ரஜினி-ஐஸ்வர்யாராய் நடித்த ஹாலிவுட் படங்களை தயாரித்தவர் காலமானார்

ரஜினி-ஐஸ்வர்யாராய் நடித்த ஹாலிவுட் படங்களை தயாரித்தவர் காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis Hollywood movie Producer Sunanda Murali Manohar expired

பல தமிழ், இந்தி, ஆங்கில படங்களை தயாரித்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சுனந்தா முரளி மனோகர் அவர்கள் இன்று (30/12/2017) காலை இறைவனடி சேர்ந்தார்.

தென்னிந்திய திரையுலகில் இருந்து சென்று Indian Summer, Blood Stone, Tropical heat, Inferno, Jungle boy, Provoked போன்ற பல ஹாலிவுட் படங்களைத் தயாரித்தவர்.

இதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதன்முறையாக நடித்த ஆங்கில படமான Blood Stone, ஐஸ்வர்யா ராய் நடித்த ஹாலிவுட் படமான Provoked ஆகிய வெற்றிப் படங்ளை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தவிர தமிழில் வெளிவந்த ஜீன்ஸ், மின்னலே, தாம்தூம், ஆகிய திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராக இருந்தவர். இந்தியில் மாதவன் நடித்த ராம்ஜி லண்டன் வாலே படத்தின் தயாரிப்பாளர்.

Rajinis Hollywood movie Producer Sunanda Murali Manohar expired

விஜய் இல்லையென்றால் இந்த சாதனையை செய்திருக்க முடியாது..: இமான்

விஜய் இல்லையென்றால் இந்த சாதனையை செய்திருக்க முடியாது..: இமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music composer Imman says thanks to Actor Vijayதன் இனிமையான மெலோடி பாடல்களால் தமிழக இசைப் பிரியர்களை கட்டி போட்டுள்ளவர் இமான்.

இவர் இசையமைத்துள்ள ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் என்ற படம் இவரது 100வது படமாகும்.

இமானின் இந்த சாதனையை திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில்…

விஜய் அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். அவர் தமிழன் படத்தில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் டிக் டிக் டிக் வரை என்னுடைய பயணம் அமைந்திருக்காது என பதிவிட்டுள்ளார்.

Music composer Imman says thanks to Actor Vijay

D.IMMAN‏Verified account @immancomposer

Indeed speechless! Glory to God! Thanks to all the music lovers,musicians,singers,sound technicians,directors and producers! Who had been an integral part in reaching my musical 100 with #TikTikTik Deeply Humbled by your continuous support over years! #DImman100

On this eve I exhibit my gratitude towards our Thalapathy @actorvijay ! Without him n the whole team of #Thamizhan My musical journey to #TikTikTik wouldn’t have been possible! Not only as a music composer but also to croon a song in #Thamizhan for #MaattuMaattu #DImman100

ரசிகர்களை கவர்ந்த ஓவியாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ்

ரசிகர்களை கவர்ந்த ஓவியாவின் ஜிமிக்கி கம்மல் டான்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

oviya in jimikki kammal song danceமோகன்லால் நடித்த வெளிப்பாண்டிடே புஸ்தகம் படத்தில் இடம்பெற்ற பாடல் ஜிமிக்கி கம்மல்.

இப்பாடலுக்கு நீங்கள் நடனம் ஆடி யூடிப்பில் வெளியிடலாம் என படக்குழுவினர் அறிவித்தனர்.

அப்போது கேரளாவில் உள்ள கல்லூரி பேராசிரியை ஷெரில் என்ற பெண் தன் தோழி மற்றும் மாணவிகளுடன் ஆடிய பாடலை இணையத்தில் வெளியிட்டார்.

இதனையடுத்து இந்த பாடல் இந்தியளவில் டிரெண்ட் ஆனது.

தற்போது இப்பாடலை கொஞ்சம் மாற்றி ஓவியா அழகாக ஆடியுள்ளார்.

அது சரவணா ஸ்டோஸ் தங்க நகை கடையின் விளம்பர பாடலாகும்.

இந்த பாடல் ரசிகர்கள் மிகவும் கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

என் ராசியால்தான் விஷால்-தனுஷ்-விமல் தயாரிப்பாளரானார்கள்.. : பூபதிபாண்டியன்

என் ராசியால்தான் விஷால்-தனுஷ்-விமல் தயாரிப்பாளரானார்கள்.. : பூபதிபாண்டியன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director boopathy pandianதனுஷ் நடித்த தேவதையை கண்டேன், திருவிளையாடல், விஷால் நடித்த பட்டத்து யானை, மலைக்கோட்டை படங்களை இயக்கியவர் பூபதி பாண்டியன்.

இவர் தற்போது இயக்கியுள்ள மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார் விமல்.

இப்படம் வருகிற 2018 ஜனவரி 12 வெளியாகவுள்ள நிலையில் இன்று பட பாடல்கள் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

அப்போது இயக்குனர் பூபதி பாண்டியன் பேசியதாவது…

“எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது.. ஆனால் படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதை பார்த்து பின்வாங்கிவிட்டார் போல தெரிகிறது.

அதன்பின் தான் விமல் இந்தப்படத்தை தானே தயாரிக்க முன்வந்தார். எனக்கு ஒரு ராசி இருக்கிறது.. என் டைரக்சனில் நடித்த ஹீரோக்கள் தனுஷ், விஷால் ஆகியோர் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள்.

அந்தவகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்கு படத்தயாரிப்பில் உறுதுணையாக நின்ற சிங்காரவேலனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

இந்தப்படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டுலதான் ஒரு விஷயத்தை கவனிச்சேன். நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியலை. அந்த அளவுக்கு நம்ம பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சுட்டு வர்றோம்.

ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பின்போது எனக்கும் விமலுக்கும் சின்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு நாட்கள் பேசமால் இருந்தோம்.. ஆனால் பின்னர்தான் பேசாமல் இருந்ததை விட பேசியே இருக்கலாம் என சொல்லும் வகையில் தனித்தனியாக எங்கள் உதவியாளர்களிடம் புலம்பிக்கொண்டு இருந்தோம்.

இந்தப்படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள சூரஜ் நல்லுசாமி, ‘அவள் அப்படித்தான்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளரின் மகன் என்பதில் எனக்கு பெருமைதான். இசையமைப்பாளர் பிஜாய் ஜாக்ஸ், தெனாலி கமல் போல எதற்கெடுத்தாலும் பயப்படுவார். ஆனால் அது படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான். இந்தப்படத்தின் எடிட்டர் கோபியை நான் இயக்கிய ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின்போது உதவியாளராக சேர்த்துவிட்டேன்.. இன்று என் படத்துக்கே எடிட்டராக மாறி எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இடைவேளைக்குப்பின் இடம்பெற்றுள்ள சரண்யா-நீலிமா காமெடி மிக முக்கியமாக பேசப்படும்” என்றார்.

என்னை நம்பி தயாரிப்பாளர்கள் கோடிகளில் முதலீடு செய்ய ரசிகர்கள்தான் காரணம்.. ரஜினி நெகிழ்ச்சி

என்னை நம்பி தயாரிப்பாளர்கள் கோடிகளில் முதலீடு செய்ய ரசிகர்கள்தான் காரணம்.. ரஜினி நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஐந்தாவது நாளாக இன்று ரசிகர்களை சந்தித்தார். மத்திய சென்னை மற்றும் வட சென்னை ரசிகர்களை இன்று அவர் சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

1960 களில் மதராஸ் அரசியல், கல்வி, சூழல் என அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக இருந்ததை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசினார்.

” என்னை பொறுத்தவரை இது மதராஸ் தான். 1960 களில் காவல் துறை, வழக்கறிஞர், பல்கலைகழக கல்லூரிகள், போக்குவரத்து, அரசாங்கம் என்றால் மதராஸ் மாதிரி இருக்க வேண்டும் என்ற கருத்து அப்பொழுது அண்டை மாநிலங்களில் இருந்தது. எப்படி இப்பொழுது சிங்கப்பூர் அரசாங்கம் பற்றிய ஒரு பிரம்மாண்ட பார்வை உள்ளதோ, அப்போது அதே போன்றதொரு பார்வை அண்டை மாநிலங்களில் மதராஸ் மீதான பார்வையாக இருந்தது.

1973 களில் நான் மதராஸிற்கு வந்தேன். எனது அண்ணன் சத்யா நாரயணன் 14 வயதிலேயே எனக்காக வேலைக்கு சென்றார். 18 வயதில் திருமணம் செய்து கொண்டார். என்னை பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படிக்க வைக்க அவர் சம்பளத்தில் பாதியை எனக்குக் கொடுத்தார்.

அப்பொழுது அவர் கார்ப்பரேஷனில் மேஸ்திரியாக பணியாற்றினார், சம்பளம் 70 ரூபாய் தான். என் மீதிருந்த நம்பிக்கையில் நான் நடிகனாவேன் என்பதற்காக மிகவும் கஷ்டப்படிருக்கிறார். அவர் தான் என்னுடைய தெய்வம்.

அதன் பிறகு ராஜ்பகதூர், என்னுடைய நண்பன். எனக்குள் இருந்த நடிகனை கண்டுபிடித்தவன். அதன் பிறகு மதராஸ் வந்த போது முரளி பிரசாத் மற்றும் விட்டல் வீட்டில் இருந்தேன் , என்னை அவர்கள் குடும்பத்தில் ஒருவனாய் பார்த்துக் கொண்டார்கள்.

பஞ்சு அருணாச்சலம், முத்துராமன், வாசு இவர்கள் அனைவரும் என்னை ஸ்டார் ஆக்கினார்கள். சுரேஷ் கிருஷ்னா, மணிரத்னம் என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கினார்கள். இயக்குனர் சங்கர் என்னை இந்தியா முழுவதும் தெரியும் படி செய்தார். இவர்கள் அனைவரும் என்னை நம்பி இவ்வளவு பணம் போடுவதற்குக் காரணம் என் ரசிகர்களாகிய நீங்கள் தான். ” என்று கூறினார்.

மேலும், ” என் வாழ்க்கையில் 2.0 மிகவும் முக்கியமான படம். இதற்கு பிறகு சங்கரே நினைத்தாலும் இது போன்ற ஒரு படத்தை எடுக்க முடியாது. அந்த அளவுக்கு இப்படத்தின் கதைக்கரு மிகவும் அற்புதமாக உள்ளது.

3டி படம் என்பதால் கிராபிக்ஸ் பணிகளில் படம் தாமதமாகிறது. 2.0 ஏப்ரலில் வெளியாகிறது. அதற்கடுத்து நான் நடிக்கும் காலா படத்தை ரஞ்சித் இயக்கியுள்ளார். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் காலா.

அந்த கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. 2.0 வெளியான ஓரிரு மாதங்களில் காலா வெளியாகும். ” என்று அவர் கூறினார்.

“என் வாழ்க்கை பயணத்தில், போன என் உயிரை சிங்கப்பூரில் இருந்து உங்கள் மூலமாக கொண்டு வந்துள்ளேன். என் உடல் நிலை சரியில்லாத போது எனக்காக நீங்கள் செய்த பிரார்த்தனைகள் தான் அதற்கெல்லாம் காரணம். இத்தனை அன்பிற்கும் நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை.

அப்போது ரசிகர்கள் எழுதிய கடிதங்களில் ஒருவர் எழுதியிருந்தார். தலைவா நீங்கள் படம் நடித்து எங்களை மகிழ்விக்க வேண்டாம், அரசியலுக்கு வந்து எங்களை காக்க வேண்டாம், நலமுடன் திரும்பி வந்தால் போதும் என்று எழுதியிருந்தார். உங்கள் அன்பிற்கு எதை நான் திரும்ப கொடுக்க முடியும். ”

“கனவு நனவாக ஒரு போதும் குறுக்கு வழிகளை கையாளக் கூடாது என்றும், எந்த நிலையிலும் குடும்பம் தான் முக்கியம். பிறர் நம்மை மதிக்க வேண்டும் என்று நினைப்பதை விட, நாமே நம்மை முதலில் மதிக்க வேண்டும். ” என்று அவர் தன் ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.

ஆர்கே சுரேஷ்-நடிகை திவ்யா காதல் திருமணம் நின்றுவிட்டதா?

ஆர்கே சுரேஷ்-நடிகை திவ்யா காதல் திருமணம் நின்றுவிட்டதா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Why RK Suresh and Actress Dhivya marriage getting delayசலீம், தர்மதுரை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் ஆர்.கே. சுரேஷ்.

பின்னர் பாலா இயக்கத்தில் உருவான தாரை தப்பட்டை படம் மூலம் சினிமாவில் வில்லனாக அறிமுகமானார்.

தற்போது வேட்டை நாய், பில்லா பாண்டி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் சீரியல் நடிகை திவ்யாவை மணக்கப்போவதாக அறிவித்தார்.

ஆனால் இத்தனை மாதங்கள் ஆகியும் திருமணம் நடக்கவில்லை. இதனால் திருமணம் நின்றுவிட்டதாக வதந்திகள் உருவானது.

இதுகுறித்து அவரது தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாவது…

ஜாதகத்தில் சில தோஷங்கள் இருப்பதால் திருமணத்தை தள்ளி வைத்துள்ளோம். மற்றப்படி வேறு எந்த காரணமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Why RK Suresh and Actress Dhivya marriage getting delay

More Articles
Follows