கஜாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய புட் பாக்கெட்டுகளில் ரஜினி ஸ்டிக்கர்

Rajinikanth photos on Cyclone Gaja Relief Materialsகஜா புயலால் காரைக்கால், நாகப்பட்டினம், வேதாரண்யம், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

நிவாரணப் பணிகளில் அரசும், தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

இதில் ரஜினி மக்கள் மன்றத்தினரும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் ரஜினி ரசிகர்கள் உணவு பொட்டலங்கள், போர்வைகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

இதில் உணவு பொட்டலங்களில் ரஜினி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

இதனை கண்ட நெட்டிசன்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு சென்னையை வர்தா புயல் தாக்கியபோது ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளானதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

தற்போது ரஜினி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது குறித்து ரசிகர்களிடம் கேட்ட போது…

தமிழகத்தில் எந்த ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் ரஜினி எந்த உதவியும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. அவர் விளம்பரம் இல்லாமல் எதையும் செய்து வருகிறார்.

ஆனால் அவர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதால் நாங்கள் ஸ்டிக்கர் ஒட்டி சப்ளை செய்தோம் என்கின்றனர் ரஜினி மக்கள் மன்றத்தினர்.

Rajinikanth photos on Cyclone Gaja Relief Materials

Overall Rating : Not available

Latest Post