தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடியில் மாவட்ட ரஜினிகாந்த் மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் ரஜினிகாந்தின் நண்பர் ராஜூ மகாலிங்கம் அவர்கள் பேசியதாவது…
“ஒழுக்கம், ஒத்துழைப்பு, கட்டுப்பாடு என்ற கொள்கையுடன் செயல்பட இருக்கிறது நம் கட்சி. நம் கட்சியின் உறுப்பினர்கள் இந்தக் கொள்கைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும். பதவியை விட கட்சிக்காக உழைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்.
கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கடவுளுக்கு கட்டுப்பட வேண்டும். நம்பிக்கை இல்லாதவர்கள் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு அரசியல் செய்ய வேண்டும். நமது அரசியல் நேர்மையாகவும் நியாயமாகவும் இருக்க வேண்டும். இதுதான் நம் தலைவர் ரஜினி சொல்லும் “ஆன்மீக அரசியல்” ஆகும்.
நமக்குள் சண்டை சச்சரவுகள் வருமா? என பலரும் கவனித்து வருகிறார்கள். அதற்கு இடம் கொடுக்க கூடாது.
எல்லாப் பிரச்னைகளையும் தலைவர் “காந்தி”யைப் போல கையாள மாட்டார்.
பதிலடி கொடுக்க வேண்டிய சில பிரச்சினைகளை “காலா”வைப் போல கையாள்வார்.
ரஜினி அரசியல் பிரவேசம் பற்றி அறிவித்தாரோ அப்போதே அடுத்த முதலமைச்சர் ரஜினிதான் என பெண்கள் முடிவு செய்துவிட்டனர்.
அனைவருக்கும் பிடித்தமான முதல்வராக ரஜினி செயல்படுவார்.” என்றார்.
Raju Mahalingam speech about Rajini and his political movements