தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
1990களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பாக பேசப்பட்டது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோதே அவரது ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசியவர் ரஜினி.
அதன்பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அவருக்காக முதல்வர் பதவியை தர பிரதான கட்சி காத்திருந்தபோது அதனை மறுத்தவர் ரஜினி.
அப்போதெல்லாம் அவர் ஒரு முறை கூட அரசியல் வருவதாக கூறவில்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் அவரை அரசியலோடு இணைத்தே பல செய்திகள் வெளியாகும்.
இந்த வரலாறுகளை அதை அறியாத இன்றைய 90S & 2K கிட்ஸ்கள் அவரை வைத்து பல மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
இனிமே நீ வயசுக்கு வந்தா என்ன? வரலேன்னா என்ன? என கடுமையாக விமர்சித்து மீம்ஸ்களை உருவாக்கி வருகின்றனர்.
இதனிடையில் கடந்த 2017 டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் பிரவேசத்தை முதன்முறையாக ரசிகர்கள் சந்திப்பில் அறிவித்தார்.
அரசியலுக்கு வருவது உறுதி. தனிக்கட்சி ஆரம்பித்து 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என்றார்.
அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்தாண்டு ஏப்ரலில் கட்சி தொடங்குவதை அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த சூழ்நிலையில் கடந்த மார்ச் 12ம் தேதி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்… அரசியல் மாற்றம் வேண்டி மக்களிடம் எழுச்சி உருவாகட்டும. அப்போ இந்த ரஜினி அரசியலுக்கு வருகிறேன்.
மேலும் தான் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் எனவும் ஆட்சிக்கு வந்தால் தான் முதல்வராக அமர மாட்டேன் எனவும் அதிரடியாக பேசினார்.
முதல்வர் நாற்காலி மீது ரஜினிக்கு ஆசையில்லை என்பதால் அரசியல்வாதிகளுக்கு இந்த செய்தி சர்க்கரை விருந்தாக அமைந்தது.
ஆனால் ரஜினி என்ற பெயருக்கு மட்டுமே மதிப்பு. அவர் முதல்வர் வேட்பாளர் இல்லை என்றால் நிச்சயம் ஓட்டு கிடைக்காது என ரசிகர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து மார்ச் இறுதி வாரம் முதல் கொரோனா பிரச்சினை… ஊரடங்கு என தற்போது செப்டம்பர் மாதம் வரை பல்வேறு பிரச்சினைகள் நீண்டுக் கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் கொரோனாவில் தள்ளி வைக்கப்பட்ட தன் கட்சி அறிவிப்பு மாநாட்டை வருகிற நவம்பர் மாதம் நடத்துவார் என தகவல்கள் வந்துள்ளன.
ரஜினி கட்சி முதல் மாநாடு மதுரையில் நடக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.