தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘கோலமாவு கோகிலா’ & ‘டாக்டர்’ என இரு வெற்றி படங்களை கொடுத்து ‘பீஸ்ட்’ என்ற படத்தை இயக்கினார் நெல்சன்.
விஜய் நடித்திருந்த இந்த படம் மாபெரும் தோல்வியை தழுவியது. இந்தப் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே தன்னுடைய ‘ஜெயிலர்’ படத்தை இயக்கும் வாய்ப்பை நெல்சன்க்கு வழங்கினார் ரஜினிகாந்த்.
எனவே ‘பீஸ்ட்’ தோல்வியால் நெல்சனுக்கு அந்த வாய்ப்பை வழங்கக் கூடாது என ஒரு சிலர் கூறி வந்தனர். ஆனாலும் நெல்சன் மீது நம்பிக்கை வைத்து அந்த படத்தை கொடுத்தார் ரஜினிகாந்த்.
மறுபக்கம் ‘மாநகரம்’, ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ என அதிரடியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார் லோகேஷ். தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் லோகேஷ் மற்றும் நெல்சன் ஆகிய இருவரும் சமீபத்தில் விகடன் நடத்திய விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அப்போது காரிலிருந்து இறங்கும் லோகேஷை மேடை வரை பவுன்சர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர்.
ஆனால் நெல்சன் வரும்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. அவராகவே சென்று மேடையருகே அமர்ந்தார்.
இந்த சம்பவம் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சினிமாவில் ஒரு தோல்வி கொடுத்து விட்டால் அவருக்கு திறமை இல்லையா.? எப்போதும் வெற்றிக்கு மட்டும் தான் மரியாதையா? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை அறிந்த ரஜினிகாந்த் நெல்சனுக்கு அட்வைஸ் வழங்கியதாக தகவல்கள் வந்துள்ளன.
“கண்ணா இதுபோல பல அவமானங்களை நான் கடந்து இருக்கிறேன்.. அதை எல்லாம் கடந்து தான் இன்று இந்த நிலைக்கு உயர்ந்து இருக்கிறேன்.
எனவே நீங்கள் அதை பெரிது படுத்தாமல் உங்கள் திறமை மீதும் தொழில் மீதும் கவனம் செலுத்துங்கள். ‘ஜெயிலர்’ படத்தை மிக வெற்றி படமாக கொடுங்கள்” என அட்வைஸ் செய்தாராம் ரஜினி.
இதனால் நெகிழ்ந்து போனாராம் நெல்சன்.
Rajinikanth’s advice to director nelson












