தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த சில தினங்களாகவே தமிழக அரசியல் உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் வார்த்தை.. ரஜினியின் அரசியல் புரட்சி.
மக்களிடையே அரசியல் எழுச்சி.. அரசியல் மாற்றம் எண்ணம் உருவாக வேண்டும் என ரஜினி பேசினார். அப்போது தான் அரசியலுக்கு வருவேன் என சொன்னார்.
மேலும் அண்மையில் நடைபெற்ற சாணக்கியா விழாவில்.. புள்ளி வைத்தேன்.. சுழல் ஆரம்பித்து விட்டது. அலை உருவாக நான் வருவேன். தேர்தல் நேரத்தில் அரசியல் சுனாமி வரும என தெரிவித்திருந்தார்.
இதனால் ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தினர் பொதுமக்களிடையே அரசியல் எழுச்சிக்கான தங்கள் வேலைகளை துவங்கியுள்ளனர்.
ஆட்சி மாற்றம்.. இப்போ இல்லனா எப்பவுமே இல்ல என வாசகங்களை கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது அரசியல் பணிணை ஒதுக்கி வைக்க ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மக்களிடம் அரசியல் குறித்த விழிப்புணர்வை நிறுத்திவிட்டு, கூட்டம் சேர்க்காமல் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.







