மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தை போற்ற வேண்டும்…: ரஜினி பேச்சு

மற்ற மாநிலத்தவர்கள் தமிழகத்தை போற்ற வேண்டும்…: ரஜினி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth new video speech about his political partyதுாத்துக்குடி மாவட்டத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த நிகழ்வின் போது ரஜினி பேசிய வீடியோ பதிவு ஒன்றை ஒளிப்பரப்பினார்கள்.

அதில் உள்ளதாவது…

ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

நாம் ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம். தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டுவருவோம்.

இதில் சுயநலம் இருக்கக்கூடாது. பொது நலம் மட்டுமே இருக்க வேண்டும்.

அதற்காக குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வரவேண்டும் என நான் சொல்லவில்லை. அவர்களையும் கவனிக்க வேண்டும்.

மற்ற மாநிலத்தவர்கள் நம்மை பார்த்து போற்ற வேண்டும். அப்படியொரு அரசியல் மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும்.

அது ஆண்டவன் அருளால், உங்கள் செயலால் நிச்சயம் நிறைவேறனும்.” என்று அந்த பதிவில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

ஆலோசனைக் கூட்டம் துவங்குவதற்கு முன் ஒகி புயலில் மாயமான தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 10 மீனவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அளிக்கப்பட்டது.

Rajinikanth new video speech about his political party

பிரபலமான காமெடி நடிகையை மாரி2-ல் இணைத்துக் கொண்ட தனுஷ்

பிரபலமான காமெடி நடிகையை மாரி2-ல் இணைத்துக் கொண்ட தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Comedy Actress Nisha teams up with Dhanush for Maari 2திறமையானவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு தான் தயாரிக்கும் படங்களில் வாய்ப்பு கொடுப்பது தனுஷின் வழக்கம்.

தற்போது விஜய் டிவியில் இருந்து ஒரு நடிகையை சினிமாவுக்கு அழைத்து வருகிறார்.

அந்த டிவி நிகழ்ச்சி ஒன்றில் பிரபலமான நிஷாவுக்கு தன் மாரி படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார்.

பாலாஜி மோகன் இயக்கும் இப்படத்தில் தனுஷ் உடன் சாய்பல்லவி, வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ சங்கர், மனோபாலா உள்ளிட்ட பலரும் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

Comedy Actress Nisha teams up with Dhanush for Maari 2

தமிழில் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் மன்னர் வகையறா ரீமேக்

தமிழில் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் மன்னர் வகையறா ரீமேக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mannar Vagaiyara Telugu remake updatesவிமல் தயாரித்து நடித்துள்ள படம் மன்னர் வகையறா.

பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் ஆனந்தி, சாந்தினி, ஜீலி, நீலிமாராணி, கார்த்திக்குமார், பிரபு, ரோபோ சங்கர், ஜெயப்பிரகாஷ், சிங்கம்புலி, சரண்யா, யோகிபாபு, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

நேற்று முன்தினம் குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படம் தமிழகத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.

பெண்களின் அமோக ஆதரவு பெற்றுள்ள இப்படம் இரண்டு நாட்களில் 1.5 கோடி ரூபாயை வசூலை அள்ளியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

Mannar Vagaiyara Telugu remake updates

அரசியல்வாதி கமல்ஹாசனின் முதல் கையெழுத்து வைரலாகிறது

அரசியல்வாதி கமல்ஹாசனின் முதல் கையெழுத்து வைரலாகிறது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Politician Kamalhassan signature goes viralதிரையுலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் கமல்ஹாசன் தன் அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டார்.

வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி தன் அரசியல் சுற்றுப்பயணத்தை நாளை நமதே என்று பெயரிட்டு ராமநாதபுரத்தில் ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில் இன்று ஒரு கல்லூரி விழாவில் கலந்துக் கொண்டார்.

அங்குள்ள வருகை பதிவேட்டில் அந்த விழாவிற்கு வருபவர்கள் தங்கள் கையெழுத்தை பதிவிட்டு யார்? என்ற விவரங்களை பதிவிட வேண்டும்.

அதில் கமல்ஹாசன் அரசியல்வாதி என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர் மாணவர்களிடையே கலந்துரையாடினார்.

Politician Kamalhassan signature goes viral

இதோ அந்த கையெழுத்து…

kamal signature

பத்மவிபூஷண் இளையராஜாவை காதல் வரிகளால் வாழ்த்திய வைரமுத்து

பத்மவிபூஷண் இளையராஜாவை காதல் வரிகளால் வாழ்த்திய வைரமுத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vairamuthu wishes for Badmavibhusan Ilayarajaபல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது மத்திய அரசு.

அதன்படி இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்மவிபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்துவும் அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பதிவிட்டுள்ளதாவது…

வைரமுத்து‏ @vairamuthu
பத்ம விருதுகள் பெறும்
85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

பத்ம விபூஷண் விருது பெறும் இளையராஜாவை
“காற்றின் தேசம் எங்கும் – உந்தன்
கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் – உந்தன்
ராகம் சென்று ஆளும்
வாகை சூடும்”
– என்ற காதல் ஓவியம் வரிகளால் வாழ்த்துகிறேன்.

Vairamuthu wishes for Badmavibhusan Ilayaraja

ரஜினி கட்சியில் ஒரே நாளில் 2 லட்சம் பெண்கள்; விவசாயிகளுக்கும் முக்கியத்துவம்

ரஜினி கட்சியில் ஒரே நாளில் 2 லட்சம் பெண்கள்; விவசாயிகளுக்கும் முக்கியத்துவம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthகடந்த டிசம்பர் 31ஆம் தேதி புத்தாண்டு விருந்தாக தன் அரசியல் பிரவேசத்தை பகிரங்கமாக அறிவித்தார் ரஜினிகாந்த்.

இதனையொட்டி முதற்கட்டமாக ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி உத்தரவிட்டார்.

மேலும் இணையதளம், செல்போன் செயலி ஆகியவை மூலம் தன் புதிய கட்சிக்கு உறுப்பினர் சேர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் ரஜினிகாந்த்.

முதற்கட்டமாக வேலூர் மாவட்டத்துக்கு ரஜினி மக்கள் மன்ற தலைவராக சோழிங்கர் என்.ரவி நியமிக்கப்பட்டார். மற்ற நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மற்ற மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் முக்கியமாக விவசாயிகள் மற்றும் பெண்களை அதிகளவு சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

ரஜினியின் புதிய கட்சியில் தமிழ்நாடு முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மக்கள் மன்றத்துக்கான உறுப்பினர் சேர்க்கை தமிழகம் முழுவதும் நடந்துள்ளது.

நேற்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் மகளிர் அணியில் 2 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்து இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

இதனையடுத்து மகளிர் அணி, இளைஞர் அணி, விவசாயிகள் அணி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.

இதில் மகளிர் அணியில் சேர ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பங்களை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

More Articles
Follows