‘உப்பெண்ணா’ இயக்குனருடன் ராம் சரண் இணையும் புதிய பட அப்டேட்

‘உப்பெண்ணா’ இயக்குனருடன் ராம் சரண் இணையும் புதிய பட அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபத்தில் வெளியான தகவலின்படி, ராம் சரண், ‘உப்பென’ தயாரிப்பாளர் புச்சி பாபு சனாவுடன் இணைகிறார்.

இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவில்லை, வேறு யாரோ தயாரிக்கிறார்கள் என்பது புதிய தகவல்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தூணாக இருந்த வெங்கட சதீஷ் கிலாரு என்ற புதிய தயாரிப்பாளர், இந்த மதிப்புமிக்க பான்-இந்தியா திட்டத்தை செய்யவுள்ளார்.

டி.வி.வி தனய்யா, தில் ராஜு போன்ற மூத்த தயாரிப்பாளர்களுடன் பணியாற்றிய பிறகு, சரண் புதிய முகத்துடன் இணைகிறார்.

‘வால்டேர் வீரய்யா’: சிரஞ்சீவியின் மாஸ் மியூசிக்கல் வீடியோ வெளியானது !

‘வால்டேர் வீரய்யா’: சிரஞ்சீவியின் மாஸ் மியூசிக்கல் வீடியோ வெளியானது !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிரஞ்சீவி மற்றும் ஊர்வசி ரவுட்டேலா நடித்து படமாக்கப்பட்ட இந்தப் பாடல் டிஎஸ்பியின் வரிகளுடன் ஒளிர்கிறது.

நகாஷ் அஜீஸ் மற்றும் ஹரிப்ரியா பாடிய, சேகர் வி.ஜேயின் நடன அமைப்பு, சிருவின் ரசிகர்களிடமிருந்து ஹேட்ஸ்-ஆஃப் டிப்ஸைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குனர் பாபி கொல்லி தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்கள் #வால்டேர் வீரய்யாவுடன் #BossParty மனநிலைக்கு வருவோம்.

Megastar Chiranjeevi garu’s Vintage SWAGஐ மகிழுங்கள்” என்று ட்வீட் செய்துள்ளார்.

இப்படம் 2023 சங்கராந்திக்கு திரைக்கு வர உள்ளது.

கமல் படத்தை ஒப்புக்கொள்ள உதயநிதி கண்டிஷன்.; மணிரத்னம் படம் எப்போ.?

கமல் படத்தை ஒப்புக்கொள்ள உதயநிதி கண்டிஷன்.; மணிரத்னம் படம் எப்போ.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில மாதங்களுக்கு முன்பு வெளியான விக்ரம் படத்தை தயாரித்து நடித்திருந்தார் கமல்ஹாசன்.

இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்தது.

எனவே கமலின் அடுத்த படங்கள் என்னவாக இருக்கும்? என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

அப்போதுதான் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தையும் மற்றும் உதயநிதி நடிக்கும் ஒரு படத்தின் கமலஹாசன் தயாரிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டது.

உதயநிதி நடிக்கும் படத்திற்கு கதை திரைக்கதை கமலஹாசன் எழுத உள்ளார்.

இதன் பின்னர் தனது 234வது படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன்.

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் & மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் உதயநிதியின்ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது ஆகக்காமல் மணிரத்தினம் உதயநிதி.

மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார்.

இந்த படத்தை ஒப்புக் கொள்ளும் முன்னர் இது அரசியல் படமா? என்று கேட்டுள்ளார் உதயநிதி.

இது அரசியல் படம் இல்லை என்ற கமல் தெரிவித்த பின்னரே உதயநிதி ஒப்புக்கொண்டாராம்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதற்கு முன்பே ‘துணிவு’ பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் கமல்ஹாசன்.

இந்தப் படங்களை எல்லாம் முடித்துவிட்டு தான் ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

தற்போது ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

Udhayanidhi condition to accept Kamal Maniratnam project

முழங்காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் அப்பாஸ்…?

முழங்காலில் அறுவை சிகிச்சை செய்த நடிகர் அப்பாஸ்…?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

1990களில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நடிகர் அப்பாஸ்.

1996 இல் ‘காதல் தேசம்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

முன்னணி நடிகராகவும், இரண்டாம் நாயகனாகவும், எதிர்மறை கதாபாத்திரங்களிலும் கூட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், ஒரு சிறிய விபத்துக்குப் பிறகு அவரது வலது காலில் காயம் அடைந்தார்.

அவரது வலது முழங்காலில் தசைநார் கிழிந்ததற்காக அறுவை சிகிச்சை செய்து, மருத்துவமனையில் குணமடையும் பாதையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரசிகர்களின், பிரார்த்தனைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அப்பாஸ்.

Abbas underwent knee surgery

யாருடா நீ.. இத்தனை நாள் எங்க இருந்த.? சோமுவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் விஷால்

யாருடா நீ.. இத்தனை நாள் எங்க இருந்த.? சோமுவுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கும் விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’.

இதே படத்தில் ஜோசப் என்னும் முக்கியமான கதாபாத்திரத்தில் புதுமுக நடிகர் சோமு பார்ப்பவர்கள் கவனத்தைக் கவரும் வகையில் நடித்திருப்பார்.

இதில் ஒரு முக்கியமான காட்சியில் நடிகர் விஷால் சோமுவைத் துரத்திக் கொண்டு செல்லும்படி ஒரு காட்சி வந்திருக்கும்.

அந்தக் காட்சியின் இறுதியில் சோமு ஒரு லாரியில் அடிபட்டு இறந்து விடுவதைப் போல காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

படப்பிடிப்பு நடக்கும் போது இந்தக் காட்சியைப் படமாக்குவது அபாயம் நிறைந்தது என்பதால் முதலில் சண்டைக் கலைஞர்களை வைத்து டூப் போட்டுப் படமாக்கலாம் என்று இயக்குநர் சரவணன் திட்டமிட்டு இருந்தார்.

படப்பிடிப்பில் ஏனோ சில காரணங்களால் இந்தக் காட்சியை நடிகர் சோமுவையே நடிக்கச் செய்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குநர் நினைத்தார்.

வீரமே வாகை சூடும்

ஆனால் சோமு சினிமாவுக்கு மிகவும் புதிது. அவர் சண்டைப் பயிற்சி மற்றும் இது போன்ற சாகச காட்சிகள் செய்வதில் பரிச்சயம் இல்லாதவர்.

இருந்தாலும் இயக்குநர் சரவணன் நடிகர் சோமுவிடம் இந்தக் காட்சியைப் பற்றி விளக்கிக் கூறிய பொழுது புதுமுக நடிகர் சோமு மிகுந்த ஆர்வத்துடனும் நான் இதைச் செய்கிறேன் என்று துணிச்சலுடன் முன்வந்தார்.

இந்தக் காட்சியைப் படம் பிடித்த பொழுது சோமு எந்தவித பாதுகாப்பு சாதனங்களும் இல்லாமல் நீண்ட காட்சியில் நடிப்பதைப் பார்த்த விஷால் மிகவும் வருத்தப்பட்டார்.

உடனே தன்னுடைய உதவியாளரை அழைத்து தன்னுடைய காரில் உள்ள தனது சொந்த பாதுகாப்பு சாதனங்கள், முன்புறம் போடும் பேட், பின்புறம் போடும் பேட் மற்றும் காயங்கள் ஏற்படாமல் இருக்கும் பாதுகாப்பு சாதனங்களைக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அதை தன் கையாலேயே சோமுவுக்கு அணிவித்துள்ளார். எந்தவித ஒரு பின்பலமும் இல்லாமல் ஒரு குணசித்திர நடிகராக வந்த தனக்கு ஒரு முன்னணி கதாநாயக நடிகரே தன் கையால் இதுபோன்ற உதவிகளைச் செய்ததைக் கண்ட சோமு, மிகவும் மனம் நெகிழ்ந்து போனார்.

அதுமட்டுமல்லாமல் அன்று முதல் அவர் விஷாலின் தீவிர ரசிகராக மாறினார். ரசிகருக்கும் ஒருபடி மேலே போய் விஷாலைத் தன் சொந்த அண்ணனாகக் கருதி அண்ணா என்று அழைக்க ஆரம்பித்தார்.

வீரமே வாகை சூடும்

படப்பிடிப்பின் போது சம்பந்தப்பட்ட அந்தக் காட்சியின் முடிவில் சோமு மிக அற்புதமாக நடித்து தன்னுடைய ஸ்டண்ட் வேலைகளையும் காட்டி அனைவரின் கைதட்டல்களையும் பரிசாகப் பெற்றார்.

படப்பிடிப்பு இடத்தில் கூட்டத்தில் இருந்தவர்கள் பாராட்டியது மட்டுமல்லாமல் நடிகர் விஷால், “யாருடா நீ இத்தனை நாள் எங்கடா இருந்த? சினிமாவுல நீ நல்லா வருவ. உனக்கு ஒரு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு.. ” என்று தன் மனதாரப் பாராட்டி விட்டுச் சென்றிருக்கிறார்.

தன நடிப்பால் அனைவரையும் கவர்ந்த சோமு இப்பொழுது விஷாலின் அடுத்த படமான ‘லத்தி’ மற்றும் ‘மார்க் ஆண்டனி’ என இரு படங்களிலும் ஒரு நல்ல வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சோமு, 2017 இல் வெளியான ‘வடசென்னை’ மற்றும் 2020 இல் வெளியான ‘சார்பட்டா’ படங்களிலும் சொல்லிக் கொள்ளும்படி சிறிய வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக நடிகர் சோமு சினிமாவுக்காகத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டுதான் வந்துள்ளார். கராத்தே பயிற்சி, குதிரை ஏற்றம், நீச்சல், நடனம், நடிப்பு பயிற்சி அனைத்தையும் பயின்று தேர்ச்சி பெற்ற பின் தான் களத்திற்கு வந்துள்ளார்.

ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.மேலும் நடிகர் சோமு ‘பொன்னியின் செல்வனி’ ல் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அது நடக்காமலே போய்விட்டது என்று கூறுகிறார்.

தன்னுடைய அடுத்த கட்ட முயற்சியாக எப்படியாவது இயக்குநர் வெற்றிமாறன் எடுக்கும் வாடிவாசல் படத்தில் ஒரு நல்ல கதாபாத்திரத்தில் நடித்து விட வேண்டும் என்று தீராத முயற்சி செய்து வருகிறார்.

அதற்காக காலை மாலை ஜிம்முக்குச் சென்று தன்னுடைய உடம்பையும் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.

ஒரு நல்ல குணச்சித்திர நடிகராக வேண்டும் என்பதையே தனது கனவாகக் கொண்டுள்ளார். நடிகர் சோமுவின் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்..

வீரமே வாகை சூடும்

Actor Somu became very close to Vishal

‘சிட்டிசன்’ படத்தில் அஜித்துக்கு முன்பு நடிக்கவிருந்தவர் இவரா.? அடடா வெறித்தனமா இருந்திருக்குமே.!!

‘சிட்டிசன்’ படத்தில் அஜித்துக்கு முன்பு நடிக்கவிருந்தவர் இவரா.? அடடா வெறித்தனமா இருந்திருக்குமே.!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித்தின் ஆரம்ப கால படங்களில் திருப்புமுனை ஏற்படுத்திய படம் ‘சிட்டிசன்’.

இந்த படத்தில் மீனா நாயகியாக நடிக்க சரவண சுப்பையா இயக்கியிருந்தார்.

இந்த படத்திகற்கு ஏபிசிடி உள்ளிட்ட சில படங்களை இயக்கியிருந்தார் சரவணா சுப்பையா. ஆனால் அவை பெரிதாக வரவேற்பை பெறவில்லை.

தற்போது பல படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவரது சமீபத்திய பேட்டியில் ‘சிட்டிசன்’ படம் குறித்து பேசியிருக்கிறார்.

அதில்… “சிட்டிசன் படத்தில் முதலில் கமலை நடிக்க வைக்க அணுகினேன்.. அவர் ‘ஹேராம்’ செய்துக் கொண்டிருந்தார்.

எனவே முதலில் காத்திருக்க சொன்னார். ஒரு கட்டத்தில் அவர் நடிக்கும் முடியாமல் சூழ்நிலை ஏற்படவே அஜித் நடித்தார்.

அதே சமயம் அஜித்தின் மேக்கப்புக்கு பெரிதும் உதவியாக இருந்தார் கமலஹாசன்” என தெரிவித்துள்ளார் சரவண சுப்பையா.

நடிகர் அஜித்தும் தன்னுடைய முழு உழைப்பையும் அந்த படத்தில் கொட்டி இருந்தார்.. ஆனாலும்

ஒருவேளை கமல் நடித்திருந்தால் படத்தின் வெற்றியும் இந்திய அளவில் பேசப்பட்டிருக்கும். மேலும் அனைத்து கதாபாத்திரங்களிலும் கமல் கச்சிதமாக பொருந்தி இருப்பார்.

கமல் நடித்திருந்தால் அபூர்வ சகோதரர்கள், இந்தியன், தசாவதாரம், அவ்வை சண்முகி பட வரிசையில் கண்டிப்பாக ‘சிட்டிசன்’ இணைந்திருக்கும்.

கமல்

Do you know Before Ajith Who will be hero in Citizen

More Articles
Follows