அழியாத சரித்திரம், காலங்காலமாக ஆழ்ந்த பயபக்தியை பெற்றுள்ளது.

இந்தப் படம் என்னுடைய அடங்காத ஆர்வத்திற்குச் சான்றாக நிற்கிறது.

கண்ணப்பா

இது பல்வேறு இந்தியத் திரைப்படத் தொழில்களில் இருந்து புகழ்பெற்ற நடிகர்களைக் கொண்டு, பெரிய அளவில் வெளிவரும் வகையில் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது இந்திய சினிமாவில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட முயற்சிகளில் ஒன்றாக இருக்கும்.

அசைக்க முடியாத பக்தி மற்றும் அதன் மகத்துவத்தின் வெளிச்சத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த கதையில், கண்ணப்பாவின் பிரமிக்க வைக்கும் மாற்றமும் அடங்கியுள்ளது.

ஆரம்பத்தில் நாத்திகராக இருந்தவர், ஆழ்ந்த உருமாற்றத்திற்கு உட்பட்டு சிவபெருமானின் உறுதியான பக்தராக மாறினார். அவரது பக்தி தற்கால மற்றும் கலாச்சார எல்லைகளில் எதிரொலிப்பதோடு, வரலாற்றின் மிகவும் விதிவிலக்கான பக்தர்களில் ஒருவராக அவரது அந்தஸ்தை உறுதிப்படுத்துகிறது.

கண்ணப்பா

இந்த அசாதாரண பாரம்பரியத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எனக்கு பெருமையாக இருப்பதோடு, அதை என் பாக்கியமாகவும் கருதுகிறேன்.

இணையற்ற திறமையின் ஒருங்கிணைப்பு, எழுத்தாளர்களின் கதை நிபுணத்துவம், நுணுக்கமான கைவினைத்திறன், சமரசம் செய்யாத தொழில்நுட்பத் தரங்களில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை ’கண்ணப்பா’-வை கலைப் புத்திசாலித்தனத்தின் புதிய உச்சங்களுக்கு உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை. உச்சக்கட்டமாக, காலப்போக்கில் எதிரொலிக்கும் ஒரு மறக்க முடியாத தலைசிறந்த படைப்பாகவும், தற்போதைய தலைமுறையை வசீகரிக்கும் பக்தி படைப்பாகவும் ‘கண்ணப்பா – ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ இருக்கும்.” என்றார்.

கண்ணப்பா

Vishnu Manchu announces his dream project Kannappa A True Epic Indian Tale

சூப்பர் ஸ்டார் யார்.? அரசியல் என்ட்ரி.? மீண்டும் டைரக்ஷன்.? சத்யராஜ் சரவெடி பதில்

சூப்பர் ஸ்டார் யார்.? அரசியல் என்ட்ரி.? மீண்டும் டைரக்ஷன்.? சத்யராஜ் சரவெடி பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மோகன் டச்சு இயக்கத்தில் உருவான படம் ‘அங்காரகன்’. ஜூலியன் மற்றி, ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஸ்ரீபதி நாயகனாக நடித்துள்ளார்.

இவர் திரைக்கதையை எழுதியுள்ளதுடன் கிரியேட்டிவ் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இதில் டெரர் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடித்துள்ளார். மலையாள நடிகை நியா இந்த படத்தில் நாயகியாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று ஆகஸ்ட் 19 சென்னை பிரசாத் லேபிள் நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்குப் பிறகு பத்திரிகையாளர்களின் கேள்விக்கு நடிகர் சத்யராஜ் பதில் அளித்தார்.

அப்போது சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சை குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. மேலும் பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு…

சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் நம் நினைவிற்கு வருவது ரஜினி சார் மட்டும்தான். சினிமாவில் சார்லின் சாப்ளின் சூப்பர் ஸ்டார் என்றார்கள். அதன் பின்னர் ராஜேஷ் கண்ணா என்றார்கள்.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை தியாகராஜ பாகவதரை முதல் சூப்பர் ஸ்டார் என்றார்கள். ஆனால் அவருக்கு ஏழிசை மன்னர் என்ற பெயர் உண்டு. அவருக்கு அடுத்ததாக எம்ஜிஆரை சூப்பர் ஸ்டார் என்றார்கள். ஆனால் அவரை மக்கள் திலகம் என்று அழைக்கிறோம்.

அடுத்த ஏழிசை மன்னர் எம்ஜிஆர் என்று யாரும் அழைப்பதில்லை. கமல்ஹாசன் மிகச்சிறந்த கலைஞன்.. ஆனால் அவரை யாரும் அடுத்த நடிகர் திலகம் என்று அழைப்பதில்லை. அப்படி அழைத்தாலும் யாரும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை.

நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி மட்டும் தான். அது போல மக்கள் திலகம் என்றால் எம் ஜி ஆர் மட்டும்தான். அது போல சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி ஒருவர் மட்டும்தான்” என்று பேசினார் சத்யராஜ்.

அதன் பின்னர் மீண்டும் படம் இயக்குவீர்களா என்று கேட்கப்பட்ட போது.. “தற்போது நிறைய படங்களில் கேரக்டர் ஆரிட்டிஸ்ட் ஆக நடித்து வருகிறேன்.

படத்தை இயக்குவது மிகப்பெரிய வேலை. ஒரு நடிகர் என்றால் ஷார்ட் ரெடி ஆனதும் சென்று விடலாம். ஆனால் இயக்குனர் வேலை அப்படி அல்ல. எனவே அது நமக்கு வேண்டாம். இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப படம் இயக்குவது என்னால் முடியுமா என்று தெரியவில்லை.

அரசியலுக்கு வருவீர்களா ? என்று கேட்கப்பட்டது இப்போது கூட அரசியல்தான் இருக்கிறேன். அரசியல் என்பது தேர்தலில் நின்று எம்எல்ஏ எம்பி ஆவது சட்டசபைக்கு செல்வது மட்டும் அரசியல் அல்ல. அது ஓட்டு அரசியல்.

சமீபத்தில் திருமாவளவன் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டேன். அவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருகிறார். அது எனக்கு பிடித்திருந்தது.

என்னை கவர்ந்தவர் மணிவண்ணன். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு சித்தாந்த குருவாகவும் எனக்கு அவர் இருந்தார்.

30 வருடங்களுக்கு முன்பு பி வாசு, பாரதிராஜா, பாசில் ஆகியோர் என்னை சத்யராஜை வேறுவிதமாக காட்டி இருந்தார்கள். அன்று போட்ட விதைதான் இன்று வரை வளர்ந்து கொண்டிருக்கிறது.

கமல்ஹாசன் ஒரு மிகப்பெரிய கலைஞன். அவர் நினைத்திருந்தால் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற படத்தில் அவர் நடித்திருக்கலாம்.

ஆனால் அந்த படத்தை அவர் தயாரித்து இருந்தார் அதுபோல பி வாசு இயக்கிய பல படங்களில் எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டது.

மகா நடிகன் என்ற படத்தில் காமெடியாக செய்திருந்தார். அதே சமயம் வால்டர் வெற்றிவேல் படத்தில் கம்பீரமான போலீஸ் அதிகாரியாக காட்டி இருந்தார்.

இதுபோல பல இயக்குனர்கள் என்னை அப்போதே அப்படி காட்டி விட்டார்கள்.

நான் பல படங்களில் ரஜினி கமலுக்கு வில்லனாக நடித்தாலும் அவர்கள் எனக்கான இடத்தை கொடுத்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் எனக்கு பெரிய வசனங்கள் கொடுக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் என்னை பேச வைத்து அழகு பார்த்தார்கள்..

இவ்வாறு பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் சத்யராஜ்.

Sathyaraj reply to Next Super Star Political entry

சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஆதரவளிக்கும் ஆர்வி.உதயகுமார்

சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஆதரவளிக்கும் ஆர்வி.உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்னக் கவுண்டர், எஜமான், கிழக்கு வாசல், சிங்கார வேலன் உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ்‌ சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்படுபவர் இயக்குநர் ஆர்வி.உதயகுமார்.

இந்தப் படங்களுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இதில் இடம் பெற்ற பெரும்பாலான பாடல்களை எழுதி இருந்தார் உதயகுமார்.

நடிகர்கள் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக் ஆகியோருக்கு மேற்கண்ட படங்கள் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இந்தப் படங்கள் தமிழ் சினிமாவில் என்றும் மறக்க முடியாத எவர்கிரீன் படங்களாக அமைந்து விட்டன.

எனவே இயக்கம் மட்டுமின்றி தனது தனித்துவமான பாடல் வரிகளின் மூலம் பாடலாசிரியராகவும் கொண்டாடப்படுபவர்.

இவர் சமீப காலமாக நடிகராகவும் தனி முத்திரை பதித்து வருகிறார்.

பசங்க 2, அஞ்சல, தொடரி, தேவி உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் கலக்கியுள்ளார்.

தற்போது நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார். மேலும் சின்ன பட்ஜெட் படங்களின் இசை விழா உள்ளிட்ட நிகழ்ச்சிக்கு வருகை தந்து அந்த படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்.

அதுமட்டுமின்றி வளர்ந்து வரும் இயக்குனர்களுக்கும் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார் ஆர்வி.உதயகுமார்.

Director RV Udhayakumar new movie updates

நான் நினைச்சதை விட பத்து மடங்கு அதிகம்.; நெல்சனை பாராட்டிய ரஜினி

நான் நினைச்சதை விட பத்து மடங்கு அதிகம்.; நெல்சனை பாராட்டிய ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் உலக அளவில் பெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. ரஜினிகாந்த் தற்போது இமயமலையில் ஆன்மீகம் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஜெயிலர் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குனர் நெல்சன் பேசும்போது..

“இந்த வெற்றிக்கு காரணம் ரஜினி சாரின் பவர், ஆரா மற்றும் அவரது ரசிகர்கள் தான். ஒளிப்பதிவாளர். விஜய் கார்த்திக் கண்ணன் எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார் இதற்காக ஏதோ சித்த வைத்தியம் பார்த்து இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

அவரும் ரஜினி சாரின் ரசிகன் தான் என்றாலும் சில விஷயங்களை நம்புகிற மாதிரி இல்லை என்றால் அதை ஓபன் ஆக சொல்லிவிடுவார். இந்த படத்தில் அதிக நேரம் பணியாற்றியது என்றால் அது படத்தொகுப்பாளர் நிர்மலாகத்தான் இருக்கும். படம் ரிலீஸ் ஆகின்ற தினத்தில் கூட ஏதாவது ஒரு வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அதேபோல கலை இயக்குனர் கிரண் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என கேட்டார். ஆனால் அவரின் முழு கவனத்தையும் செட்டின் மீது செலுத்துங்கள் என கூறிவிட்டேன். கோபத்தில் ஏதாவது குறை வைத்து விடுவாரோ என நினைத்தேன் ஆனால் அற்புதமாக தனது வேலையை பார்த்துள்ளார்.

கோலமாவு கோகிலா படத்திலிருந்து ஸ்டன் சிவா மாஸ்டர் என்னை பாலோ செய்து வருகிறார். அதன்பிறகு தான் அவர் பணியாற்றிய படங்களை பார்த்தேன். உடனே ஜெயிலர் படத்தில் அவரை பணியாற்ற இணைத்துக்கொண்டேன். படப்பிடிப்பிற்கு அவர் மட்டுமல்ல அவரது இரண்டு பையன்களும் இணைந்து வந்து பணியாற்றினார்கள்.

ஜானி மாஸ்டருடன் நான்காவது முறையாக இணைந்து இந்த படத்தில் பணியாற்றியுள்ளேன். அவர் வடிவமைத்த காவாலா பாடல் படத்திற்கு மிகப்பெரிய புரமோஷன் ஆக அமைந்தது.

நடிகர் சுனில் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வாரா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஒப்புக்கொண்டு நடித்ததுடன் சிறப்பாக நடித்தாலும் கூட இன்னொரு முறை டேக் போலாகலாமா என ஆர்வமுடன் கேட்பார். எனக்காக ஒரு டேக்கும் அவருக்காக ஒரு டேக்கும் கூட சில நேரங்களில் எடுத்துக் கொண்டு அவற்றில் எது சிறப்பாக இருந்ததோ அதை பயன்படுத்தினோம்.

இந்த படத்தில் மிர்னா நடித்துள்ள கதாபாத்திரத்திற்காக முதலில் ஐந்து ஆறு பேரிடம் பேசினோம். ஆனால் மிர்னாவின் நடிப்பை பார்த்ததும் வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்ய யோசிக்கவில்லை. இந்தப்படத்தில் குறைந்த டேக் வாங்கி நடித்தவர்களில் மிர்னாவும் ஒருவர்.

இந்த படத்திற்காக ஹுக்கூம் பாடல் எழுதப்பட்டு என்னிடம் வந்த போது இதை எழுதியவர் யாரோ ஒரு ரஜினி ரசிகர் மன்ற தலைவர் தானே என்று அனிருத்திடம் கேட்டேன். அந்த அளவிற்கு ஒரு அதிரடி பாடலாக இதை உருவாக்கி இருந்தார்.

என்னுடைய முதல் படத்திலிருந்து இடம் பிடித்து வருகிறார் ரெடின் கிங்ஸ்லி. அவர் வரவில்லை என்று கூறினாலும் ஓல்டு சென்டிமென்ட் பேசி பிளாக்மெயில் செய்து வர வைப்பேன்.

ஆனால் படத்திற்குள் வந்த பிறகு நம்மை அவர் பிளாக்மெயில் செய்வார். கதை விவாதங்களில் கூட வந்து கலந்து கொள்வார். ஆனால் தேவையில்லாமல் ஏதாவது சொல்லி கோபித்துக் கொண்டு செல்வார்.

சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பு பொறுப்புகளை கண்ணன் மற்றும் செம்பியன் இருவருமே எடுத்துக் கொண்டார்கள். கலாநிதி மாறன் சாரிடம் ஒற்றை வரியில் கதை சொல்லி தப்பித்து விடலாம் என நினைத்தால் அவரோ இரண்டரை மணி நேரம் அல்ல 5 மணி நேரம் வரை கூட பொறுமையாக அமர்ந்து கதை கேட்பார். இந்த படத்தை தனது இதயத்திற்கு நெருக்கமாக நினைத்தார் கலாநிதி மாறன்.

இந்த படத்தை ரசிகர்கள் இவ்வளவு கொண்டாட காரணம் ரஜினி சார் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தார். படம் பார்த்துவிட்டு, நான் நினைத்ததை விட பத்து மடங்கு நல்லா வந்திருக்கு என்று பாராட்டினார்.

நிறைய பேர் என்னை சந்தேகமாக பார்த்தபோது ரஜினி சார் என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். இந்த படம் இங்கே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இப்போது இமயமலையில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் வந்ததும் அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “இந்த படத்தில் ரஜினி சாரின் கண்களை அதிகளவு குளோசப் காட்சிகளில் பயன்படுத்தி இருந்தோம். அதற்கு காரணம் எப்போதுமே அவர் நம்மை நோக்கி பார்க்கும்போது அவரது கண்களின் பார்வை தீர்க்கமாக இருக்கும்.

நான் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனும் இதை என்னிடம் கூறி ரஜினி சாரின் கண்களுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை வைக்க விரும்பினார். படத்தில் அந்த காட்சிகளை பின்னணி இசையுடன் பார்க்கும்போது மாஸாக இருந்தது” என்று கூறினார்.

Rajini is happy with Jailer even before its release says Nelson

More Articles
Follows