தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தர்பார்’.
முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ரஜினி மகளாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். முக்கிய கேரக்டரில் யோகிபாபு, பேபி மானஸ்வி நடித்துள்ளனர்.
அடுத்தாண்டு 2020 பொங்கலுக்கு படத்தை வெளியிட உள்ளனர்.
இந்த நிலையில் படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் தகவல் வெளியாகியுள்ளது.
ஆதித்யா அருணாச்சலம் தான் ரஜினியின் பெயர்.
ஆதித்யா என்ற பெயர் முருகதாஸின் மகன் பெயராம். அதுபோல் அருணாச்சலம் என்பது முருகதாஸின் அப்பா பெயராம்.