நிறைய பேச வேண்டியது இருக்கு.; ரஜினி பேச்சால் ரசிகர்கள் மகிழ்ச்சி

நிறைய பேச வேண்டியது இருக்கு.; ரஜினி பேச்சால் ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanthஇந்தாண்டில் 2வது முறையாக தன் ரசிகர்களை சந்தித்து அவர்களின் ஆயுட்கால ஆசையான போட்டோ எடுப்பதை நிறைவேற்றி வருகிறார் ரஜினிகாந்த்.

டிசம்பர் 31ல் என் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என ரஜினி பேசியிருந்தார்.

அவரின் இந்த பேச்சு பல டிவிக்களில் விவாத பொருளாகிவிட்டது.

இந்நிலையில் இன்று 2வது நாளாக தன் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்துக் கொள்கிறார்.

அப்போது அவர் பேசியதாவது…

ஆக்கப்பூர்வமான விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளை நன்றாக படிக்க வையுங்கள்.

நேற்று சந்திப்பில் மிகவும் கட்டுப்பாடுடன் நடந்துக் கொண்டீர்கள். உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.

இன்னும் நிறைய பேச வேண்டும் என நினைக்கிறேன். நிறைய பேச வேண்டிய நேரம் இருக்கு. மேடை இருக்கு. என்றார்.

அவர் அரசியல் மேடையை பற்றி சொன்னதை புரிந்துக் கொண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் உள்ளனர்.

டிசம்பர் 31ஆம் தேதி ரஜினியுன் அறிவிப்புக்காக உங்களை போல நாங்களும் காத்திருக்கிறோம்.

காலா பட டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது

காலா பட டப்பிங் பணிகள் இன்று பூஜையுடன் தொடங்கியது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaala dubbingகபாலி திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டாரும் – பா.ரஞ்சித்தும் இணையும் படம் காலா என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

இப்படத்தை தனுஷ் மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் சூட்டிங் முற்று பெற்ற நிலையில், போஸ்ட் புரொடக்ஷ்ன் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டப்பிங் இன்று சென்னையில் உள்ள KNACK ஸ்டூடியோவில் தொடங்கியது.

இன்று நடைபெற்ற பூஜையில் படக்குழுவினருடன் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்களும் கலந்து கொண்டார். காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர்கள்:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மிகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், சுதன்ஷூ பாண்டே, அரவிந்த் ஆகாஷ், ‘வத்திகுச்சி’ திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்கேயர், ராஜ் மதன், சுகன்யா.

சன்னி லியோனுடன் செல்ஃபி; இணையத்தை அதிரவைக்கும் ரசிகர்கள்

சன்னி லியோனுடன் செல்ஃபி; இணையத்தை அதிரவைக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sunny leone in tamilகவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த சன்னி லியோன் முதன் முறையாக வரலாற்று பின்னணி கொண்ட, தென்னிந்திய மொழிகளில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியிலும், திரைத்துறையினர் மத்திலும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த படத்தின் தலைப்பை யூகித்து சரியாக சொல்லும் ரசிகர்கள் பட பூஜை அன்று சன்னி லியோனுடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என்ற செய்தியும் இணையதளங்களில் பரவி மிகுந்த பரபரப்பை உண்டு பண்ணியது.

இதனை தொடர்ந்து Sunny Leone in South என்ற ஹேஷ்டேக் நேற்று இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. லட்சக்கணக்கான ரசிகர்கள் தலைப்பை யூகித்து சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் படத்தின் தலைப்பு இன்று மாலை வெளியாக இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.

வேலைக்காரன் மாபெரும் வெற்றியால் மோகன்ராஜா மகிழ்ச்சி

வேலைக்காரன் மாபெரும் வெற்றியால் மோகன்ராஜா மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan and mohan rajaசிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில், மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று ரிலீசான படம் ‘வேலைக்காரன்’. இப்படம் திரை இடப்பட்ட எல்லா இடங்களிலும் அமோக வரவேற்பை பெற்றுவருகிறது.

ரிலீசான முதல் நான்கு நாட்களில், சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களில் வசூலை இந்தப்படம் முறியடித்துள்ளது. இந்த செய்தி வணிக தரப்பினராலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாபெரும் வெற்றியை சுவைத்துக்கொண்டிருக்கும் இயக்குனர் மோகன் ராஜா கூறும்போது, ”நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய ஆதரவும் வரவேற்பும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு கிடைத்துள்ளது.

கர்நாடகாவில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே இந்த படத்திற்கு தான் மிகப்பெரிய வசூல் கிடைத்துள்ளது. படத்தின் அமோக வரவேற்பினால் இப்படத்திற்கு கேரளாவில் முப்பது ஸ்க்ரீன்கள் கூடுதலாக தரப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலும் ‘வேலைக்காரன்’ படத்திற்கு பேராதரவு கிடைத்து வணிக அளவில் மிக பலமாக வலம் வந்துக் கொண்டு இருக்கிறது.

சமுதாய அக்கறை கொண்ட நல்ல படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என்பது மறுபடியும் இப்படம் மூலம் நிரூபணமாகியுள்ளது.

குடும்பங்களோடு திரையரங்கத்திற்கு மக்கள் வந்து இப்படத்தை ரசிப்பது எங்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு சமுதாய அக்கறை உள்ள கதையை ஜனரஞ்சகமான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்ந்ததில் எனக்கு பெரும் திருப்தி’ என்றார்.

ரஜினியிடம் வியூகம் உள்ளது; ரசிகர்களிடம் வீரம் உள்ளது : ஜீவா

ரஜினியிடம் வியூகம் உள்ளது; ரசிகர்களிடம் வீரம் உள்ளது : ஜீவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

lollu sabha jeeva and rajinikanthவருகிற டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என ரஜினிகாந்த் இன்றைய ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

அரசியல் என்ற யுத்த களத்திற்கு வருவதற்கு வீரத்தை விட வியூகம் முக்கியம். அப்போதுதான் களத்தில் ஜெயிக்க முடியும் என்று பேசினார்.

இதுகுறித்து ரஜினியின் தீவிர ரசிகரான லொள்ளு சபா ஜீவா கூறியதாவது…

ரஜினி ரசிகர்களிடம் வீரம் உள்ளது. தலைவர் ரஜினியிடம் வியூகம் உள்ளது.

தூய்மையான அரசியலே ரஜினியின் நிலைப்பாடு, அதற்காகவே அவர் காலம் தாழ்த்தி வந்தார். விரைவில் அரசியல் களம் வருவார்” என்றார் ஜீவா

டிச-31ல் ஹாப்பி நியூ இயர் வாழ்த்து சொல்வார் ரஜினி.. : எஸ்வி.சேகர்

டிச-31ல் ஹாப்பி நியூ இயர் வாழ்த்து சொல்வார் ரஜினி.. : எஸ்வி.சேகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth and SVE Shekherவருகிற டிசம்பர் 31ஆம் தேதி தன் அரசியல் நிலைப்பாடு குறித்து அறிவிப்பேன் என ரஜினிகாந்த் இன்றைய ரசிகர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கடந்த 20 வருட காலமாக அலசி ஆராயப்பட்ட ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு அன்றைய தினம் ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் பேச்சு குறித்து நடிகரும் ரஜினியின் நண்பருமான எஸ்வி. சேகர் கூறியுள்ளதாவது…

கரைக்கு வரும் அலை பின்பு திரும்பி போய்விடும். புலி வருது புலி வருது கதையாக ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி பேசுகிறோம்.

வருவதாக சொல்லிவிட்டு ஒருவேளை அவர் வராமல் போய்விட்டால், அவருடை இமேஜ் கடுமையாக பாதிக்கப்படும்.

டிசம்பர் 31ல் ரஜினி ஹாப்பி நியூ இயர் வாழ்த்து நிச்சயம் சொல்வார்.

அவர் அரசியலுக்கு வருவாரா? என்பது உலகத்தின் மிகப்பெரிய சூதாட்ட கேள்வியாக உள்ளது.”என்று தெரிவித்தார் எஸ்.வி.சேகர்.

More Articles
Follows