இமயமலை சென்று திரும்பியவுடன் ரஜினியின் அடுத்த திட்டம்

rajinikanthஅண்மையில் தனியார் கல்லூரியில் நடந்த ஒரு விழாவில் என்னை தேர்ந்தெடுத்தால் ‘தமிழக அரசியலில் எம்ஜிஆர் அமைத்த ஆட்சியை கொடுப்பேன் என்றார் ரஜினிகாந்த்.

இந்நிலையில்
இன்று அதிகாலை இமயமலைக்கு புறப்பட்டுச் சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது…

“ இமயமலையில் 10 அல்லது 15 நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளேன்.

அரசியல் இயக்கம் தொடங்குவது குறித்து முடிவெடுத்த பிறகு இமயமலை செல்கிறேன்.

புதிதாக எந்த வேண்டுதலும் இல்லை. தர்மசாலாவிலிருந்து இமயமலை சென்று, அடுத்து பாபா குகைக்கு சென்று வழிபட உள்ளேன் என தெரிவித்தார்.

இமயமலை சென்று திரும்பியதும்,ரஜினிகாந்த் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்யஇருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

Overall Rating : Not available

Latest Post