தர்பாரில் தன் குடும்ப பெயர்களை ரஜினிக்கு சூட்டிய முருகதாஸ்

தர்பாரில் தன் குடும்ப பெயர்களை ரஜினிக்கு சூட்டிய முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajinikanthலைகா தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’.

முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினி மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் யோகிபாபு, பேபி மானஸ்வி நடித்துள்ளனர்.

அடுத்தாண்டு 2020 பொங்கலுக்கு படத்தை வெளியிட உள்ளனர்.

இந்த நிலையில் படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் தகவல் வெளியாகியுள்ளது.

ஆதித்யா அருணாச்சலம் தான் ரஜினியின் பெயர்.

ஆதித்யா என்ற பெயர் முருகதாஸின் மகன் பெயராம். அதுபோல் அருணாச்சலம் என்பது முருகதாஸின் அப்பா பெயராம்.

யாஷிகா ப்ரெண்டுதான்.. ஆனா சேர்ந்து நடிக்க முடியாது.. ஐஸ்வர்யா தத்தா

யாஷிகா ப்ரெண்டுதான்.. ஆனா சேர்ந்து நடிக்க முடியாது.. ஐஸ்வர்யா தத்தா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aishwarya dutta and yashika anandபிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எது நடந்ததோ? இல்லையோ? அதில் பங்கேற்றவர்களுக்கு புகழும் ஒரு சிலருக்கு நல்ல நண்பர்களும் கிடைத்துள்ளனர்.

இதில் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் யாஷிகா ஆனந்தும் ஐஸ்வர்யா தத்தாவும் நெருங்கிய தோழிகள் ஆனார்கள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

தற்போதும் இவர்கள் ஒன்றாக இணைந்து ஊர் சுற்றி அந்த படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் யாஷிகாவுடன் இணைந்து நடிப்பார்களா? என்று ஐஸ்வர்யா தத்தாவிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

’யாஷிகா சூப்பரான படங்கள்ல நடிச்சுட்டு இருக்காங்க. ரொம்ப கஷ்டப்பட்டு இந்த அளவுக்கு வந்திருக்கா.

நாங்க ரெண்டு பேரும் நெருக்கமான தோழிகள். ஒரே படத்துல நடிச்சா போட்டி போடனும். அது நட்பை பாதிக்க வாய்ப்பிருக்கு.

எப்போதும் நல்ல தோழிகளாக இருக்க ஆசைப்படுறோம். எனவே சேர்ந்து நடிக்கிற எண்ணம் இல்லை”. இவ்வாறு கூறினார்.

ஷாருக்கான் தயாரித்து நடிக்கும் படத்தை இயக்கும் அட்லி..?

ஷாருக்கான் தயாரித்து நடிக்கும் படத்தை இயக்கும் அட்லி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atlee with shah rukh khanவிஜய்யின் ஆஸ்தான இயக்குனர் போல தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்கினார் அட்லி.

இதில் பிகில் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், அட்லீயின் அடுத்த படம் ஹீரோ யார்? என்ற தகவல் பரவி வருகிறது.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தை ஷாருக்கானின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், இந்தி மொழிகளில் இப்படம் தயாராக உள்ளதாகவும் ஷூட்டிங்கை டிசம்பரில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

வினோத் இயக்கத்தில் அஜித்துடன் இணையும் நயன்தாரா..?

வினோத் இயக்கத்தில் அஜித்துடன் இணையும் நயன்தாரா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ajith nayantharaநேர் கொண்ட பார்வை படத்தை அடுத்து மீண்டும் அதே இயக்குனர் வினோத் அண்ட் அதே தயாரிப்பாளர் போனி கபூருடன் இணைகிறார் அஜித்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தல 60 என பெயரிட்டுள்ளனர். (இவருக்கும் விஜய்க்கும் இதான் வேலையே.. எப்போதான் பட பேரு வைப்பாங்களோ..?)

இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த படமாக உருவாகவுள்ளதாம்.

இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க உள்ளனர்.

முக்கிய கேரக்டரில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித்தின் ஜோடியாக நயன்தாரா நடிக்க வாய்புள்ளதாக கூறப்படுகிறது.

முதன்முறையாக ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த அசுரன் தனுஷ்

முதன்முறையாக ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்த அசுரன் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

asuran dhanushபூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படம் அசுரன்.

வெற்றிமாறன் இயக்கிய இந்த படத்தில் தனுஷ் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

படத்திற்கு அனைவரும் பாசிட்டிவ்வான விமர்சனங்களையே தந்தனர்.

கேரளா, கர்நாடகாவிலும் நல்ல வரவேற்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தியேட்டர் வசூல் மூலம் மட்டும் சுமார் 50 கோடி வசூலாகியுள்ளதாம்.

மேலும் டிஜிட்டல் உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றை எல்லாம் சேர்த்தால் படத்தின் மொத்த வசூல் 100 கோடியைத் தொட்டுள்ளது என தகவல்கள் வந்துள்ளன.

விஜய் அம்மா ஷோபாவை சந்தித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்

விஜய் அம்மா ஷோபாவை சந்தித்த பிக்பாஸ் போட்டியாளர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Abhirami with shobhaகடந்த 100 நாட்களாக டிவி பிரியர்களை அதிர வைத்த நிகழ்ச்சி என்றால் அது கமல் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சிதான்.

இந்த பிக்பாஸ் 3 இறுதியில் முகேன் என்பவர் வின்னர் ஆனார்.

இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்த போட்டியாளர்கள் அனைவரும் வெளியில் பல பார்ட்டிகளில் கலந்துக் கொண்டு வருகின்றனர். மேலும் சில பிரபலங்களை சந்தித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் தர்ஷனும், அபிராமியும் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரை சந்தித்துள்ளனர். அவருடன் போட்டோ எடுத்து சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளனர்.

More Articles
Follows