தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இன்று விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பிறந்துள்ளது.
எனவே அதிகாலை முதலே ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ரஜினியும் தன் ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி தமிழர்கள் போராடி வருவதால் போராட்டமே வாழ்க்கையாகி விட்டது என்ற வகையில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்…
“உழும் நிலத்தை, சுவாசிக்கும் காற்றை, அருந்தும் நீரைக் காக்க, நீதியை நிலைநாட்டி நம் உரிமையைப் பெறக்கூட போராட்டம் என வாழ்க்கையே போராட்டமாகி விட்ட நிலையில், இன்று பிறக்கும் புத்தாண்டு மகிழ்ச்சிகரமாக அமையவும் அனைவரின் வாழ்வு வளம் பெறவும் இறைவன் அருள வேண்டும், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு ரஜினி தன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Rajinikanth Tamil New year wishes 2018