ரஜினிக்காக அமெரிக்காவில் காத்திருக்கிறாரா தனுஷ்.?

dhanush‘ஜகமே தந்திரம்’ படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படம், அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இதனிடையில் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர்களான ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றார் தனுஷ்.

இவருடன் இவரது மனைவி ஐஸ்வர்யாவும் உடன் சென்றுள்ளார்.

சுமார் 4 மாதங்கள் அங்கேயே தங்கியிருந்து சூட்டிங்கில் கலந்துக் கொண்டுள்ளார் தனுஷ்.

எனவே தான் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட ஓட்டளிக்க தனுஷ் வரவில்லை.

தற்போது ‘தி கிரே மேன்’ படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவடைந்துள்ளதாம்.

தற்போது கொரோனா ஊரடங்கு சூழ்நிலையால் விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே தனுஷ் இந்தியா திரும்புவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது.

இவையில்லாமல் தனுஷின் மாமனார் ரஜினிகாந்தும் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல தயாராக இருக்கிறார்.

அதனால் தனுஷ் அங்கே தங்கியிருந்து மாமானாரின் பரிசோதனைக்காக காத்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Rajinikanth to fly to the US for a medical check-up?

Overall Rating : Not available

Related News

Latest Post